Friday 13 July 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 7

JP, Sri,  Arumugam Chiththappa & Chidambaram Chiththappa  1988


அலமாரி



என்னோட பிப்ரவரி மாச " துளசி மாடம் " போஸ்ட்ல அப்பாவோட குருமார்கள் போட்டோ அலமாரி மேல மாட்டியிருக்கும்.
அதுக்கு சரணம் பண்ணிக்கிறது பத்தி எழுதியிருந்தேன்.  

அலமாரி போட்டோ எங்கியாவது இருக்குமான்னு இவ்வளவு நாள் தேடிக்கிட்டு இருந்தேன்கடைசியா ஒரு போட்டோ கிடைச்சுது..1988  அப்பா திவசத்தப்ப  எடுத்ததுஇதுல அலமாரி நல்லா தெரியுது..ஆனா மேல இருக்குற போட்டோ கொஞ்சம்தான் தெரியுது..

அப்பா யோகா கத்துகிட்டப்ப அவங்களுக்கு கிடைச்ச ஒரு நோட்டீஸ்ல இருந்த  யோகா மாஸ்டர்களோட  படத்தை ஃபிரேம் பண்ணி அலமாரி மேல மாட்டி வச்சாங்க. அதுல ஒருத்தர் கிரியா யோகா மாஸ்டர் லஹிரி மகாசாயி. . இன்னொருத்தர் உருவம் மனத்துல இருக்கு...ஆனா அவர் யாருன்னு தெரியில..

இந்த அலமாரியிலதான் நாங்க எங்க பாடபுத்தகங்களை வச்சிருப்போம். அலமாரியின் மேல்புரத்துல சுவத்துல ரெண்டு பக்கமும் ரகசிய பொந்துகள் இருக்கும். அதுல நாங்க எங்க விளையாட்டு பொருட்களான பம்பரம், சீட்டுக்கட்டு, கோலி, உண்டியல்    இதெல்லாம் வச்சிருப்போம்.
ஒரு தடவை பொந்துக்குள்ள கை விட்டு,   கொலகோலவென்று கையில் பட்டு அலறி அடித்து பயத்தில் கீழே விழுந்து பார்த்தபோது  கையில் எலிக் குஞ்சுகள் இருந்தன

இந்த அலமாரி தலைமுறைத் தலைமுறையாக பயன்பட்டு பிறகு  அண்ணன்கள், அக்காக்கள், எனக்கு, சேகர், சுந்து, சிவராமன் வரைக்கும் எல்லோருக்கும் பயன்பட்டிருக்கின்றது.

( போட்டோவில் இருக்கிற ஐஸ் பாக்டரி  ஆறுமுகம் சித்தப்பா மற்றும் சிதம்பரம் சித்தப்பா பற்றி விரைவில் எழுதுகிறேன் )


1 comment:

  1. Never seen this foto but recall the அலமாரி with fond memories :)) On the top shelf அப்பா used to keep the Blue and Red Ink bottles. Yes, those were days before ball point pens :)) Lot of கரப்பான் பூச்சிs used to live in this அலமாரி and the smell used to be overwhelming :))

    ReplyDelete