Wednesday 29 February 2012

MIDWEEK INSPIRATION

The DNA of Top Achievers!





A predisposition to setting high, lofty goals. Top achievers are people who won't and can't settle for the status quo. They see average as a place they want to keep in the rear-view mirror. Instead, they continually look for ways to stretch themselves, to get better, to do better, to be better! They set their sights on goals that others have never even thought of. They want to shoot so high that even if they miss, they go higher than everyone else. This is what makes them top achievers.

An ability to focus intently upon reaching their desired destination. Many people can set high goals, but just as many people get sidetracked by one thing or another on their way to those goals. High, lofty goals usually take a while to get there so there will always be plenty of time to be tempted to stray away from the road that is taking you to those goals. Often, those things that sidetrack people are good things, but not the best things. Top achievers do not get sidetracked. They stay focused. They know where they are going. They have an ability to say "no" to the good things in order to get to the best things.

The willingness to personally sacrifice in order to get to their goal. When the going gets tough, many people quit. When the going get tough personally, most people quit. When the going gets tough for top achievers, they remind themselves of the high. lofty goals they have set for themselves. They remind themselves of what an accomplishment it will be for them and that the reward is worth pushing through the momentary trials. They are willing to sacrifice personally in the short-term in order to get the reward and the prize long-term. Keeping their eyes on the big picture enables them to persevere through any personal pain they may experience.

A predisposition to tenacity. Tenacity is the ability to "keep on going." Tough times? Keep on going! Financial troubles? Keep on going! People are suspect? Keep on going! You look like a dreamer? Keep on going! Tired? Keep on going! Want to quit and take it easy? Keep on going! Just remember this: Keep on going! The prize is ahead! Many people quit just before they were to get the reward, so keep on going!

The ability to see available resources and to use them accordingly. Those who are top achievers know that they cannot be lone-rangers on the way to the top. No one makes it by himself or herself. Top achievers recognize their weaknesses - the weaknesses that if they don't cover will keep them from becoming a top achiever! They see their resources and they work to get them into a helping position so they can continue the route to becoming a top achiever. And they don't use them, they utilize them. There is a big difference! People, finances, etc are all brought in to help by the top achiever.

A desire to help others achieve more for themselves as well. The top achiever knows that they can make a difference for others by becoming a top achiever. They know that the wealth they make can feed the hungry. They know that the position of influence they achieve can open a door for someone who may not normally get a chance. True top achievers look at how they can bring many with them, not how they can leave many in the dust. People are helped by the top achiever, not trampled upon!

இசை ஞானம் - 2

இசை ஞானத்தைப் பத்தி எழத யோக்கித இருக்கான்னு
யோசிச்சப்ப நெறைய இருக்குங்கறத அடக்கத்தோட
சொல்லிக்கிட்டு ஆரம்பிக்கிறேன்...

சின்னவயசுல ஸ்கூல்ல பாட்டு பாடியிருக்கிறேன்..
இல்ல..இல்ல.. பாட்டு பேசியிருக்கேன்..!
கிலுகிலுப்பை, ஊதல், விசில், கொட்டாங்கச்சி வயலின், மவுத் ஆர்கன், புல் புல் தாரா
போன்ற இசை கருவிகளை கையாண்டிருக்கேன்..

BHEL ல்ல டிரைனீயா சேந்தப்ப எங்களுக்கு இசை ஞானத்த
ஊட்டுனும்ன்னு ரெண்டு நாள் கிளாஸ் " music appreciation " ங்கிற
பேர்ல நடத்துனாங்க.. திருச்சி ஆல் இந்தியா ரேடியோவிலிருந்து
இசை கலைஞர்கள் வந்து எப்படி இசையை ரசிக்கனும்ன்னு சொல்லி குடுக்க முயற்ச்சித்தாங்க..!
கேள்வி பதில் session ல்ல ஒரு பாடகர்கிட்ட " நீங்க பாடும்போது ஏன் கையை பல கோணத்துல ஆட்டுறீங்க? மூஞ்சியை அஷ்டகோணலா ஆக்கி பயமுறுத்துறீங்க ? " - இப்படில்லாம் கேட்டு எங்க சந்தேகங்களை எல்லாம் போக்கிக்கிட்டு இசை தாகத்தை வளத்துக்கிட்டோம்!
எங்க இசை தாகத்தைத் தீத்துக்க சரஸ்வதி வித்யாலயாகிடைச்சது..அங்கவாய்ப்பாட்டு ,வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல்எனஎல்லாம்சொல்லிக்கொடுத்தாங்க... வீணை
மற்றும் வாய்ப்பாட்டு வகுப்புகள்ல வயசு பொண்ணுங்க நெறைய இருந்ததால நாங்க அஞ்சுபேரு அந்த வகுப்புகள்ல சேந்தோம்..
நான், டேனியல், சண்முகம், சௌந்தரராஜன்&எத்திராஜுலு அஞ்சுபேரும் பாட்டுவாத்தியாரை ஒருவழி பண்ணிட்டோம்..
ஸா...பா..ஸாவை நாங்க அஞ்சுபேரும் ஒவ்வொருமாதிரி சொல்லுவோம்...வாத்தியாருக்கு சுருதி சேக்கவே முடியல...
சௌந்தரரஜனைத் தவிர நாங்க சுதிசேந்தோம்..சவுண்டிக்கு மாத்திரம் 'ஸா' சரியாவரல..கடைசியில வாத்தியார் அவன்கிட்ட
" உனக்குசாவேவராது " ன்னு வாழ்த்தி அனுப்பிவச்சாரு...நாங்களும் தினமும் சாதகம் பண்ணி தாளம் போட ஆரம்பிச்சோம்.
எங்க தப்புதாளத்தைப் பாத்து பொண்ணுங்க சிரிச்சதுனாலே நானும், டேனியலும் வாய்ப்பாட்டுக்கு முழுக்கு போட்டோம்.
வீணை கொஞ்சம் ஈசியா இருந்துச்சி..ஆனா
ட்ரைனிங் பீரியட் முடிஞ்சு திருச்சிக்கு வந்துட்டதாலே
வீணையை ஒழுங்கா கத்துக்கல..

