Tuesday, 22 September 2026

MEMES OF THE DAY ( 22-09-2026 )











 

இறைவனுக்கும் மனிதனுக்கும்......

 




இறைவனுக்கும் மனிதனுக்கும் நடந்த சிறு உரையாடல்"*_

_நான் இழந்ததையெல்லாம் திருப்பித்தா எனக் மனிதன் கேட்டேன்...எதையெல்லாம் இழந்தாய் என இறைவன் கேட்டான்....?_

_*பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றான்...!பரவாயில்லை சொல் என்றான் இறைவன்..!*_

_கால மாற்றத்தால் இளமையை இழந்தேன்....!கோலம் மாறி அழகையும் இழந்தேன்...!_

_*வயது ஆக ஆக உடல்நலம் இழந்தேன்....!எதையெல்லாம் இழந்தேனோ, அதையெல்லாம் திருப்பித்தா என்றான் மனிதன்..!அழகாக சிறித்தான் இறைவன்...!*_

_கல்வி கற்றதனால் அறியாமையை இழந்தாய்....உழைப்பின் பலனாய் வறுமையை இழந்தாய்...._

_*உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்....நல்ல பண்புகளால் எதிரியை இழந்தாய்....*_

_இதுபோல் சொல்வதற்கு இன்னும் பல உண்டு. அனைத்தையும் திருப்பித்தரவா என்றான் இறைவன்....!_

_*திகைத்தேன் இழைப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்....! "வாழ்கை பயணத்தில் இழப்பதும் நன்மைக்குத்தான்"*_

_இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்....!இறைவனும் புன்னகையோடு மறைந்தான்......._



ஆதர்ஷ தம்பதியர்

 மனைவிக்கு கணவர் மேல் கோபம் வரலாம். ஆனால் வெறுப்பு.... கூடாது.

பலர் பார்க்க ஆதர்ஷ தம்பதியர் போல் தெரிந்தாலும், கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தாலோ அல்லது புலம்பலை கேட்க ஆரம்பித்தாலோ நம் தலையே கிறுகிறுக்க ஆரம்பித்து விடும்.

வாழ்க்கை பற்றி சரியான புரிதல் இல்லாதத காரணத்தால், அவ்வளவு வெறுப்பு, ஒருவர் மேல் இன்னொருவருக்கு. இது கணவன், மனைவி இருவருக்கும் பொருந்தும்.

மாற்றிக் கொள்ள இயலாதவற்றை அப்படியே அனுசரித்து கொள்ளலாம். மாற்றிக்கொள்ளக் கூடியதை மாற்றிக் கொண்டு சந்தோஷமாக வாழலாம்:))


வெறுப்புக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்தாலும், முக்கியமான 7 மட்டும்.

1] குறை சொல்வது.

  • நடை, உடை, பாவனையை குறை சொல்வது.
  • குடும்பத்தினர் நிச்சயித்த திருமணமோ, காதல் திருமணமோ... "பாத்துப்பாத்து தானே கல்யாணம் செஞ்சீங்க, இப்ப என்ன புதுசா?" என்ற வெறுப்பு. சமையலில் குறையெல்லாம் இப்போது யாரும் சொல்வதில்லை, குக் வித் கோமாளியை பார்த்து மிரண்டு போயிட்டாங்க.

2] திட்டுவது.

  • கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டுவது. அதைவிட நக்கலாக/கேலியாக பேசுவது இன்னும் வெறுப்பை வளர்க்கும்.

3] பொய் சொல்வது, ஏமாற்றுவது.

  • ஒரு முறை நம்பிக்கை இழந்து விட்டால், கடவுளே வந்து சாட்சி சொன்னாலும்... ம்ஹூம், சான்ஸே இல்ல.

4] மற்ற பெண்களை பார்ப்பது.

  • மனைவி அருகில் இருக்கும் போதே மற்ற பெண்களை ஆ.... வென முழிச்சு முழிச்சு பார்த்தால், பார்வதியே ஆனாலும் படியளக்கும் பரமசிவன் கதி… அதோகதி தான்.

