Friday 10 June 2016

மாத்தி யோசி

கோபமூட்டும் குழந்தைகளை சமாளிக்கும் 'மாத்தி யோசி' டெக்னிக் இப்படிதான்!



" நாம செய்யாதன்னா அதைதான் செய்வாங்க‌ . இதை செய்ன்னு சொன்னா செய்யமாட்டாங்க‌. இதே வேலையா போச்சு..." ன்னு அலுத்துக்குற மம்மி டாடீஸ்... இதோ இனிமே மாத்தி யோச்சிச்சு குழந்தைகளை டீல் பண்ற‌ டெக்னிக் வந்தாச்சு...! 

சூழ்நிலை 1

ரெண்டு குழந்தைங்க இருந்தா வீடே ஹரி படம் மாதிரி சண்டை, அடிதடி எல்லாம் நடக்கும். 
இப்போ அப்படி ரெண்டு குழந்தைங்க கார்ல போகும் போது சண்டை போட்டால்...? 

சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :  

" என்னங்க இவனுங்க ரெண்டு பேரும் ஜாக்கிச்சான் மருமகனுங்க மாதிரி சண்டைப் போட்டுட்டே இருக்கானுங்க . ஒரு ஓரமா வண்டிய நிறுத்துங்க. இவனுங்கள இறக்கி விட்டுட்டு நாம போவோம்."  


மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 


" பசங்களா... கார ஓரமா அப்பாவ நிறுத்தச் சொல்லுறேன். நீங்க எப்போ அமைதியா ஒத்துமையா இருக்கீங்களோ... அப்போ நாம கிளம்பலாம்." 

இதை ஊர் போற வரைக்கும் சொல்லிட்டே இருக்காதீங்க. பசங்க,  காமெடி பண்றோம்ன்னு நினைச்சுப்பாங்க. ஒரு தடவை மட்டும் முயற்சி பண்ணிப் பாருங்க . அடுத்த டோல்கேட் வரும்போது 'வானத்தைபோல' பிரதர்ஸ் மாதிரி மாறிடுவாங்க .
சூழ்நிலை 2 

குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் வாங்கும் போது...


சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி:    

" உனக்கு கணக்கு வராதா.... இல்ல தெரியாம கேக்குறேன், உனக்கு கணக்கு வராதா... ? நானெல்லாம் அந்த காலத்துல டியூஷன் இல்லாம 100 க்கு 100 வாங்குவேன் .உனக்கு என்ன குறை ?"  


மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 

" நீ மத்த எல்லா சப்ஜெக்ட்லயும் நல்ல மார்க் வாங்குற . கணக்குலேயும்  நீ முயற்சி பண்ணா வாங்க முடியும்.  உனக்கு ஏன் கஷ்டமா இருக்கு ? என்ன பண்ணா உன்னால நல்ல மார்க் வாங்க முடியும்ன்னு சொல்லும்மா ...!"

இப்படி கேளுங்க . 


சூழ்நிலை  3 

குழந்தை சாப்பிடும் போது கீழே போடும், சில நேரத்துல நம்மக்கு வெச்ச குழம்பையும் கொட்டும். 


சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :   

" கொட்டிட்டியா... ? கொஞ்சம் நேரம் நான் உக்காந்தா உனக்கு பொறுக்காதே . உங்க அப்பா மாதிரியே எனக்கு ஏதாவது வேலை வைக்கணும் . உனக்கு சிந்துன்னு பேர் வெச்சேன். சதா சிந்திட்டே இருக்க. போ... துணி எடுத்துட்டு வா . என்ன பண்ணுறது எல்லாம் என் தலை எழுத்து ...!" 

மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 

" ஆஹா .. சரி பரவாயில்ல...உன் மேல ஒண்ணும் எதுவும் கொட்டிடலேயே...? அம்மாக்கு கொஞ்சம் அந்த துணி எடுத்துட்டு வர்றியா... நான் துடைச்சிடுறேன்...!"

- இப்படி சொல்லுங்க எந்த குழந்தையா இருந்தாலும் அடுத்த தடவ சிந்தாம இருக்கணும்னு நினைக்கும்.


சூழ்நிலை  4 

குழந்தைங்க, பெத்தவங்கள எதிர்த்து பேசும் போது...

சாதாரணமாக யோசிக்கும் மம்மி டாடி :  

"என்ன தைரியம் இருந்தா என்ன எதிர்த்து பேசுவ...?" - இப்படி சொல்லி அடிக்க கையை ஓங்குவது. 

" அய்யயோ... என்ன எதிர்த்து பேசிட்டான்" னு ஊரையே கூப்பிடறது. 

"என்ன எதிர்த்து பேசிட்டல்ல... இனிமே என்கூட பேசாத...!" -  இப்படி சொல்லுறது எல்லாமே தப்பு .

மாத்தி யோசிக்கும் மம்மி டாடி : 

" நீ என்கிட்ட என்ன சொன்னாலும் அது சரியான விஷயமா இருந்தா மம்மி செய்வேன் . அதுவும் என்கிட்ட அமைதியா ஆசையா சொன்னா மட்டும்தான் .சத்தம் போட்டு , மிரட்டி பேசுனா எதையும் செய்யமாட்டேன்..."
இதை நீங்க குழந்தைங்ககிட்ட சொல்லும் போது சமுதாயத்துல குரலை உயர்த்தி பேசக்கூடாதுன்னு உணருவான் .                                                                                                                                                                               - கி.சிந்தூரி

நன்றி  -  விகடன் 

No comments:

Post a Comment