Friday 13 July 2012

மூளைக்கு வேலை - 6



சுந்தரியான    சூனியக்காரி 


வெற்றிகரமான இந்த  200 வது போஸ்ட்      முன்னிட்டு    சிறப்பு  " மூளைக்கு வேலை " தந்துள்ளேன்.
 அடிக்கடி மாலா தன் சொற்பொழிவில்   சொல்லிவரும் இந்த கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம்உலகம் முழுதும் பிரபலம்.
பல மொழிகளிலும் பல்வேறு விதங்களில் சொல்லப் பட்டாலும் இங்கே எளிமையாக சொல்கின்றேன்... 
கதையின் முடிவை மறந்தவர்கள் மறுபடியும் மூளையைக் ( இருந்தால்கசக்கலாம்.
 புதியவர்கள் சிந்திக்கலாம்.

சோழ நாட்டு இளவரசன் செழியன் ஒரு போரில் பாண்டியநாட்டு மன்னனால் சிறை பிடிக்கப்பட்டு மரணதண்டனைப் பெறுகின்றான். செழியனின் அறிவு, ஆற்றல், புத்திசாலித்தனம் இவற்றால் கவரப்பட்ட பாண்டியன் தன் மகளை அவனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவிக்க  எண்ணுகிறான்.
 
பாண்டியன் மகளுக்கும் செழியனைப் பிடித்துப் போகின்றது. இருந்தாலும் செழியனிடம் ஒரு கேள்வி கேட்கின்றாள் -
" பெண்கள்  உண்மையிலேயே விரும்புவது என்ன? "
இந்த கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் செழியனுக்கு விடுதலை மற்றும் திருமணம்.
தப்பான பதில் சொன்னால் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
பாண்டியன் செழியனுக்கு ஒரு ஆண்டு காலம்  இந்த கேள்விக்கு பதில் தர அவகாசம் தருகின்றான்.
செழியனும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு நாடு திரும்புகின்றான்.
சோழ நாட்டில் தான் காணும் ஒவ்வொருவரிடமும் இந்த கேள்வியைக் கேட்டுப் பார்க்கின்றான் -
ஒருவரின் பதிலும் திருப்தி தரவில்லை.


தன்னுடைய சிறந்த நண்பனும், தளபதியுமான அழகேந்திரனிடம் சொல்லி இருவருமாக நாடு முழுக்க சுற்றுகிறார்கள். பொதுவாக எல்லாருமே நாட்டின் எல்லைப் பகுதியில் வாழும் சூனியக்காரியிடம் போய் இந்த கேள்விக்கு பதில் கேட்கச் சொல்கிறார்கள். அவளிடம் எந்த கேள்விக்கும் பதில் உண்டு. ஆனால் அவள் கேட்கும் தொகை பிரமாண்டமாய் இருக்கும்.


ஒரு ஆண்டு முடியும் தருவாய் வந்துவிட்டது..வேறு வழியில்லை. செழியன் நண்பனைக் கூட்டிக் கொண்டு சூனியக்காரி வசிக்கும் குடிசை அருகே வந்தான்பார்ப்பதற்கே பயங்கரமாய், கூன் விழுந்த முதுகோடு, ஒற்றைப் பல் வாயோடு, துர்நாற்றம் வீசும் உடம்போடு அருவருப்பாய் அமர்ந்திருந்தாள்.
செழியன் அவளிடம் தன்னுடைய கேள்விக்கு பதில் கேட்டபோது சூனியக்காரி சொன்னாள் -
" உன் நண்பன் அழகேந்திரனை எனக்கு திருமணம் செய்துவித்தால் உன் கேள்விக்கு சரியான பதிலை சொல்கிறேன் " என்றாள்.
தன் நண்பனின் வாழ்வு வீணாவதற்கு பதில் மரணதண்டனையே மேல் என்று செழியன் முடிவு செய்தபோது அழகேந்திரன் " நண்பா! எனக்கு உன் உயிர் முக்கியம். சோழநாடு முக்கியம். என்னைப் பொறுத்தவரையில் இவளை மணந்து  கொள்வது ஒரு சின்ன தியாகம்தான்."  என்று சொல்லி சூனியக்காரியிடம் பதில் கேட்டான்.


