சுந்துவின் சுவிஸ் post எழுப்பிய நினைவலைகள்
சுவிட்சர்லாந்து
1989 ல் ஜூலை முதல் செப்டெம்பர் முதல் வாரம் வரை சுவிட்சர்லாந்தில் இருக்கக்கூடிய அற்புத வாய்ப்பு கிடைத்தது. Baden என்ற ஊரில் இருந்த ABB நிறுவனத்தில் 50 நாட்கள் மைக்ரோ பிராசசர் கண்ரோல் சிஸ்டம் ட்ரைனிங்.
Baden ஊர் வெந்நீர் ஊற்றுகளுக்கு பெயர் பெற்ற இடம். Zurich லிருந்து அரை மணி நேரப் பயணம்.
Baden ஊர் வெந்நீர் ஊற்றுகளுக்கு பெயர் பெற்ற இடம். Zurich லிருந்து அரை மணி நேரப் பயணம்.
சுவிஸ் நாட்டின் பரப்பளவு நம் தமிழ்நாட்டில் நாலில் ஒரு பாகம் இருக்கலாம். நான் சென்றிருந்தபோது பகல் நேரம் இரவு எட்டு மணி வரை இருந்தது. அதாவது சூரியன் இரவு எட்டுமணி அளவில்தான் மறையும்.
Lauterbrunnen 1989 |
Grindelwald 1989 |
சுவிஸ்ஸில் நான் போகாத இடங்களே இல்லை எனலாம். ஜெர்மனி, ஆஸ்திரியா, லெய்செஸ்டீன் நாடுகளுக்கு மாத்திரம்தான் போக முடிந்தது.
Interlaken Ost Rly. station |
திட்டமிட்டும் போகமுடியாமல் போன இடங்கள் - பிரான்ஸ், இத்தாலி, ஈஸ்ட் பெர்லின்( அப்ப இருந்திச்சி)
சுவிஸ் புராணம் நிறைய இருக்கு..
ஆனா போட்டோக்கள் கொஞ்சம்தான்..
Interlaken |
இண்டர்லேகனில் தங்கியிருந்தபோது மாலைப் பொழுதில் மாடுகளை
அலங்கரித்து ஊர்வலமாக வந்தார்கள்.
இந்த ஊரின் லோகல் ஹீரோ, தன மகன் தலையில் ஆப்பிளை வைத்து அம்பு எய்திய
வில்லியம் டெல் நினைவாக மாடு ஊர்வலம் தினமும் நிகழ்வதாகச் சொன்னார்கள். மாட்டின் கொம்புகளில் பூ வைத்திருந்தார்கள். இதை வேடிக்கைப் பார்க்க ஏகப்பட்ட
சுற்றுலாக் கும்பல்.
எங்க ஊர் மாடுகள் மாட்டுப் பொங்கலின்போது நெட்டிமாலை, கதிர் மாலை, பூ மாலை எல்லாம் போட்டுக் கொண்டு ரொம்ப அழகாக இருக்கும் என்று அங்கிருந்த guide ஒருவரிடம் சொன்னேன்.
மாடு கழுத்தில் கட்டும் மணியை நிறைய பேர் ஆசையாக வாங்கினார்கள்
Next.....Jungfrau
oh no !!! why is everyone writing about Swiss and making me swiss-sick......missing Swiss sooooooooo much!!!
ReplyDeleteI was studying University of Oklahoma at that time. Remember calling and talking with JP :))
ReplyDelete