Saturday 7 April 2012

COSMOLOGY



வானியல்



(2009 ம் ஆண்டு அன்புநெறி மாத இதழில் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி )


நாம் இப்போது ஒரு பொற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 1992 ம் ஆண்டு தொடங்கி இன்று வரை உள்ள
காலத்தை வானியலின் பொற்காலம் ( The Golden Age of Cosmology ) என பெருமையோடு சொல்கின்றார்கள். பிரபஞ்சத்தைப் பற்றிய மாபெரும்
கண்டுபிடிப்புகள் கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கின்றன. விண்வெளியில் மிதக்கும் Hubble telescope கேமரா பழுது பார்க்கப்பட்டு புதிப்பிக்கப்
பட்டபின் கிடைத்த விபரங்கள் பிரமிக்க வைக்கின்றன.

சுத்தவெளியை நூறு சதவிகிதமாகக் கொண்டால் அதில் நமது பிரபஞ்சம் வெறும் நாலே சதவிகிதம்தான். பாக்கி உள்ளத்தில் 72 % கருப்பு சக்தி (Dark Energy ) மீதம் 24 % கருப்பு துகள் ( Dark Matter ) என்கிறார்கள் வானவியலார். இந்த 4 % பிரபஞ்சத்தில் வெளியை ( Space) கழித்துவிட்டால் நட்சத்திரங்களின் மொத்த அளவு 0.4 % அளவுதான்!

முதன் முதலில் டெலஸ்கோப் மூலம் வானத்தைப் பார்த்து உண்மைகளைப் பதிவு செய்தவர் கலிலியோ ஆவார். இந்த நிகழ்ச்சியின் நானூறாவது ஆண்டு இந்த ஆண்டு கொண்டாடப் படுவதால் 2009 ம் ஆண்டினை
ஐ.நா. சபை " உலக வானசாஸ்திர ஆண்டாக" அறிவித்திருக்கின்றது.


உண்மைகளை வெளியிட்ட கலிலியோவிற்கு அன்று கிடைத்தது - சாகும்வரை சிறைத் தண்டனை! அதேபோல வானசாஸ்திர அறிஞர் ப்ரூனோ சொன்ன உண்மைகள் மத நூல்களுக்கு எதிராக இருந்ததால்
அவர் உயிருடன் கொளுத்தப் பட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த போப்பாண்டவர் ஜான் பால் அவர்கள்
மதத்தின் பெயரால் விஞ்ஞானிகளுக்கு இழைக்கப்பட்ட சரித்திர கொடுமைகளுக்கெல்லாம்
பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

இதுபோல கடவுளை மறுத்துவரும் விஞ்ஞானிகளும் தற்போது தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டு பிரபஞ்சத்தை இயக்கிவரும் ஒரே ஒரு சக்தியைப் பற்றி (Unified Force) ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த வானசாஸ்திர ஆண்டிலே, வானியல் பொற்காலத்திலே, நம் அருள்தந்தை மகரிஷி அவர்களின் பிரம்ம
ஞானக் கருத்துக்கள் (Unified Force ), வானியல் பற்றி அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் சமீபத்திய கண்டு பிடிப்புகளோடு மிகவும் ஒத்து போகின்றன.

மனவளக்கலைப் பயிற்சிகளில் வானியலையும் ஒரு பாடமாக வைத்து நம் சிந்தனையை உயர்த்திய நம் மகரிஷி அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கும், கருணைக்கும் நாம் என்றென்றும் கடமைப் பட்டுள்ளோம்.


வானியல் விஞ்ஞானி மகரிஷி அவர்கள் புகழ் வாழ்க வளமுடன்!

1 comment: