Monday, 29 June 2026

வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்ட...

 

வயது அதிகமாகும்போது நீங்கள் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்ட

 சில விஷயங்கள் எவை?
  • நண்பர்களில் யார் சரியில்லை என்று நீங்கள் அடையாளம் கண்டுகொள்வதற்கு முன்பே உங்கள் பெற்றோர் அறிந்து கொள்கின்றனர்
  • பெற்றோர்கள் நமக்காக செய்யும் தியாகங்களுக்கு பணத்தின் மூலமாக ஈடுசெய்ய முடியாது
  • பிறந்த நாள், ஒரு சாதாரண நாள் தான்; சில நேரங்களில் எதிர்பார்க்காத நபர்களிடமிருந்து வாழ்த்துக்கள் பெறுவீர்கள்.
  • உங்களை விட வயதில் மூத்தவர்களும் தாம் செய்வது என்ன என்று தெரியாமலே செயல்படுவது உண்டு
  • ஒருவரை கேலி செய்து தாழ்வாக உணர வைப்பது, உங்களை உயர்வாக காட்டாது.
  • ஒவ்வொரு நண்பரும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார்கள் என்பது சரியல்ல.
  • ஒவ்வொரு நட்பும் எப்போதும் நிரந்தரம் இல்லை.
  • தற்காலிக நபர்கள் நம் வாழ்க்கையில் இருப்பார்கள்.
  • விருப்பம் அற்ற உரையாடல்/ உறவுகள்/ நட்பு முதலியன நமக்கு இருக்கும் குறைந்த நேரத்தையும் வீணடிக்கிறது என உணர்வது முன்னேற்றம் அடைய முதல்படி
  • அறியாமை, ஆணவம், எதிர்மறை எண்ணம் - இவை யாரிடமும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றல்ல. அன்பு, அக்கறை மற்றும் பாசம் மீது கவனம் செலுத்த பலன் தரும்.
  • நேர மேலாண்மை, எதற்கு முன்னுரிமை தருவது என்று தெரிந்து இருப்பது முக்கியமானது
  • வாழ்க்கையில் ஒரு இலக்கு என்பது தவிர்க்க முடியாதது.
  • குழந்தைப் பருவம் வாழ்க்கையின் மிகவும் சிறந்த காலம் ஆகும்
  • சாக்லேட், விளையாட்டு பொருள், சைக்கிள் போன்றவை தேவைப்பட்ட குழந்தை பருவத்தில் 'வேண்டும்' என்பது மிக பெரிய வார்த்தை
  • பேனா, குறிப்பேடுகள், பொம்மைகளை இழந்த போது 'காணவில்லை' என்பது மிகப் பெரிய வார்த்தை
  • பட்டியல் முடிவில்லாதது, ஏனென்றால் வாழ்க்கை ஒரு அனுபவம், ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது, புதிய வாய்ப்புகள், புதிய சவால்கள். நாம் தினமும் கற்றுக்கொண்டு வளர்கிறோம்.
  • மிக முக்கியமாக, ஆரோக்கியமே மிகப்பெரிய செல்வம்.
  • நீங்கள் வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், எவ்வளவு வயதானாலும், உங்களுக்குள் இருக்கும் குழந்தையை இறக்க விடாமல் காப்பாற்றி கொள்ள வேண்டும்

மகிழ்ச்சியாக இருங்கள்.

No comments:

Post a Comment