Tuesday, 30 June 2026
Monday, 29 June 2026
ஜோக்
தேவையா உனக்கு...!!!
நண்பரின் வீட்டில்
நண்பர் மனைவியிடம் :
TVயில் பார்க்கிறதெல்லாம்
தாமு, வெங்கட்பட், சஞ்சீவ்கபூர்,
Dilse foods, Mumbai Street food.
ஆனால் சமைக்கிறது வெறும்
இட்லி, தோசை, பொங்கல், உப்புமா.
நண்பர் மனைவி Counter attack :
TVயில் பார்க்கிறதெல்லாம்
IPL, One day international, test match.
ஆனால் கில்லி கூட விளையாட தெரியா து.
வாயை கொடுப்பானேன்? வாங்கி கட்டிப்பானேன்?
வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்ட...
- நண்பர்களில் யார் சரியில்லை என்று நீங்கள் அடையாளம் கண்டுகொள்வதற்கு முன்பே உங்கள் பெற்றோர் அறிந்து கொள்கின்றனர்
- பெற்றோர்கள் நமக்காக செய்யும் தியாகங்களுக்கு பணத்தின் மூலமாக ஈடுசெய்ய முடியாது
- பிறந்த நாள், ஒரு சாதாரண நாள் தான்; சில நேரங்களில் எதிர்பார்க்காத நபர்களிடமிருந்து வாழ்த்துக்கள் பெறுவீர்கள்.
- உங்களை விட வயதில் மூத்தவர்களும் தாம் செய்வது என்ன என்று தெரியாமலே செயல்படுவது உண்டு
- ஒருவரை கேலி செய்து தாழ்வாக உணர வைப்பது, உங்களை உயர்வாக காட்டாது.
- ஒவ்வொரு நண்பரும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார்கள் என்பது சரியல்ல.
- ஒவ்வொரு நட்பும் எப்போதும் நிரந்தரம் இல்லை.
- தற்காலிக நபர்கள் நம் வாழ்க்கையில் இருப்பார்கள்.
- விருப்பம் அற்ற உரையாடல்/ உறவுகள்/ நட்பு முதலியன நமக்கு இருக்கும் குறைந்த நேரத்தையும் வீணடிக்கிறது என உணர்வது முன்னேற்றம் அடைய முதல்படி
- அறியாமை, ஆணவம், எதிர்மறை எண்ணம் - இவை யாரிடமும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றல்ல. அன்பு, அக்கறை மற்றும் பாசம் மீது கவனம் செலுத்த பலன் தரும்.
- நேர மேலாண்மை, எதற்கு முன்னுரிமை தருவது என்று தெரிந்து இருப்பது முக்கியமானது
- வாழ்க்கையில் ஒரு இலக்கு என்பது தவிர்க்க முடியாதது.
- குழந்தைப் பருவம் வாழ்க்கையின் மிகவும் சிறந்த காலம் ஆகும்
- சாக்லேட், விளையாட்டு பொருள், சைக்கிள் போன்றவை தேவைப்பட்ட குழந்தை பருவத்தில் 'வேண்டும்' என்பது மிக பெரிய வார்த்தை
- பேனா, குறிப்பேடுகள், பொம்மைகளை இழந்த போது 'காணவில்லை' என்பது மிகப் பெரிய வார்த்தை
- பட்டியல் முடிவில்லாதது, ஏனென்றால் வாழ்க்கை ஒரு அனுபவம், ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது, புதிய வாய்ப்புகள், புதிய சவால்கள். நாம் தினமும் கற்றுக்கொண்டு வளர்கிறோம்.
- மிக முக்கியமாக, ஆரோக்கியமே மிகப்பெரிய செல்வம்.
- நீங்கள் வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், எவ்வளவு வயதானாலும், உங்களுக்குள் இருக்கும் குழந்தையை இறக்க விடாமல் காப்பாற்றி கொள்ள வேண்டும்
மகிழ்ச்சியாக இருங்கள்.
போன வாரம் யோகா கிளாஸ்க்கு போயிருந்தேன்...
முதல் நாள் :
எங்க குரு மனசை பத்தி Class எடுத்திட்டு இருந்தார்..
நம்ம உடம்பை Control பண்றதை விட.,
மனசை Control பண்றது கஷ்டம்..
ஏன்னா நம்ம மனசு சாமி கும்பிடும் போது
வெளியில விட்ட செருப்பை நினைக்கும்..
விரதம் இருக்கும் போதுதான் பிரியாணியபத்தி நினைக்கும்..
இதுக்கு எங்க குரு சொன்ன ஒரு உதாரணம்..
நீங்க ஒரு காரை Start பண்றீங்க..
ஆனா அந்த கார்...
