Tuesday 31 July 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 11

சுந்துவின் சுவிஸ் post  எழுப்பிய நினைவலைகள்

சுவிட்சர்லாந்து - 3





KRIENS to PLATUS


WORLD'S STEEPEST


COGWHEEL  TRAIN


(48 DEG. GRADIENT )




GOLDEN  ROUND  TRIP



1989, ஆகஸ்ட் 5,6 தேதிகளில் Lucern ,  Pilatus  போன்ற இடங்களுக்கு போகத் திட்டமிட்டு Golden Round Trip டிக்கெட் வாங்கினோம்.
zurich லிருந்து Lucern க்கு ட்ரெயினில் சென்று அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு Lucerne  lake ல் Ferry boat  அல்லது ship 
மூலமாக Kriens  என்ற இடம் சென்று அங்கிருந்து Cog train மூலம் Pilatus சிகரம் உச்சிக்கு சென்று அங்கிருந்து  Chairlift  மூலம் இன்னொரு இடம் சென்று அங்கிருந்து திரும்ப Tram Bus  மூலம் Lucerne  வந்து  
Zurich க்கு ரயிலில் திரும்பவேண்டும்.

தேதி எப்படி ஞாபகம் இருக்கிறது என்றால் ஆகஸ்ட் 1 தேதி சுவிஸ் சுதந்திர தினம். அது செவ்வாய் கிழமை கொண்டாடப்பட்டது. அன்று ஏதும் அரசாங்க விடுமுறை கிடையாது. எல்லோரும் அரை மணி நேரம் முன்னதாக ஆபீஸை விட்டு கிளம்பலாம். இரவு ஏழு மணிக்கு Baden  நகரில் உள்ள ஒரு கோட்டையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு விதவிதமான வாணவேடிக்கைகள் நடந்தன. ஊர் மக்கள் அனைவரும் அங்கு திரண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரண்டு தமிழர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது இந்த round  trip  பற்றி சொல்லி போகச் சொன்னார்கள். அந்த வார இறுதியிலே இந்த பயணம் மேற்கொண்டேன்.



TRAIN  REACHING  PLATUS  STATION

சனிக்கிழமைக் காலையில் Baden லிருந்து Zurich  வழியாக Lucern வந்தோம்என்னோடு பாத்ரா என்ற ஹரித்துவாரைச் 
சேர்ந்த நண்பரும் வந்தார். The Chapel Bridge பகுதியில் சுற்றிவிட்டு, Transportation   மியூசியத்தில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு Lucerne Lake  ல் 
Ferry  Boat ல் ஏறி ஒரு மணி நேர மறக்கமுடியாத பயணத்துக்கு பிறகு Kriens என்ற இடம் வந்தோம்இங்கிருந்து Pilatus  மலைச் சிகரத்துக்கு 

TRAINS  CROSSING
WINDOW IN THE CAVE


CogWheel Train ல் செல்ல வேண்டும். 48  டிகிரி  கோணத்தில் மலை மேல் ஏறும் இந்த டிரைன்தான் உலகிலேயே மிக சாய்வாக ஏறுகிறது என்கிறார்கள்.  பாதி ஏறும்போது எதிரே வந்த டிரைன் crossing க்காக நாங்கள் வந்த டிரைன் அப்படியே ரயில் track க்கோடு இரண்டு மீட்டர் 
நகர்ந்து இன்னொரு track  எதிரே வரும் டிரைனுக்காக
அது வரும் பாதையில் இணைந்தது. சுற்றுலாப் பயணிகள் அனைவருமே இதைக் கண்டு கை தட்டி  மகிழ்ந்தார்கள்
PILATUS  PEAK

 Pilatus  சிகரத்தில் ஒரு குகைப் பாதை அமைத்து அது வழியாகச் செல்லும்போது இருபுறமும் இயற்கையை  ரசிக்க ஜன்னல்கள் அமைத்திருக்கிறார்கள்.


