Monday 30 April 2012

MONDAY QUOTES


Love: The Greatest Four-letter Word
L is for Listen. To love someone is to listen unconditionally to his or her values and needs without prejudice.
O is for Overlook. To love someone is to overlook the flaws and faults in favor of looking for the good.
V is for Voice. To love someone is to voice your approval on a regular basis. There is no substitute for honest encouragement, positive strokes and praise.
E is for Effort. To love someone is to make a constant effort to spend the time, to make the sacrifice, to show your interest.

Friday 27 April 2012

WEEKEND CELEBRATION


ஞான  வயல்  வாசகர்களுக்கு  கொண்டாட்டமான செய்தி!
ரெண்டு நாளைக்கு வயல்ல வேலை 
இல்லவே  இல்லை




தலைவியம்மா  தன்  பரிவாரங்களுடன்  கொடைக்கானல் செல்கிறார்கள்.
நானும் பின்னால் செல்கிறேன்.








29th April  பிறந்தநாள் கொண்டாடும் சிவராமனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
வாழ்வின் எல்லா வளங்களும் நிறைவாகப் பெற்று
பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ்க வளமுடன்!




மகான்களுடன் மாலா










மகரிஷிக்கு மாலாவை ரொம்ப பிடிக்கும். " அன்பு மகளே" ன்னு மாலாகிட்ட தன்னுடைய மலரும் நினைவுகளை நிறைய தடவை சொல்லியிருக்கிறார்கள். மாலாவுக்கு ஒரு புடவை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்கள். அன்னை லோகாம்பாளும் மாலாவுக்கு புடவை தந்திருக்கின்றார்கள்.
பன்னிரண்டு வருடத்துக்கு முன் பிரம்மஞானப் பயிற்சிக்கு ஆழியார் சென்றிருந்தேன். மாலா பக்கத்து வீட்டு குழந்தைகளை திருச்சியிலே தன்னுடன் வைத்துக் கொண்டு குழந்தைகளின் பெற்றோர்களைப் பயிற்சிக்கு ஆழியார் அனுப்பியிருந்தாள். மகரிஷி என்னிடம் " ஏன் மாலா வரவில்லை?" என்று கேட்டார்கள்.நான் விஷயத்தை சொன்னவுடன் மகரிஷி சொன்னார்கள் : " இதுதான் உண்மையான பிரம்மஞானம். பிறர் இன்புறக் கண்டு தான் இன்புறுவதே பிரம்மஞான மலர்ச்சி! " என்று கூறி மாலாவை வாழ்த்தினார்கள்.






இதுபோல கும்பகோணத்துக்கு அருகில் உள்ள கீழகொட்டையூரில் கடந்த ஐம்பது  ஆண்டுகளுக்கு மேலாக
அனாதைக்  குழந்தைகளுக்கு அதரவு அளித்து, வளர்த்து ஆளாக்கி தற்போது ஆலமரமாக விரிந்து பள்ளிகள் நடத்தி வரும்  95  வயது நிரம்பிய தவத்திரு அண்ணா சுவாமிகளுக்கும் மாலா மேல் மிகவும்  பிரியம். அவருடைய ஆசிகளும் மாலாவின் ஆன்மீகத் தொண்டுகளுக்கு துணை நிற்கின்றன.



 கேரளா கஞ்சன்காட்டிலிருக்கும் ஆனந்தாஸ்ரமத்தின் தற்போதைய தலைவர் சுவாமி முக்தானந்தாவும் மாலாவின் அன்பு அழைப்பை ஏற்று சென்ற ஆண்டு அறிவுத்திருக் கோவிலுக்கு 
வந்திருந்தார்




Thursday 26 April 2012

அறிவாளி

 A wise man once sat in the audience and cracked a joke..
all of them laughed like crazy
After a moment he cracked the same joke again &
a little less people laughed this time...

He cracked the same once again and no one laughed,
Then he smiled and said
"when you can’t laugh on the same joke again and again then why do you keep crying over the same thing over and over again".


Forget the past and MOVE ON!


அறிவாளி ஜோக்கு  

  ஒரு வயசு பொண்ணும் , ஒரு வயசு பையனும் தனியா உட்கார்ந்து பேசுனா, என்ன அர்த்தம் டா?


அவுங்க ரெண்டு பேருக்கும் லவ்வா தான் இருக்கும், இல்லேன்னா நண்பர்களா இருக்கும் டா,,




1 வயசு பொண்ணும்    1 .வயசு பையனும் ......    அந்த சின்ன வயசுல என்ன பேசுறாங்கன்னு  அவுங்களுக்கே தெரியாதுடா !

மாலாவோட நீண்ட கூந்தல்


                       மாலாவோட பொன்விழா ஆண்டு முன்னிட்டு அப்பப்ப மாலா புராணம் இந்த blog  வந்துகிட்டு இருக்கும்.. 
மாலாவோட சின்ன வயசு போட்டோ ஏன் போடலன்னு ஒத்தரு கேட்டாரு..முப்பது வருசத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோதான் கிடைச்சுது..