5] சுயமாக எந்த முயற்சியும், முடிவும் எடுக்காதது.

  • எல்லா விஷயங்களிலும் தன் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என்று யாராவது சொல்வதை கேட்பது. குறிப்பாக வாழ்க்கை துணையின் ஆலோசனைகளை உதாசீனப்படுத்துவது.

6] ஊர் சுற்றல்.

  • சம்பாதிக்காமல், வேலையில்லாமல் ஊர் சுற்றினாலும் சரி, சம்பாதிக்க ஊர்ஊராக சுற்றுவதே வேலையாக இருந்தாலும் சரி ஒரு கட்டத்தில் வெறுப்பு வர வாய்ப்புள்ளது.

7] சுகாதாரம்.

  • அடிப்படை உடல் சுகாதாரம், உடை, பழக்க வழக்கம், உணவு. இதைப்பத்தி தனியா நான் சொல்லனுமா?
  • இப்படி பூச்சாண்டி மாதிரி ஏதாவது செஞ்சிட்டு, "அவ என்னைய லவ் பண்றாளா, இல்லையான்னு இப்பவே தெரிஞ்சாகணும்"ன்னு மிரட்டக் கூடாது. 😃

ஆரம்பத்திலேயே மனவருத்தத்தை சரி செய்தல் வேண்டும். வெறுப்பு என்னும் சிறுவிதை துளிர் விட ஆரம்பிக்கும் போதே கிள்ளி எளிய வேண்டும்.

மரமாக வளர்த்து.... சேதாரம் அதிகமாக விடக்கூடாது

முன்னோர்கள் எப்படி பட்ட புத்திசாலிகள்

 


27 தமிழ் நட்சத்திரப் பெயர்களின் வடிவ மற்றும் இலக்கிய ரீதியான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நம் முன்னோர்கள் விண்ணில் உள்ள விண்மீன் கூட்டங்கள் (Constellations) காட்சி அளித்த வடிவத்தை அடிப்படையாகக் கொண்டே இப்பெயர்களைச் சூட்டியுள்ளனர்:

1 முதல் 10 வரையிலான நட்சத்திர விளக்கங்கள்

* 01. புரவி (அசுவினி): 'புரவி' என்றால் குதிரை என்று பொருள். விண்ணில் இக்குதிரையின் தலை வடிவத்தைக் கொண்ட விண்மீன் கூட்டம் இதுவாகும்.

* 02. அடுப்பகம் (பரணி): 'அடுப்பு' அல்லது முக்கோண வடிவில் உள்ள அடுப்புக் கூட்டி வைக்கும் இடம் என்று பொருள். மூன்று விண்மீன்கள் அடுப்புக் கல் போல அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

* 03. ஆரல் (கார்த்திகை): 'ஆரல்' என்பது ஒரு வகை நெருப்பு மீன் அல்லது கூர்மையான ஆயுதம் (கத்தி). இந்த விண்மீன் கூட்டம் பார்ப்பதற்கு நெருப்புப் பொறி போலவோ அல்லது கத்தியின் முனை போலவோ பிரகாசமாக இருக்கும்.

* 04. சகடு (உரோகினி): 'சகடு' என்றால் வண்டி அல்லது தேர் என்று பொருள். மாட்டு வண்டியின் பின் பகுதி போன்ற முக்கோண அமைப்பில் இவ்விண்மீன்கள் தோற்றமளிக்கும்.

* 05. மான்றலை (மிருகசீரிடம்): 'மான் தலை' என்பதன் மருவே இது. விண்ணில் மானின் தலை போன்ற வடிவத்தை உருவாக்குவதால் இப்பெயர் பெற்றது.

* 06. மூதிரை (திருவாதிரை): 'முதிர்ந்த ஈரம்' அல்லது 'பெரிய துளி' என்று பொருள்படும். இது விண்வெளியில் சிவந்து காணப்படும் ஒரு பிரம்மாண்ட விண்மீன் (Betelgeuse) ஆகும்.