LUCERN   TRANSPORT   MUSEUM
NEAR   TRANSPORT   MUESEUM

LUCERN    CHAPEL    BRIDGE

Pilatus ஸிலிருந்து chairlift ல் இன்னொரு ஊர் அடிவாரத்துக்கு வந்தோம். இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய அளவில்
இந்த chairlift ல்  மேலிருந்து  கீழே வருவது ஓர் அற்புத அனுபவம். கிட்டத்தட்ட அரை மணி நேரப் பயணம். மலைகளுக்கு நடுவே, காடுகளுக்கு நடுவே,   ஊர்களுக்கு நடுவே என அந்தப் பயணத்தை அழகாக திட்டமிட்டு நடத்துகிறார்கள். அடிவாரத்திலிருந்த ஊர் பெயர் மறந்துவிட்டது.  அங்கிருந்து கால்நடையாக ஒரு குன்றின் மேல்  ஏறி  இறங்கினால் tram bus  நிலையம். ட்ராமில் ஏறி Lucern  வந்து சேர்ந்தோம்.

பானிபட்


Panipat Express highway

பானிபட்டுக்குப் பலதடவை  போயிருக்கேன்இந்த தடவை எக்ஸ்ப்ரஸ் ஹைவேயில சீக்கிரமா போக முடிஞ்சுதுஊருக்கு நடுப்புற 10  KM தூரத்துக்கு மேம்பாலமா இந்த ஹைவே போகுதுமத்தபடி ஊரில எந்த மாற்றமும் இல்லைஇங்கேயும் அடிக்கடி பவர்கட்.
 நூத்துக்கணக்கான  பெட்சீட்/ப்ளாங்கட் கடைகள் இருக்கு.  Pachranga achar என்ற பெயரிலே ஊரின் எல்லா பகுதிகளிலும் ஊறுகாய் கடைகள்.  பாகற்காய், கத்திரிக்காய் போன்ற காய்களிலும் ஊறுகாய் செய்து விற்கிறார்கள். இந்த தடவை பலாக்காய் ஊறுகாய் வாங்கினேன்.

ஏழெட்டு வருசத்துக்கு முன்னாடி இங்க வந்திருந்தப்ப பானிபட் போர் நடந்த இடத்துக்குப் போய் பார்க்க  ஆசைப்பட்டு  பலரையும் விசாரித்ததில் ஒரு மியூசியம் இருப்பது தெரிந்தது. அது எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியலைஎப்படியோ அதை கண்டுபிடிச்சு போய் பார்த்தால் ஒரு சின்ன இடத்துல போரில் பயன்பட்ட கத்தி, கேடயம், ஈட்டி போன்றவர்களை வைத்திருந்தார்கள்அங்க இருந்தவர்   " யாருமே இங்க வருவதில்லை. ஸ்கூல் குழந்தைகளைக் கூட இங்கு அழைத்து வருவதில்லை " என்று புலம்பினார்.

கீதா உபதேசம் நடந்த இடம்  
சரி, பக்கத்துல இருக்கிற குருஷேத்திரத்திற்கு  போய் பார்த்தால் அங்கு பீஷ்மர் மோட்சம் , கர்ணன் மோட்சம் அடைந்த இடங்கள் என்று மிக சிறிய கோவில்களைக் காட்டினார்கள்கீதை உபதேசம் பண்ணின இடம் என்று இருக்கிற ஓர் இடம்தான் ஓரளவு புனிதமாகத் தோன்றியது.

மத்தபடி  வேற ஒன்னும் சொல்லுற மாதிரி இல்லை!



இன்று (கேட்டு) ரசித்த பாடல் வரிகள் - 5

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி


வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

Sunday 29 July 2012

இன்று படித்தது - 9


Behind every great man stands a woman






மேலே தரப்பட்டுள்ள ஆங்கிலப் பொன்மொழி மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு பிரபலமான மனிதனின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். அதாவது அவளுடைய ஆதரவும் ஊக்கமூட்டலும் அவளது கணவனுக்கு உறுதுணையாக உள்ளன என்பது இதன் கருத்து.






* ஒவ்வொரு நல்ல மனிதனின் பின்னாலும் ஒரு நல்ல பெண்மணி இருக்கிறாள்- அப்பாடா என்று ஓய்ந்து போய்!

* ஒவ்வொரு முட்டாளின் பின்னாலும் ஒரு மகத்தான பெண் இருக்கிறாள்.

