சௌகந்திகா பூ
ரெண்டு, மூணு நாளா வீட்டு தோட்டத்துல சௌகந்திகா பூ பூக்க ஆரம்பிச்சிருக்கு..
ஆழியாரிலிருந்து பதியன் கொண்டு வந்து வச்சோம். கொடியாகப் படர்ந்து இப்ப மணம் வீசும் பூவாக பூத்துக்கிட்டுருக்கு.
ரெண்டு அடுக்கு நூலிழைகளாக வட்டமாக ஊதா நிறத்துல காட்டுப் பூ மாதிரி இருக்கும் இந்த பூ தினமும் காலை 9 மணிக்கு பூக்குது.
நல்ல வாசனை. ஆனா சீக்கிரமே வாடிப் போகுது.
சௌகந்திகா பூ பத்தி மகாபாரதத்திலே ஒரு நிகழ்ச்சி வரும் -
திரௌபதி இந்த பூ மேல ஆசைப் பட்டதாலே பீமன் இந்தப் பூவைத் தேடி போகும்போது அனுமனை சந்திப்பதாக கதை போகும்.
இந்தப் பூவை Silence Flower ன்னு பாண்டிச்சேரி அன்னை சொல்றாங்க..
நம்ம அறிவுத் திருக்கோவில்லேயும் இந்த பூ பூத்துக்கிட்டுருக்கு..
மாலா தன்னுடைய எதிர்காலப் பேத்திக்கு சௌகந்திகான்னு இப்பவே
பேர் செலக்ட் பண்ணிட்டா!
this is also called rakhi flower beos it resembles rakhi u tie on hand.....when we first moved to SD, we planted this and it spread wild on our fence filling it with a hundred flowers.... sadly had to cut it down after couple of years
ReplyDelete