* 07. கழை (புனர்பூசம்): 'கழை' என்றால் மூங்கில் அல்லது வில்லின் தண்டு என்று பொருள். நேராக வளர்ந்த மூங்கில் போன்ற அமைப்பைக் குறிக்கும்.

* 08. கொடிற்று (பூசம்): 'கொடிற்று' என்றால் நண்டின் கொடுக்கு அல்லது வளைந்த தாடை என்று பொருள். நண்டு வடிவ விண்மீன் கூட்டத்தின் (Cancer) மையப்பகுதியில் இது அமைகிறது.

* 09. அரவு (ஆயில்யம்): 'அரவு' என்றால் பாம்பு என்று பொருள். விண்ணில் நாகப் பாம்பு வளைந்து நெளிந்து படுத்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

* 10. கொடுநுகம் (மகம்): 'கொடு நுகம்' என்பது வளைந்த ஏர் பூட்டும் நுகத்தடி அல்லது சிம்மத்தின் பிடரி போன்ற வடிவத்தைக் குறிக்கும்.

11 முதல் 20 வரையிலான நட்சத்திர விளக்கங்கள்

* 11. கணை (பூரம்): 'கணை' என்றால் அம்பு என்று பொருள். நேராகப் பாயும் அம்பின் வடிவத்தைக் குறிப்பது.

* 12. உத்தரம் (உத்தரம்): 'உத்தரம்' என்றால் மேல்நிலை அல்லது படுக்கைக்கட்டிலின் கால் பகுதி என்று பொருள்படும் (கட்டிலின் வடிவமாகப் பூரமும் உத்தரமும் பார்க்கப்படும்).

* 13. கை (அத்தம்): மனிதனின் உள்ளங்கை அல்லது ஐந்து விரல்களை விரித்து வைத்தது போன்ற வடிவத்தில் ஐந்து விண்மீன்கள் அமைந்திருக்கும்.

* 14. அறுவை (சித்திரை): 'அறுவை' என்றால் ஆடை அல்லது பிரகாசமான துணி என்று பொருள். விண்ணில் தனியாகத் தறித்துத் தொங்கும் ஒளிவீசும் ஆடை போலத் தோன்றும்.

* 15. விளக்கு (சுவாதி): இருளில் ஏற்றி வைக்கப்பட்ட ஒற்றைச் சுடர் விளக்கு போலத் தனித்து, மிக அதிக ஒளியுடன் பிரகாசிக்கும் விண்மீன்.

* 16. சுளகு (விசாகம்): 'சுளகு' என்றால் தானியம் புடைக்கும் முறம் என்று பொருள். முறத்தின் அகன்ற வடிவத்தைப் பெற்றுள்ள விண்மீன் கூட்டம்.

* 17. பனை (அனுடம்): 'பனை' என்றால் பனை மரம் என்று பொருள். நேராக உயர்ந்து நிற்கும் பனை மரத்தின் வடிவ அமைப்பைக் கொண்டது.

* 18. துலாங்கோலி (கேட்டை): 'துலாம்' (தராசு) மற்றும் தேளின் கொடுக்கு ஆகியவற்றைக் குறிக்கும் சொல். தேளின் வளைந்த வால் பகுதியில் உள்ள நச்சு முள் போன்ற வடிவம்.

* 19. குருகு (மூலம்): 'குருகு' என்றால் பறவை (குறிப்பாக நாரை அல்லது கொக்கு) அல்லது மரத்தின் வேர்ப்பகுதி என்று பொருள்.

* 20. முற்குளம் (பூராடம்): 'முன்னுள்ள குளம்' அல்லது கட்டிலின் முன் பகுதி வடிவத்தைக் குறிக்கும் விண்மீன் தொகுதி.

21 முதல் 27 வரையிலான நட்சத்திர விளக்கங்கள்

* 21. கடைக்குளம் (உத்திராடம்): 'பின்னியுள்ள குளம்' அல்லது நீர் நிலையின் இறுதிப் பகுதி போன்ற வடிவ அமைப்பு.

