Wednesday 4 April 2012

BHEL அறிவுத் திருக் கோவில் - 3


அடிக்கல் நாட்டு விழா தகவல் பலகை

திருச்சி கலைக்காவிரி நடன குழுவினருடன்...

தனஆகர்ஷன சங்கல்பம் செய்யும் அன்பர்கள்
கல்வெட்டினைத் திறந்து வைக்கும் WCSC தலைவர் அ/நி SKM மயிலானந்தம் அவர்கள்

மார்ச் 28 2006 மதியம் நண்பர் போன செய்து
"மகரிஷி மறைவு செய்தி சன் டிவியில் flash news ஆக
ஓடிக்கொண்டிருக்கிறது " என்றார். சிறிது நேரத்தில்
நிறைய பேர் போன் செய்து விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்..
சிலர் போனிலேயே அழ ஆரம்பித்து விட்டனர். மற்றவர்களுக்கு
ஆறுதல் சொல்ல முடியாமல் என் குரலும் choke ஆகிவிட்டது..

அறிவுத் திருக்கோவிலின் வரைபடங்கள், அடிக்கல் நாட்டு விழா செய்திகளை
மகரிஷி அவர்களிடம் சொல்லி ஆசி கேட்க திட்டமிட்டிருந்தபோது
மகரிஷியின் மறைவு செய்தி எங்களை மிகவும் பாதித்தது.
நாங்களே எங்களைத் தேற்றிக் கொண்டோம். வான்காந்தமாய் நின்று மகரிஷி வழி நடத்துவார்கள் என்ற உறுதியுடன் செயலாற்ற துவங்கினோம்.

திட்டமிட்டபடி 22 -8 -2006 அன்று உலக சமுதாய சேவா சங்க தலைவர்
அருள்நிதி SKM மயிலானந்தனைக் கொண்டு அடிக்கல் நாட்ட முடிவு செய்தோம். 21 ம் தேதி மாலை BHEL MD ஹாலில் திருச்சி கலைக்காவிரி குழுவினர் கொண்டு மகரிஷி தத்துவங்களை நாட்டிய நிகழ்ச்சியாக நடத்தவும் விரும்பினோம்.

அடிக்கல் நாட்டு விழாவை காலை ஏழரை மணிக்கு வைத்துக் கொள்ள திட்டமிட்டு சுமார் 1500 பேர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு நிலத்தை சீர்செய்து
அமர்வதற்கு புத்தம்புது பாய்கள் வாங்கினோம்.
ஆகஸ்ட் 21 ம் தேதி கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது காற்றுடன் கூடிய மழை அடுத்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை சின்னாபின்னப்
படுத்தி விட்டது.. நிலத்தில ஒரு அடி தண்ணீர் தேங்கி நின்றது.. மேடை, ஷாமியானா எல்லாம் வீணாகி விட்டன.
இரவோடு இரவாக பம்பு செட் வைத்து எல்லா நீரையும் இறைத்து 1500 நாற்காலிகள் வரவழைத்து காலை ஐந்தரை மணிக்கு தன ஆகர்ஷன சங்கல்பத்தை தொடங்கினோம்

1500 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
மன்ற அன்பர் ஒருவரின் லாரி ட்ரைலரை மேடையாக மாற்றி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினோம்.அத்துணை பேருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்திருந்தோம்.

முதல் நாள் நடந்த கலைநிகழ்ச்சியும் , அடிக்கல் நாட்டு விழாவும் மிக, மிக சிறப்பாக நடந்தேறின..

மன்றத் தன்னார்வத் தொண்டர்களின் இரவுபகலான உழைப்பை பாராட்டாதவர்களே இல்லையெனலாம்..


இந்த நிகழ்ச்சி நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற உற்சாகத்தைத் தந்தது..





























No comments:

Post a Comment