* ஒவ்வொரு வெற்றியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள் -- நல்லதாக ஒரு நகை உண்டா, நட்டு உண்டா என்று அழுது கொண்டு!

* ஒவ்வொரு வெற்றிகரமான ஹீரோவின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறார்; அவளுக்குப் பின்னால்அவருடைய மனைவி எரிச்சலுடன் இருக்கிறாள்!

* ஒவ்வொரு தோல்வியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள்.

* ஒவ்வொரு வெற்றிகரமான ஆசாமியின் பின்னாலும் அவனுடைய மாமியார் இருக்கிறார், ஆச்சரியம் தாங்காமல்!

*பிரிட்டனின் பிரதமராக இருந்த மெக்மில்லனின் மனைவி லேடி டோரதி மெக்மில்லன் ஒரு சமயம் சொன்னார். ``எந்த ஒரு மனிதனும் வெற்றியாளனாக முடியாது- அவனுக்குப் பின்னால் அவன் மனைவியோ அல்லது அம்மாவோ இல்லாவிட்டால்! இரண்டு பேருமே இருந்து விட்டால் அவனுக்கு இரட்டை அதிர்ஷ்டம்தான்!''

* ஒவ்வொரு பிரபலமானவரின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். ...ஆனால் ஒவ்வொரு பிரபலமான பெண்மணியைப் பொறுத்தவரை ஒரு ஆண் அவளுக்கு முன்னே இருக்கிறான், பல சமயம் அவள் காலைத் தடுக்கி விட்டுக் கொண்டு!


ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - சின்ன வீடாக!


ஒவ்வொரு முன்னேறிய மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - அவனைப் பிடித்துப் பின்னால் இழுப்பதற்கு!

from an email from my friend


திருக்குறளும் அப்புசாமி குரலும்

                                                      
இ ல்லதென் இல்லவள் மாண்பினால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.


நல்ல மனமுடைய மனைவி ஒருவனுக்குக் கிடைத்தால் அவன் பெரிய அதிர்ஷ்டம் செய்தவன்.

ஆனால் கல்யாணத்துக்கு முன்னால் வரப்போகிறவளுடைய குணம் நல்லதா, கெட்டதா என்று யாருக்குத் தெரியும்?

சில கேஸ¤கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி.

சிலர் கல்லுக்குள் ஈரம் போல பலாப்பழத்துக்குள் இனிப்புப் போல வெளியே முறைப்பாகவும் உள்ளே அன்பாகவும் இருக்கிறார்கள்.

ஒருத்தனுக்கு நல்ல மனைவி வாய்க்கா விட்டால் அவன் கதை அம்பேல். (அதேபோல நல்ல புருஷன் வாய்க்கா விட்டாலும் பெண்டாட்டி பாடு திண்டாட்டமே.)

இல்லவளுக்கு நல்ல மாண்பு இருந்தாள், இல்லாதது என்ன? அதாவது கணவனுக்கு ஒரு குறையும் இல்லையாம்.

மனைவி நல்ல பண்பு இல்லாதவளாக இருந்தால் புருஷனுக்கு வாழ்க்கையில் என்ன இருந்தும் பிரயோஜனம் இல்லை.

நல்லதோ பொல்லாததோ சீதேக் கிழவுயுடன் நான் பொறுமையாக காலந் தள்ளிவிட்டு வருவது என்றைக்காவது ஒரு நாள் அவளுக்கு என்னோட கெட்டிக்காரத்தனம் புரியும்னுதான். (என்மாதிரிதான் ரொம்ப கணவன்மார்கள் காலந்தள்ளி விட்டு வருகிறாங்க ஹிஹி.)


புகழ்புரிந்த இல்லினோர்க்குஏறுபோல் பீடு நடை
இல்லை இகழ்வார் முன் .


புருஷனுடைய புகழை மனைவி காப்பாற்றணும். முன்னே பின்னே, ஏப்பை சாப்பையாகப் புருஷன் (என்னைப் போல, ஹி ஹி!) இருந்துட்டாக்கூட மனைவியானவள் விட்டுக் கொடுக்காம அவன் பேரைக் காப்பாத்தணும்.