* 22. முகைகோல் (திருவோணம்): 'அம்பின் முனை' அல்லது முக்கூர் வடிவம் கொண்ட கோல் என்று பொருள். விண்ணில் மூன்று விண்மீன்கள் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும்.

* 23. காக்கை (அவிட்டம்): காகம் அமர்ந்திருப்பது போன்ற வடிவத்தையோ அல்லது முரசு கொட்டும் கருவியின் வடிவத்தையோ குறிக்கும்.

* 24. செக்கு (சதயம்): வட்ட வடிவமான எண்ணெய் ஆட்டும் செக்கு போன்ற அமைப்பில், பல சிறிய விண்மீன்கள் வட்டமாகச் சூழ்ந்திருக்கும்.

* 25. முரசு (பூரட்டாதி): தமிழர்களின் போர்க் கருவியான முரசு (Drum) போன்ற சதுர அல்லது உருளை வடிவ அமைப்பின் முன்பகுதி.

* 26. முரசுக்கட்டில் (உத்திரட்டாதி): முரசின் பின்பகுதி அல்லது அரசர்கள் அமரும் அரியாசனம்/கட்டில் போன்ற நாற்கர வடிவ அமைப்பு.

* 27. தோணி (ரேவதி): 'தோணி' என்றால் படகு என்று பொருள். விண்மீன் கூட்டத்தின் இறுதிப் பகுதியில் படகு போன்ற வளைந்த வடிவத்தில் இவ்விண்மீன்கள் காட்சி அளிக்கும்.

> தொகுப்பு நோக்கு: இந்தப் பெயர்கள் அனைத்தும் வெறும் கற்பனையல்ல, சங்கத் தமிழர்கள் இரவில் வெறும் கண்ணால் வானைப் பார்த்து, அந்த விண்மீன் புள்ளிகளை இணைத்துக் கண்டறிந்த தூய தமிழ்க் கலைச்சொற்கள் ஆகும்!


நல்ல குடும்பத்துலே போய் பொண்ணு எடுத்தேன்

 

என் பொண்ணு இவ்வளவு பெரிய லிஸ்ட் கொடுத்திருக்கா மாப்பிள்ளை…. நீங்க ஒண்ணு செய்யுங்க….. சூப்பர் மார்க்கெட் போய் இத்தனையும்வாங்கிட்டுவந்துடுங்க…. பணம் அப்புறம் நான் தரேன்… வாங்கிட்டு ஆட்டோவிலே வந்துடுங்க…..

ஏன் மாமா…சூப்பர் மார்க்கெட் பக்கத்துலே தானே இருக்கு….. நீங்கபோனா என்ன….

நான் போனா என்னை ரொம்ப பாலோ பண்ணுவாங்க மாப்பிளை….

பாலோவா…..எதுக்கு மாமா….

ஒரு தடவை யாரும் பார்க்கல என்ற தைரியத்திலே….ஒரு ஷேவிங்செட்டை எடுத்துவேட்டிக்குள்ளே விட்டுக்கிட்டேன்…..அதுஎன்னடான்னா….CCTV யிலே காட்டி கொடுத்திடுச்சி….. அப்போதிலிருந்து நான் எப்போ போனாலும் என்னை ரொம்ப பாலோ பண்றாங்க மாப்பிளே…..

சரி நீங்க தான் இப்படி…, உங்க பொண்ணை அனுப்ப வேண்டியது தானே…..

சரி தான் போங்க……அவஒருலிப்ஸ்டிக் பாட்டிலை எடுத்து ஜாக்கெட்க்குள்ளே விட்டாள்'ன்னு சொல்லி, அவமான படுத்திஅநியாயமாஅவளை அடிச்சி துரத்திட்டாங்க மாப்பிளே…..

மாமியார் கூடவா போக மாட்டாங்க….

பாவம் அவள் கதை வேற மாப்பிளே….

சொல்லுங்க மாமா…. இதுலே என்ன இருக்கு…..இப்பதானே உங்க குடும்பந்துக்குள்ளே வந்திருக்கேன்…. எனக்கு தெரிய வேணாமா…..