Right-ல திருப்பினா - Left-ல போகுது.,
Left-ல திருப்பினா - Right-ல போகுது.,
Gear-ஐ முன்னாடி போட்டா - பின்னாடி போகுது..,
பின்னாடி போட்டா - முன்னாடி போகுது..,
அப்ப நீங்க என்ன பண்ணுவீங்கன்னு கேட்டார்..
மெக்கானிக்கிட்ட விடுவேன்னு ஒருத்தரும்..,
காரை விட்டு இறங்கிடுவேன்னு இன்னொருத்தரும் சொன்னாங்க..
அந்த காரை வித்திடுவேன்னு மற்றொருவரும் சொன்னாங்க..
ஆனா எங்க குருவோ..,
" Brake போட்டு காரை முதல்ல நிறுத்தணும்..! "
அதுதான் நீங்க உடனடியா செய்ய வேண்டியதுன்னு சொன்னார்..
அப்ப பக்கத்துல இருந்தவர் கிட்ட கிசுசிசுன்னு ஒன்னு கேட்டேன் .. அவர் அப்படியே ஷாக் ஆயிட்டார்..
அப்ப குரு பார்த்துட்டார்ஜோக்
என்ன கேட்டேனா.. ?
" ஏன் சார்.. அந்த டப்பா கார்ல ப்ரேக் மட்டும் ஒழுங்கா வேலை செய்யுமா..?
நிக்கிறதுக்கு பதிலா வேகமா போயிடிச்சின்னா என்ன பண்றதுன்னு? "
இப்ப முதல்ல வாயை Control பண்ணுறது எப்படின்னு பயிற்சி நடக்குது .,😜
என்னை விட பணக்காரன்.........பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்:
பல வருடங்களுக்கு முன் நான் வேலையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணப்பட்டேன்
நியூயோர்க் விமான நிலையம் சென்றேன்
நாளிதழ்களின் தலைப்புகளை
படித்துக்கொண்டு இருந்தேன்
நாளிதழ் ஒன்றை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன்
ஆனால் என்னிடம் சில்லறை நாணயம் இல்லை எனவே அதை விடுத்தேன்
அப்போது!..
ஒரு கறுப்பினச் சிறுவன் என்னை அழைத்து
அந்த நாளிதழ் பிரதி ஒன்றை கொடுத்தான்
என்னிடம் சில்லறை இல்லை என கூறினேன்
அதற்கு அந்த சிறுவன்..
பரவாயில்லை இலவசமாக குடுக்கிறேன் என்றான்..
மூன்று மாதம் கழித்து நான் அங்கு சென்றேன்.
மறுபடியும் அதே கதைதான் நடந்தது...
நாளிதளை இலவசமாக கொடுத்தான்
ஆனால் நான் வாங்க மறுத்துவிட்டேன்..
அதற்கு அந்த சிறுவன்:
பரவாயில்லை வாங்குங்கள், இன்று எனக்கு கிடைத்த லாபத்தில் இருந்து தருகிறேன் என்று சொல்லி குடுத்தான்....
19வருடங்கள் கழிந்தன நான் பணக்காரன் ஆகிவிட்டேன்...
அந்த சிறுவனை மறுபடியும் காணும் ஆவல் எனக்கு மேலோங்கியது..
ஒன்றரை மாதம் தேடுதலுக்கு பின் அவனை கண்டுபிடித்துவிட்டேன்...
நான் கேட்டேன் என்னை தெரிகிறதா என்று?
ஆம் தெரிகிறது... நீங்கள் புகழ்வாய்ந்த பில்கேட்ஸ்..
பல வருடங்களுக்கு முன் இரண்டு முறை எனக்கு இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய்...
தற்போது நீ என்னவெல்லாம் விரும்புகிறாயோ அதை எல்லாம் உனக்கு கைமாறாக தர விரும்புகிறேன் என்றேன்..
உங்களால் அதற்கெல்லாம் ஈடுசெய்ய முடியாதே என அந்த கறுப்பு இன இளைஞன் கூறினான்
ஏன் என்றேன்? நான்
அதற்கு அந்த கறுப்பின இளைஞன்..
நான் ஏழையாக இருந்தபோது கொடுத்தேன் ஆனால் நீங்கள் பணக்காரன் ஆன பின்பே எனக்கு கொடுக்க வருகிறீர்கள்...
ஆகவே நீங்கள் எவ்வாறு அதை சரிக்கட்ட முடியும் என்றான்...
அன்றே உணர்ந்தேன் என்னை விட பணக்காரன் அந்த கறுப்பின இளைஞனே என்பதை..
கொடுப்பதற்கு நீ பணக்காரனாகவோ இல்லை பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது..
உதவுவதற்கு ஏழையாகவோ பணக்காரனாகவே நல்லநேரம் பார்த்தோ உதவவேண்டும் என்பது கிடையாது..













































