Sunday, 8 July 2012

" டீயில ஈ "





" நான் " ன்னு ஒரு படம் வந்துருக்கு.. படத் தலைப்பைப் பாத்தவுடன் 
ஸ்ரீராம் ஸ்கூல்  மேகசின்னுக்காக " டீயில  ஈ " அப்படீன்னு ஒரு நகைச்சுவைக் கட்டுரை  எழுதின ஞாபகம் ...





அந்தகாலத்துல JS  ( Junior  Statesman ) ன்னு ஒரு இளைஞர் பத்திரிகை வந்துகிட்டுருந்தது. அதுல அப்பப்ப
போட்டி வைப்பாங்க. ஒரு தடவை  " நீங்க ஒரு ஹோட்டல்ல சர்வரா இருக்கீங்க..ஒரு கஷ்டமரு டீ கேக்குறாரு..நீங்க கொண்டாந்து வச்ச டீயில ஈ ஒண்ணு மிதக்குது.. கஸ்டமர் கோபத்துல கத்துறாரு..அவரை எப்படி சமாளிப்பீங்க.." ன்னு ஒரு போட்டி வச்சாங்க..நூத்துக்கணக்கான பதில் வந்துச்சு..

அதுல எனக்கு ஞாபகம் இருக்குற சிலதை கீழே தந்துருக்கேன் -



"ஏன் சார் பொய் சொல்றீங்க.. நல்லா பாருங்க..இது ஈயா..கொசு சார் கொசு!" 

"ஏன் சார் இப்படி கத்துறீங்க.....பக்கத்து டேபிள்ல பாருங்க... குளவி இருக்குற டீ ஐப் பாத்துட்டு எவ்வளவு  அமைதியா இருக்காரு.."

"நீங்க கேட்டது சாதா டீ.....சாதா தான் இருக்கும்..... ஸ்பெசல் டீயில தான் தேனீ போடுவோம்.."

" இருக்காதே சார்.. இப்பதானே டீயில , கொசு மருந்து அடிச்சேன்.."


அந்த ஈக்கு நல்லா வேணும்...நல்லா சூடு படட்டும்...ஈக்காகப் பரிதாப் படாதீங்க.." 


" டீ ன்னா ( TEA ) ஒரு ' E ' தான் சார்.. COFFEE  யில்தான் ரெண்டு போடுவோம் "


" இது மிலிடரி ஓட்டல் சார்..ஒங்களுக்காக வெஜிடபிள் போட முடியாது.."


" என்னது... செத்து கிடக்கா..ரொம்பதான் உங்களுக்கு ஆசை...டீயும் சூடா இருக்கணும்..ஈயும் உயிரோட இருக்கணும்..எப்படி சார்..."


" கவலைப் படாமக் குடிங்க சார்..       ஃப்ரீ...  நோ எக்ஸ்ட்ரா சார்ஜ்!" 


" ஸாரி சார்.. தப்பா கொண்டாந்துட்டேன்.. இது e  order ! "

" மிஞ்சிமிஞ்சிப் போனா இது ரெண்டு சொட்டு குடிச்சிருக்கும்.. இதுக்குப் போய் இப்படி கத்துறீங்க..!"


" இதான் சார் விட்டமின் E "




No comments:

Post a Comment