அத வச்சுதான் இன்னிய post  -

நீண்ட கூந்தலுக்கு ஆசைப் படாத பெண்களே கிடையாது எனலாம்.
மாலாவுக்கு முழங்காலுக்கும் கீழ் வரை கூந்தல் வளரும்.
மாலாவோட நீண்ட கூந்தலுக்குன்னு நெறைய ஃபேன்ஸ் இருந்தாங்க.. எனக்கு அவளோட நீண்ட கூந்தல் ரொம்ப பிடிக்கும்"பின்னிய கூந்தல் கருநிற நாகம்அப்டீங்கற பாடல்வரி அவளோட கூந்தலுக்கு பொருத்தமா இருக்கும் 

அறிவு வளருதோ இல்லியோ இது நல்லா வளருதுன்னு பொலம்பிகிட்டே இருப்பா.
அடிக்கடி கட் பண்ணினாலும் சீக்கிரம் வளர்ந்துடும்..
தினம்தோறும் சீவி முடிச்சு முடியை மெய்ண்டைன் பண்றதுக்கு சிரமப்பட்டா.
பாப் பண்ணிக்கணும்ன்னு சொல்லிக்கிட்டுருப்பா.
உன் கூந்தல்தான் எனக்கு கிக்குஇப்டி சொல்லி சொல்லி அவள பாப்  பண்ணிக்காம தடை பண்ணிக்கிட்டுருந்தேன்..  

குமார் கல்யாணத்துக்கு அப்புறம் அவ பாப்  பண்ணிக்கேறேன்னு சொன்னப்ப வேற வழியில்லாம ப்யூட்டி பார்லருக்கு அழச்சிட்டுப் போனேன். பாப் பண்ணிக்கிட்டு வந்த மாலா எங்கிட்ட " இந்தாங்க..
நீங்க ஆசைப்பட்ட என்னோட கூந்தல்" ன்னு சொல்லி ரெண்டு அடி நீள
கூந்தல என் கைல குடுத்தா

 ப்யூட்டி பார்லர்ல இருந்த லேடீஸ் அப்புறம் பாக்குற எல்லாருமே இவ்வளவு நீள கூந்தல வெட்டிக்க  எப்படி மனசு வந்ததுன்னு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க..!  அந்த ரெண்டு அடி முடிக்கு பார்லர்ல பயங்கரப் போட்டிமுடியை அவங்களுக்கு donate  பண்ணிட்டு வீட்டுக்கு வந்தோம்...
ரெண்டே வருசத்துல மாலாவுக்கு  பழயபடி அதே நீளத்துக்கு முடி
 வளந்துடுச்சி.. 

இதப் படிச்சுட்டு நம்ம "தண்ணி"காச்சலத்துக்கு வந்த டவுட்டு -
முடி நீளமா வளர்ந்தா வெட்டிக்கலாம்...!
நகம் நீளமா வளர்ந்தாலும் வெட்டிக்கலாம்...!

BUT

அறிவு வளர்ந்தா
? ? ? ?
‘’’’
‘’’’
‘’’’
கவலைப் படாதீங்க...உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் வளராது


Wednesday 25 April 2012

BHEL அறிவுத் திருக் கோவில் - 5





கீழ்த் தள பணிகள் வேகமாக முடிக்கப் பட்டு 104  தூண்களும் எழும்ப ஆரம்பித்தன. நடுத் தளம்தான் பிரதான தளமாகையால் ஒரு நல்ல நாளிலே premix கான்க்ரீட்  வரவழைத்து கிட்டத்தட்ட 6500  சதுர அடிக்கு முதல் ceiling 
போட்டோம்கீழ்த் தளத்தின் ஒரு மூலைப் பகுதியை சுத்தம் செய்து அங்கு தினந்தோறும் தனாகர்ஷன சங்கல்பமும்
கூட்டுத் தவமும் நடைபெற ஆரம்பித்தன.
மகரிஷி அவர்கள் சொன்னமாதிரி அறிவுத் திருக் கோவில் பூமியில் கால் வைத்தவர்கள் உழைப்பையும் தந்துவிட்டு நிதியும், கட்டுமானப் பொருட்களையும் வழங்கினார்கள்.

அடிக்கடி அன்பர்களை அறிவுத்திருக் கோவில் வளாகத்துக்கு அழைத்து
நடைபெறும் பணிகளை விளக்கிக் கொண்டிருந்தோம்அவர்களும் எங்களை 
உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர்.
எதிர்கால தலைமுறையினர் திருச்சி பகுதிக்கு வந்தால் அவர்கள் மிகவும்
வருகை தர விரும்பும் பகுதிகள் -
1. திருச்சி மலைக்கோட்டை
2 . தஞ்சை பெரிய கோவில்
நம் BHEL அறிவுத் திருக் கோவில் "
என்று சொல்லி சொல்லி எங்களை நாங்கள் உற்சாகப் படுத்திக் கொண்டோம்
அடுத்து மேல் தளத்துக்கான flooring  அல்லது நடுத் தளத்துக்கான ceiling .
நடுத்தளத்திலிரிந்து இருபது அடி உயரத்தில் கான்க்ரீட் போட முடிவாகியது..


எப்படி போடுவது?