"என் புருஷனா? ஒண்ணாம் நம்பர் தெத்தி! எதுவும் தெரியாது. நான் இருக்கேனோ குடும்பம் நடக்கிறதோ! என்று தனது சுயபெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் புருஷனுக்குப் பெருமை தர்ர மாதிரி பேசணும். புருஷனின் பெயரையும் புகழையும் கட்டிக் காக்காத மனைவி ஒருத்தனுக்கு வாய்த்துவிட்டா அவனுக்கு அதைவிடத் துரதிருஷ்டம் ஏதுவுமில்லே நைனா.

பெண்டாட்டியே மதிக்கலைன்னா பிறத்தியார் சத்தியமா மதிக்க மாட்டாங்க.

அப்படிப்பட்ட துரதிருஷ்டசாலியான புருஷன் அவனோட எதிரிகள் எதிரில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது.

பெண்டாட்டிக்கு மட்டும் அதனாலே புகழ் வந்துடப் போவுதா என்ன?

'என் புருஷன் கெட்டிக்காரர், சாமர்த்தியசாலி'ன்னு சொல்லிகிட்டா பொம்பளைங்களுக்கு என்ன குறைஞ்சி போயிடுமோ? ஏன், புருஷன்தான் ஜால்ரா அடிச்சுக்க கூடாதா, என் பெண்சாதி மாதிரி சாமர்த்தியசாலி இந்தப் பூலோகத்தில் இல்லேன்னு' என்று சில பேர் நினைக்கிறாங்க.

அப்படிப் பெண்சாதியைப் புகழ்ந்து வைக்காதீங்க. புகழ் வராட்டியும் போகுது. பெண்டாட்டி தாசன்னு கேவலமான பேர் வந்துடும்.

ஆனால் ஒரு விஷயம் - பெண்டாட்டி வாயால் புகழ்ப் பாடற மாதிரியான காரியத்தைப் புருஷனும் யோசித்து அப்பப்போ செய்யணும்.

சும்மாப் புகழ அவளுக்கென்ன பைத்தியமா?

  • அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை      வன்பாற்கண்
        வற்றல் மரந்தளிர்த் தற்று.


    பாலைவனத்தில் உள்ள மரங்கள் காய்ந்து இலையெல்லாம் உதிர்ந்து மொட்டை மரமாக வரட்சியின் கொடுமையோடு காய்ந்து போய் நிற்கும்.

    அந்த மரம் கருகிப் போய் நிற்கிறது என்று யாராவது கவலைப்படுகிறார்களா? இல்லை.

    காரணம் பாலைவனத்தில் அதுவும் மரங்களையே கருக்கி சாம்பலாக்குகிற கொடிய பாலைவனத்துப் பக்கம் மக்கள் போகமாட்டார்கள்.

    அந்த மாதிரி ஒரு காய்ந்த மரம், வத்தல் மரம், தொத்தல் மரம் என்றைக்காவது குளிர்விட்டு பச்சை பசேலென்று ஆவதற்கு சான்ஸ் உண்டா? கிடையவே கிடையாது.
    அதெப்படி சாத்தியமில்லையோ, அதுமாதிரிதான் சில மனுஷங்களுக்கும் அன்புங்கறது சுரக்கவே சுரக்காது.
    அந்த அன்பில்லாத ஜென்மங்கள் கருகியேதான் வீணாவார்களே தவிர, ஒருத்தருக்கு ஒரு நன்மையும் செய்ய மாட்டார்கள்.
    எப்பவாவது செய்யக்கூடும் என்று அவர்கள் மீது நம்பிக்கை வைக்கலாமா?
    இல்லை. அதை எதிர்பார்த்து ஏமாற வேண்டாமென்று வள்ளுவர் எச்சரிக்கை செய்கிறார்.
    அவன் உதவி செய்வான் என்ற நம்பிக்கையில் உங்கள் பொழுதை வீணாக்கிக் கொள்ள வேண்டாம்.
    நாங்கூட சீதேக் கிழவியை அன்பாக நாலு வார்த்தைப் பேசுவாள் என்றோ, அன்பாக சோறு போடுவாள் என்றோ எதிர்பார்ப்பது கிடையாது.
    ராத்திரி வீட்டுக்கு திரும்பும் போதே எதையாவது நாஸ்டா செய்துவிட்டுத்தான் போவேன்.

    நன்றி   அப்புசாமி.காம்