அப்பப்ப வீட்ல சினிமா பாட்டு பாடுவேன்..
உடனே மாலா வீட்டுக்கு வெளியே ஓடிவந்து
பக்கத்து வீட்டு லேடிகிட்ட
" நா ஒண்ணும் JP ஐஅடிக்கல..
அவரு அழல..பாட்டுபாடறாரு " - அப்டீன்னு சொல்லி
சொல்லி என்னை ஒரு வழி பண்ணிட்டா!

இசை உலகம் ஒரு இசைஞானியை இழந்துவிட்டது!





Tuesday 28 February 2012

இசை ஞானம் -1







Today there was a nation wide strike that paralysed BHEL operations also. I went to office around 5-30AM and returned just now ( 6 PM ). I was thinking of posting my இசை ஞானம் ...hope I'll do it tomorrow.














Time being enjoy the photos of Mala & Sri..!

Monday 27 February 2012

கேள்வி ஞானம்

ஞான வயல்ன்னு பேர வச்சுட்டு ஒரு ஞானமும் இதுல காணும்ன்னு
கம்ப்ளைன்ட் நெறையா வந்துடுச்சு..
எனவே கேள்வி ஞானம் அப்படீங்கரதப் பத்தி கொஞ்சம் பாக்கலாம்...

நா எப்ப கிளாஸ் எடுத்தாலும் partcipants ஐ கேள்வி கேக்க தூண்டுவேன்..
முதல்ல எல்லாரும் தயங்குவாங்க..
நா மறுபடியும் அவங்க கிட்ட சொல்லுவேன் -
"ஒரு விஷயம் தெரியல, புரியல ன்னா கேள்வி கேட்டாதான் விளக்கம் கிடைக்கும்..
அதனாலே உங்க சந்தேகங்கள கூச்சப் படாம கேளுங்க "
அப்பவும் கேள்வி வராது..
" ஒரு விஷயத்தை சரியா தெரிஞ்சிக்காதவன் முட்டாள். அப்ப வாழ்நாள் முழுக்க முட்டாளாகவே
இருக்கப் போறீங்களா? " - இப்படி கேட்டதும்தான் கேள்விகள் வரத் துவங்கும்.
அப்புறம் அவங்களுக்கு சூரியன் FM ரேடியோ ஸ்லோகனை ஞாபகப்படுத்துவேன் -
" கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க " - இதை சொல்லிட்டு விளக்கம் கொடுப்பேன்.
முதல் "கேளுங்க" வுக்கு அர்த்தம் - நா சொல்றத காது கொடுத்து கவனமா கேளுங்க
அடுத்த " கேளுங்க" வுக்கு அர்த்தம் நா சொன்னதுல உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள கேளுங்க..
"கேட்டுகிட்டே இருங்க" ன்னா உங்களுக்கு எது தேவையோ அதை கேட்டுகிட்டே இருங்க...
கேட்டாதான் கிடைக்கும்.." - இப்படி சொன்னப்பறம் கேள்விகளா கொட்டும்!

அப்புறம் கேள்வி ஞானத்துக்குன்னு சில சினிமா பாட்டுகள் இருக்கு..அதையும் சொல்லி அவங்கள நல்லா தயார் பண்ணுவேன்...!

ஏன் என்ற கேள்வி -இங்கு
கேட்காமல் யாரும் இல்லை
நான் என்ற எண்ணம் -
கொண்டமனிதன் வாழ்ந்ததில்லை
முன்னேற்றம் என்பதெல்லாம்
கேள்விகள் கேட்பதினாலே!
உரிமைகளைப் பெறுவதெல்லாம்
புரட்சிகள் எழுவதினாலே!


கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?


