Panipat Express highway |
பானிபட்டுக்குப் பலதடவை போயிருக்கேன். இந்த தடவை எக்ஸ்ப்ரஸ் ஹைவேயில சீக்கிரமா போக முடிஞ்சுது. ஊருக்கு நடுப்புற 10 KM தூரத்துக்கு மேம்பாலமா இந்த ஹைவே போகுது. மத்தபடி ஊரில எந்த மாற்றமும் இல்லை. இங்கேயும் அடிக்கடி பவர்கட்.
நூத்துக்கணக்கான பெட்சீட்/ப்ளாங்கட் கடைகள் இருக்கு. Pachranga achar என்ற பெயரிலே ஊரின் எல்லா பகுதிகளிலும் ஊறுகாய் கடைகள். பாகற்காய், கத்திரிக்காய் போன்ற காய்களிலும் ஊறுகாய் செய்து விற்கிறார்கள். இந்த தடவை பலாக்காய் ஊறுகாய் வாங்கினேன்.
நூத்துக்கணக்கான பெட்சீட்/ப்ளாங்கட் கடைகள் இருக்கு. Pachranga achar என்ற பெயரிலே ஊரின் எல்லா பகுதிகளிலும் ஊறுகாய் கடைகள். பாகற்காய், கத்திரிக்காய் போன்ற காய்களிலும் ஊறுகாய் செய்து விற்கிறார்கள். இந்த தடவை பலாக்காய் ஊறுகாய் வாங்கினேன்.
ஏழெட்டு வருசத்துக்கு முன்னாடி இங்க வந்திருந்தப்ப பானிபட் போர் நடந்த இடத்துக்குப் போய் பார்க்க ஆசைப்பட்டு பலரையும் விசாரித்ததில் ஒரு மியூசியம் இருப்பது தெரிந்தது. அது எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியலை! எப்படியோ அதை கண்டுபிடிச்சு போய் பார்த்தால் ஒரு சின்ன இடத்துல போரில் பயன்பட்ட கத்தி, கேடயம், ஈட்டி போன்றவர்களை வைத்திருந்தார்கள். அங்க இருந்தவர் " யாருமே இங்க வருவதில்லை. ஸ்கூல் குழந்தைகளைக் கூட இங்கு அழைத்து வருவதில்லை " என்று புலம்பினார்.
கீதா உபதேசம் நடந்த இடம்
|
சரி, பக்கத்துல இருக்கிற குருஷேத்திரத்திற்கு போய் பார்த்தால் அங்கு பீஷ்மர் மோட்சம் , கர்ணன் மோட்சம் அடைந்த இடங்கள் என்று மிக சிறிய கோவில்களைக் காட்டினார்கள். கீதை உபதேசம் பண்ணின இடம் என்று இருக்கிற ஓர் இடம்தான் ஓரளவு புனிதமாகத் தோன்றியது.
மத்தபடி வேற ஒன்னும் சொல்லுற மாதிரி இல்லை!
how is the பலாக்காய் ஊறுகாய்?
ReplyDeleteசீக்கிரம் இங்க வந்தா டேஸ்ட் பண்ணிப் பாக்கலாம்.
Deleteஓகோன்னு சொல்ல முடியாது..புது மாதிரியான டேஸ்ட்!
(வாங்கியாச்சு..வேற வழியில்ல..)
முதல் பானிபட் போர் எந்த ஊரில் நடந்தது? :)
ReplyDeleteபாண்டவர்களின் தந்தை பெயரிலான பாண்டுப்ரஸ்தாவில் போர் நடந்தது.
Deleteபாண்டுப்ரஸ்தா பின்னாளில் பானிபட் என்ற பெயரில் அழைக்கப் படுகின்றது!