அவளோ " முதலில் இந்த திருமணச் செய்தியை நாடு முழுதும் சொல்லுங்கள். பிறகு பெண்கள் உண்மையில் எதை விரும்புகிறார்கள் என்பதை சொல்கின்றேன்" என்றாள்
. வேறு வழியில்லை -
அழகேந்திரன் - சூனியக்காரி திருமண செய்தி நாடு முழுதும் தெரிவிக்கப்பட்டது. இப்போது சூனியக்காரி பதில் சொன்னாள் -
" எந்த பெண்ணும் தன்வாழ்வின் சகல விஷயங்களுக்கும் தான்தான்
 முடிவு செய்யவேண்டும் என்பதையே  விரும்புவாள் "
எப்பேர்பட்ட உண்மை! அனைவரும் இந்த பதில் மிகச் சிறந்த ஒன்று என ஏற்றுக் கொண்டனர்பாண்டியனும் அவன் மகளும் இந்த பதிலால் மகிழ்ந்து செழியனை விடுதலை செய்தனர்.


இங்கே செழியனுக்கும் பாண்டியன் மகளுக்கும் அலங்காரத் திருமணம்
அங்கே அழகேந்திரனுக்கும் சூனியக்காரிக்கும் அருவருப்புத் திருமணம்


முதலிரவு...

அழகேந்திரன் பயத்தோடு பரிதாபமாக பள்ளியறைக்குள் நுழைகின்றான்...
அங்கே மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்ட மஞ்சத்தில் பேரழகியாக அமர்ந்திருக்கிறாள் சூனியக்காரி.

நண்பனுக்காக நீங்கள் செய்த தியாகத்திற்காக என்னை இப்படி மாற்றிக்கொண்டேன்.  ஆனால் இதில்  ஒரு நிபந்தனை -
ஒன்று  ஊரார் கண்களுக்கு அழகியாகத் தோன்றுவேன் உங்களுக்கு அருவருப்பு தரும் சூனியக்காரியாக இருப்பேன் அல்லது ஊரார் கண்களுக்கு சூனியக்காரியாக, உங்களுக்கு அழகியாக இருப்பேன். இந்த இரண்டில் ஒன்றை உடனே முடிவு செய்யுங்கள் " என்கின்றாள்


இப்போதுதான் உங்கள் மூளைக்கு வேலை -
நீங்கள் அழகேந்திரனாக இருந்தால் என்ன முடிவு செய்வீர்கள் ?

மாலா இந்தக் கதையை சொல்லிவிட்டு கூட்டத்திலிருக்கும் ஆண்களிடம் இந்த கேள்வியைக் கேட்கும்போது 
பெரும்பாலனோர்கள்  " எனக்கு மாத்திரம் அழகியா இருந்தாப்  போதும் " என்று சொல்வார்கள்.

உங்க preference  என்ன



அழகேந்திரன் என்ன முடிவெடுத்தான் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா...

scroll down...

"
"
"
"
"
"
"

அவன் அறிவாளி அல்லவா எனவே  “ நீயே முடிவு செய்து கொள் என அவளிடமே பொறுப்பைக் கொடுத்துவிட்டான்.
முடிவை பெண்ணின் விருப்பத்திற்கே விட்டுவிட்ட உன் அறிவைப் பாராட்டுகின்றேன்எனவே நான் எப்போதும் உனக்கும்ஊராருக்கும் 
அழகியாகவே இருப்பேன் ! " என்றாள் சுந்தரியான  சூனியக்காரி!


இந்த கதை ஆங்கிலத்தில்  King Arthur and the Witch   என்ற பெயரில் பிரபலம்  


What is the moral of this story?

The moral is that it doesn't matter if your woman is pretty or ugly, smart or dumb. Underneath it all, she's still a witch. And if you try to control her life, things will get ugly.


So, be careful how you treat your woman and always remember...
It is either 'Her Way' or it is 'No Way' !! 







3 comments:

  1. congrats on your 200th post!!!

    btw... luv the moral of the story :))

    ReplyDelete
  2. Congrats on the double century!
    Luv this line: "Underneath it all, she's still a witch" :))
    Ha ha ha!

    ReplyDelete
  3. Congrats Uncle!!!!

    I like the moral of the story!!!

    ReplyDelete