என் கேள்விக்கென்ன பதில்?
உன் பார்வைக்கென்ன பொருள்?


கேள்வி பிறந்தது அன்று --
நல்லபதில் கிடைத்தது இன்று
ஞானம் பிறந்தது அன்று --
யாவும் நடந்தது இன்று.


கடைசியா ஒண்ணு -
குண்டக்க மண்டக்க மற்றும் ஏடாகூடமா கேள்வி கேக்கறவங்கள
சமாளிக்கவும் தெரிஞ்சு வச்சுருக்கணும்!!




MALA at her chamber

மாலாவுக்கு போனவாரம் டைட் schedule -

19-2-2012 ஞாயிறு -அறந்தாங்கி, மீமிசல்&மணமேல்குடி கடற்கரைபகுதிகள் – இங்கேதான் மாணிக்கவாசகர் கட்டிய ஆவுடையார் கோவில் இருக்கு

20-2-2012 திங்கள் - பெரம்பலூர்- கிராமசேவைத்திட்டத்திற்கு planning மீட்டிங் - ஏப்ரல் 5 ம்தேதி துவக்கவிழா

21,22-2-2012 செவ்வாய் ,புதன் - திருச்செங்கோடு வித்யாவிகாஸ் 1000 பள்ளி மாணவிகளுக்கு வகுப்புகள்

23,24, 25-2-2012 வியாழன் வெள்ளி&சனி - BHEL அறிவுத்திருகோவிலில் பள்ளிஆசிரியர்களுக்கு வகுப்பு

Sunday 26 February 2012

மயில் ஆடும் துறை


மயில் ஆடும் துறை









சின்ன வயசுல வயசுல மாயரம் கோயிலுக்கு போறப்பெல்லாம் பிரஹார சொவத்துல

படம் வரஞ்சுருக்கரத பாக்கறது வழக்கம். ஒரு தடவ இந்த படங்களப் பாத்துகிட்டு இருக்கும்போது எல்லாரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க..கோயில்ல நா காணாமப் போயிட்டேன்..அப்புறம் ஒருவழியா என்னை கண்டுபுடிச்சு கொண்டாந்துட்டாங்க..

இந்த ஊருக்கு தமிழ்ல மயிலாடும்துறை ன்னு பேருங்கறது அந்த படங்கள்ளேருந்து தெரிஞ்சிக்கிட்டேன்.ஆனா கோயில்ல மயில் இல்ல.. ரொம்பநாளைக்கு அப்புறம் கோயிலுக்கு ஒரு மயில் வந்துச்சு.. எப்ப பாத்தாலும் தூங்கிகிட்டே இருக்கும்.. கொஞ்ச நாள்ல துவும் காணாமப் போயிடுச்சு..பொறவுதான் யானை வந்துச்சு..

மயில எனக்கு ரொம்ப புடிக்கும்..இங்க BHEL ல்ல நெறைய மயில்கள் மேயும்..தெனம் வீட்டுக்கு வந்து மாலாவோட இட்லி, சாதம், பொட்டுகடல எல்லாம் சாப்பிட்டு போகும்.. ஒவ்வொரு winter லயும் மயில் தன் தோகையை மூக்கால பிச்சு போட்டுடும்..தோட்டத்துல அங்கங்க தோகை கிடக்கும். அத பொறுக்க குட்டி பசங்க நெறைய வருவாங்க அடுத்த ரெண்டு, மூணு மாசத்துல மறுபடியும் தோகை மூணு, நாலு அடி வளர்ந்துடும்..

மயிலுக்கு mood வந்தாதான் டான்ஸ் ஆடும்..ஒரு தடவ விராலிமலை கோயில்ல ஒரு மயில் ரொம்ப நேரம் எங்களுக்காகவே டான்ஸ்.. ஆடி காட்டுச்சு !!

யானை மாதிரி மயிலும் பாக்க பாக்க ஆசையா இருக்கும்... பொழுது நல்லா போகும்.. இதுபோல இன்னொரு animal குரங்கு!

மயிலுக்கும் ஞானத்துக்கும் நெறைய link இருக்கு..

முருகனோட வாகனம் மயில்!

கிருஷ்ணர் கிரீடத்துல மயிற்பீலி!

மயிலப் பத்தி பாடாத புலவர்கள், கவிஞர்கள் இல்லன்னு நினைக்குறேன். இதப் பத்தி எழுதுனும்னா தனியா ஒரு book போடலாம்.

என் பேரு initials ( SJP ), Mala & Sri எழுத்துக்கள வச்சு நான் create பண்ணுன மயில் logo ரொம்ப பிரபலம்.

இங்கே attach பண்ணியிருக்கேன்.

ரொம்ப நா கழிச்சு மாலாவோட இட்லி சாப்ட மயில் வந்ததால

இன்னிக்கு மயிலப் பத்தி எழுதும்படி ஆயிடுச்சு..!

மயில பாக்குற இடங்கள்லாம் எனக்கு மயில் ஆடும் துறைதான்..!