Wednesday 11 April 2012

PRIORITY

எதற்கு முதன்மை?

வகுப்பில் ஒரு பேராசிரியர் மேஜை மீது ஒரு பெரிய கண்ணாடி ஜாடியை வைத்து
அதற்குள் பெரிய கோலிகுண்டுகளைப் போட்டு நிரப்பினார்.
" ஜாடி நிரம்பி விட்டதா?" என்று கேட்டார்.
"ஆம்" என்றனர் மாணவர்கள்.
இப்போது சிறு,சிறு கூழாங்கற்களை ஜாடிக்குள் போட்டு குலுக்கினார் பேராசிரியர்.
ஜாடியின் இண்டு, இடுக்குகளில் கூழாங்கற்கள் அடைத்துக்கொண்டன.
" ஜாடி நிரம்பிவிட்டது" என்றனர் மாணவர்கள்.
பேராசிரியர் உலர்ந்த மணலை ஜாடிக்குள் கொட்டினார்.
ஜாடிக்குள் இருந்த மீதி இடத்தையெல்லாம் மணல் நிரப்பியது.
ஜாடியின் விளிம்பு வரை மணல். " ஜாடி முழுவதும் நிரம்பி விட்டது " என்றனர் மாணவர்கள்.
பேராசிரியர் இப்போது ஒரு கப்பில் ஆரஞ்சு ஜூஸ் எடுத்து ஜாடிக்குள் ஊற்றினார். மணல் அதை அப்படியே உறிஞ்சிக்கொண்டது.
பேராசிரியர் இப்போது விளக்க ஆரம்பித்தார் -
" மாணவர்களே! பிரச்சனைகள் இன்றி வாழ நான் இப்போது செய்து காட்டிய இந்த ஜாடி சோதனையை நினைவு கொள்ளுங்கள்.
கோலிக்குண்டுகள் வாழ்வின் முக்கிய அம்சங்களான குடும்பம், குழந்தைகள், உறவு, நட்பு, உடல்நலம் இவைகளைக் குறிக்கின்றன. கூழாங்கற்கள் வீடு, நகை, கார், உத்தியோகம் போன்ற வசதிகளைக் குறிக்கின்றன.
மணல் சின்ன, சின்ன ஆசைகளைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
கோலிகுண்டுகள், கூழாங்கற்கள், மணல், ஜூஸ் அல்லது நீர் என்ற முறையில் ஜாடியில் போட்டால் எல்லாமே ஜாடியில் நிரம்பும்.
இதையே தலைகீழாக மாற்றினால் ?
சின்ன, சின்ன ஆசைகளான மணலை முதலில் நிரப்பினால்
கூழாங்கற்களுக்கும் கோலி குண்டுகளுக்கும் அதாவது வாழ்க்கை
வசதிகளுக்கும், முக்கியமான வாழ்க்கை அம்சங்களுக்கும் இடம் இருக்காது.
எனவே முதலில் வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களுக்கு அதாவது கோலி குண்டுகளுக்கு முதன்மை கொடுங்கள் “

" கடைசியில் ஜூஸ் ஊற்றினீர்களே! அதன் அர்த்தம் என்ன? " என்றான் ஒரு மாணவன்.

" வாழ்க்கையை முறைப்படி முக்கியத்துவம் கொடுத்து நிறைவு பெற்று விட்டால் அந்த சந்தோசம்தான் ஆரஞ்சு ஜூஸ்!" என்றார் பேராசிரியர்.

நாம் எந்த முறையில் ஜாடியை நிரப்பப் போகின்றோம்?

அனைவரும் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க வாழ்த்துக்கள்!

( 2009 ல் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி )

2 comments:

  1. I've read this before....in English
    it was floating around fb a while ago...

    i don't like orange juice...so let's change it to my fav drink...இளநீர் :)

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்...மூணு வருசத்துக்கு முன்னாடி தமிழ்ல எழுதுனது..
      புது நேயர்களுக்காக இத போட்டுருக்கேன்..

      Delete