அவ ஒரு பெரிய பவுடர் டப்பாவை எடுத்து இடுப்புலே சொருகி அவங்க கிட்டே மாட்டிக்கினு, அவளை காரி துப்பிட்டாங்க மாப்பிளே…..அதனாலே தான் மாப்பிளே….நீங்க புதுசுஇல்ல….. போய் வாங்கிட்டுவாங்க.. நாங்க போனா பேஜாரா போயிடும்…..

நல்ல குடும்பத்துலே போய் பொண்ணு எடுத்தேன்….. என் தலைவிதி….சரி போகட்டும் விடுங்க….. இதுவெல்லாம் துக்கடா சமாச்சாரம்…. ராத்திரி ஆகட்டும்…,. சூப்பர் மார்க்கெட்பூட்டையேஒடச்சி வேண்டியதைநம்ம வீட்டுக்கு கொண்டு வரேன்….

அப்ப,உங்கவேலை என்ன மாப்பிளே…

பக்கா திருட்டு வேலை மாமா … ஒரு பெரிய கோணியை ரெடி பண்ணுங்க. …இப்ப நான் தூங்க போறேன்…,

ஓடும் நதியும் உடைந்த பிடியும் | The Flowing River and the Broken Grip

 

1960-ஆம் ஆண்டின் ஒரு மாலைப்பொழுது. அரங்கம் முழுவதும் ஆழ்ந்த அமைதி. மேடையில் நின்ற அலன் வாட்ஸ், ஒரு சிறிய கண்ணாடிக் குவளையில் இருந்த நீரை மேசை மீது மெதுவாக ஊற்றுகிறார்.

நீர் தன் போக்கில் பரவி ஓடுகிறது. கூட்டத்தினரைப் பார்த்து அவர் புன்னகையுடன் கேட்கிறார்:

"இந்த நீரை உங்கள் முஷ்டிக்குள் பிடித்து வைக்க முடியுமா?"

மனித மனம் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் துடிக்கும் பேராசையை, அந்த ஒற்றைக் கேள்வி சுக்குநூறாக உடைத்தெறிகிறது.

முக்கியப் பாடங்கள்

  • இறுக்கத்தை விடுவித்தல்: நீரை இறுக்கமாகப் பிடிக்க முயலும் நொடியில், அது விரல் இடுக்குகளின் வழியே நழுவிவிடுகிறது; கைகளைத் திறந்து விரித்து ஏந்தும்போது மட்டுமே அது கைகளில் நிறைகிறது.
  • எதிர்ப்பற்ற வலிமை: வழியில் பாறைகள் குறுக்கிட்டால் நீர் அவற்றுடன் சண்டையிடுவதில்லை; வளைந்து கொடுத்து விலகிச் செல்கிறது. ஆனால் காலப்போக்கில் அதே பாறையையும் அது கரைத்துவிடுகிறது.
  • தாழ்மையின் மேன்மை: நீர் எப்போதும் உயரத்தை நோக்கிப் போட்டியிடுவதில்லை; மிகத் தாழ்வான பள்ளங்களை நோக்கிப் பாய்ந்து அங்கிருக்கும் உயிர்களை வாழ வைக்கிறது.

Summary

வாழ்க்கையை ஒரு நதியாகப் பாருங்கள். நிகழ்வுகளின் போக்கோடு முரண்படாமல், பிடிவாதங்களை விடுத்து நீந்துபவனே உண்மையான அமைதியையும் விடுதலையையும் அடைகிறான்.

16 வார்த்தைகளில் இராமாயணம்

 

*இராமாயணம்*

*16 வார்த்தைகளில்*

*அந்த 16 வார்த்தைகள்*

● *பிறந்தார்*

● *வளர்ந்தார்*

● *கற்றார்*

● *பெற்றார்*

● *மணந்தார்*

● *சிறந்தார்*

● *துறந்தார்*

● *நெகிழ்ந்தார்*

● *இழந்தார்*

● *அலைந்தார்*

● *அழித்தார்*

● *செழித்தார்*

● *துறந்தார்*

● *துவண்டார்*

● *ஆண்டார்*

● *மீண்டார்*

1. *பிறந்தார்* : ஸ்ரீ ராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2. *வளர்ந்தார்* : தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது.

3. *கற்றார்* : வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4. *பெற்றார்* : வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5. *மணந்தார்* : ஜனகபுரியில் சிவனின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து சீதையை மணந்தது.

6. *சிறந்தார்* : அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7. *துறந்தார்* : கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

8. *நெகிழ்ந்தார்* :

★அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.

★குகனார் அன்பில் நெகிழ்ந்தது.

★பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.

★பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது அன்பினையும் தன்னலமற்ற குணத்தை யும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.

★அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.

★சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.

★விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.

★எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது,

9. *இழந்தார்* : மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது,

10. *அலைந்தார்* : அன்னை சீதையை தேடி அலைந்தது,

11. *அழித்தார்* : இலங்கையை அழித்தது,

12. *செழித்தார்* : சீதையை மீண்டும் பெற்று அக மும் முகமும் செழித்து ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது,

13. *துறந்தார்* : அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலை யில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது,

13. *துவண்டார்* : அன்னை சீதையை பிரிய நேர்ந்தது ஶ்ரீ ராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது,

15. *ஆண்டார்* : என்னதான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமான வர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும் படியும் பார்த்துக் கொண்டது,

16. *மீண்டார்* : பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ஶ்ரீ ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது

படித்த கதை தான்...

 


ஆனால் மறுபடியும் நெகிழ வைத்தது!

புண்ணியம் நம்மை தேடி வரும்.

பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்...

300-ரூபாய்....

200-ரூபாய்க்கு வருமா?

சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்

சரி 250-ரூபாய் கொடுங்க...

பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது....

அண்ணே இந்த வழியா போனா நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...?

ரோட்டுக்கடைதான் சார்...

அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு விட்டு போலாம்....

இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு வண்டிகிட்ட ஆட்டோ நின்றது....

ஒரு நடுத்தரவயது அம்மா, அவரது நெற்றி மற்றும் தோற்றம் அவர் கணவர் துணையற்றவர் என சொல்லியது....

வாங்க... இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார் ஆட்டோ டிரைவர்.

இட்லி, தோசை என சாப்பிட்டோம்.

எவ்ளோம்மா?

60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க

100-ரூபாய் கொடுத்தேன்...

மீதியை... சில்லரையாக பொருக்கியது அந்த அம்மா...

இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன் சில்லரை கஷ்டமுன்னாங்க...என்றார் அந்தம்மா!

சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா வருவேன்... அப்போ வாங்கிக்கிறேன் என்று கூறி புறப்பட்டனர்...

ஆட்டோ ஓட்டுனர் - சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு போறீங்க... நாளைக்கு வருவேன்னு சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?

பயணி - அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்... இல்லையா?எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம உதவணும் அண்ண...

நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,அதன்மூலம் பொதுசேவை செய்வது, புண்ணிய தலங்கள் செல்வது,நன்கொடை கொடுப்பது, உண்டியல் போடுவது என... இப்படித்தான் புண்ணியம் தேட வேண்டும் என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.

ஆட்டோ வீடு வந்து சேந்ததது...

இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட 250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.

200-ரூபாய் போதும் தம்பி

என்னாச்சு அண்ணா? என்றேன்...

அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா

நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவிசெய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.

ஒரு கணம் மூச்சு நின்றது.....

நான் போட்ட புண்ணிய கணக்கை விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின் புண்ணிய கணக்கு !!!.

உதவியை உதவி என அறியாமலே செய்துவிட்டு கடந்து விடுங்கள்...

புண்ணியம் நம்மை தேடி வரும்.....

நன்றிகள் - முகநூலில் படித்ததில் மனதை நெகிழ வைத்தது !