Tuesday 17 July 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 9

  சுந்துவின் சுவிஸ் post  எழுப்பிய நினைவலைகள்
சுவிட்சர்லாந்து - 2

ஒரு மூன்று நாட்கள் இண்டர்லேகன்யுங்ஃப்ரௌ போன்ற இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டேன். எனது நண்பர்கள் என்னை ஒரு குறிப்பிட்ட தினத்தில் இண்டர்லேகன் ரயில் நிலையத்திற்கு வரச் சொல்லிவிட்டனர்ஒரு சின்ன பேப்பரில் Baden - Zurich - Bern / Interlekan - Lauterbrunnen - Jungfrau  என்று எழுதிகொடுத்து ட்ரைன் டிக்கெட்
வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்

வெள்ளிக்கிழமைக் காலையில் ஐந்தரை மணிக்கு Baden  ரெயில்வே ஸ்டேசனுக்குப் போய் டிக்கெட் கவுண்டரில் அந்த துண்டு பேப்பரைக் கொடுத்து Baden  - jungfrau டிக்கெட் கேட்டேன்அந்த கவுண்டரில் இருந்தவர் முக மலர்ச்சியுடன் “ Oh! You’re going to Jungfrau..I’ll help you “என்று சொல்லி ஒரு பெரிய Swiss map  எடுத்து  “ You are now in Baden. Take this train to Zurich. From Zurich take another train to Bern. From there you go to Interlekan. Take a train to Lauterbrunnen. Come out of the station and enjoy the scenries. There is a beautiful,tall waterfalls. From there take a train to Jungfrau. The train goes through a tunnel. It stops at two places. Come out of the train and see the beauty of Alps. Enjoy at Jungfrau – skiing, sledge riding, etc. Have a wonderful time “என்று சொல்லி அந்த மேப்பை என் கையில் கொடுத்தார். பயணக் கட்டணம் one way (for 4 hours journey )அப்போதே ஆயிரம் ரூபாய்க்கு மேல்.

சுவிஸ்சில் ட்ரைன் சரியான நேரத்துக்கு வரும்.  நான் Baden ரெயில்வே ஸ்டேசன் பிளாட்பார்மில் zurich  ட்ரைன் க்காக காத்துக்கிட்டுருந்தபோது என்னை நோக்கி டிக்கெட் கவுண்டரில் இருந்தவர் ஓடி வந்தார் -
" It is my fault, sorry   " என்று சொல்லி நான் அவரிடம் டிக்கெட் கேட்டு கொடுத்திருந்த துண்டு சீட்டை  என்னிடம்  கொடுத்துவிட்டு பலமுறை 'sorry' கேட்டு சென்றார்.

எனக்கு இனித் தேவைப் படாத ஒரு துண்டுப் பேப்பரைத் திருப்பித் தர அவர் ஓடி வந்தது என்னால் என்றும் மறக்க முடியாதது.

கீழே  யுங்ஃப்ரௌ போட்டோக்கள் சில -





Ice Palace

2 comments:

  1. Must have taken 6 hours to go from Baden to Jungfrau. We were staying at Wengen which is the next stop from Lauterbrunnen. The two places the train stops are Eigerwand and Eismeer.

    Wondering how you survived in '89 with Vegetarion food? With so many from India visiting, Indian food is easily available all over EU nowadays.

    ReplyDelete
    Replies
    1. You may be correct. The longest distance in Swiss may be covered within 5 hours.

      I'll try to write a post on my search for veg. food at Swiss.

      Delete