Sunday, 31 May 2026

MEMES OF THE DAY ( 31-05-2026 )



















 

SUCHEENDRAM TEMPLE - SKETCH BY SILPI


 

அப்பா


லும் காண்க)

(முழுமையாக படித்தால் மனத்திற்கு இதமாக இருக்கும்)

அப்பா...!!!

சக்திவேல் எழுபது வயதைக் கடந்த தாத்தா. ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார்.

பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம்.

மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.

இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் சக்திவேல்.

வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது.

அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.

அந்த சமயத்தில் ஒருவர் சக்திவேலின் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.

"மிஸ்டர் சக்திவேல்!

நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).

ஆச்சரியப்பட்டார் சக்திவேல்.

யோசித்தார்.

பிறகு பேசினார்.

""கடவுளே! என் அப்பாவை நான் பார்க்க வேண்டும். அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?"" என்று கேட்டார் சக்திவேல்..

""மிஸ்டர் சக்திவேல்! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.

''கடவுளே! ஆம். ... அவருக்கு நிகர் யாருமில்லை'' என்றார் சக்திவேல்..

‘அப்படியா!' என்றார் கடவுள்.

''அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார். தண்டித்திருக்கிறார். அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும். மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன். ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது. அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் சக்திவேல்.

''அதெல்லாம் சரி!

உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?''' என்று கேட்டார் கடவுள்.

‘அப்பாவா? அம்மாவா?இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை. திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார். ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை. அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்''', என்றார் சக்திவேல்..

''சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்

''என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார். ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.

அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர். ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார்.

நான் என் மகனை அவனது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக உருவாக்குவேன்.

ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா? உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?'' என்று கேட்டார் சக்திவேல்.

அமைதியானார் கடவுள்.

மீண்டும் சக்திவேல் பேசினார்.

''‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரை விட்டார் தசரதன்,

இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன்,

பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர்.

இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம். அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'.

ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன். ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை. அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் சக்திவேல்.

ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள்.

'''‘ம்..... மேலே சொல்'' என்றார் கடவுள்.

''ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன். பக்கத்தில் ஒரு பெண். என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார்.

அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது.

அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது. என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன். வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது.

அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார். கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. பஸ் கிளம்பியது. அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள்.

அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன். மோதிரத்தை அவரிடம் காட்டினேன். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ''நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு''என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார்.

வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் சக்திவேல்..

''அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் கடவுள்.

சிரித்தார் சக்திவேல்.

‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள்.

அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை.

அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.

எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் சக்திவேல்..

கடவுள் சிரித்தார்.

‘கடவுளே! அப்பா என்பது உன்னதமான உறவு. நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்

அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் சக்திவேல்.

':அதெல்லாம் சரி! அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.

‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன். நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று. அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம். அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது சக்திவேலுவின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது.

‘மிஸ்டர் சக்திவேல்! நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

இதோ அப்பா நிற்கிறார். இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார். பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.

சக்திவேல் ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர்.

''மகனே! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா?

என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா.

மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் சக்திவேல்.

அப்பா பேசினார்.

''ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா?

அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான்.

அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.

‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் சக்திவேல்.

‘அது முடியாதுப்பா! என்னோட கதை முடிந்த கதை. வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய். அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய். அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான். இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும். அது நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது. நான் பாக்கியசாலி. நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.

சக்திவேல் அழத்தொடங்கினார்.

‘என்ன மிஸ்டர் சக்திவேல்! போதுமா? நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.

‘கடவுளே! நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது. கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா.

நான் அழத் தொடங்கினேன். யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை.

அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு....

அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.

நிச்சயமாக அவரும் அழுதிருப்பார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார்.என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன். இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்'.

சக்திவேல் மீண்டும் பேசினார்.

‘கடவுளே! இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன். என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.

இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் சக்திவேல்..

(சக்திவேலுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம்

தாத்தாவும் பேரனும்

 தாத்தாவும் பேரனும் மாலை வாக்கிங் போய்ட்டு இருந்தாங்க!

பேரன் திடீர் என்று சும்மா இருமினான்! தாத்தா பேரனை பார்த்து டேய் உனக்கு ஜலதோசம் எல்லாம் ஒன்னும் இல்லை சும்மா நடிக்காத! என்றார்.

கொஞ்சம் நேரம் கழிந்து பேரன் தாத்தாவை பார்த்து தாத்தா எனக்கு காய்ச்சல் வர மாதிரி இருக்கு, உடம்பு எப்படி சூடா இருக்கு பாருங்க!

உடனே தாத்தா பேரனை தொட்டு பார்த்து விட்டு டேய் உடம்பு ஜில்லுன்னு இருக்கு, யு ஆர் வெரி ஹெல்தி என்று சொல்ல!

பேரன் உடனே அங்கிருந்த ஐஸ் கிரீம் கடயை பார்த்து கையை காட்டி அப்ப எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுங்க என்று சொன்னான்!

அப்பொழுது தான் தாத்தா யோசித்தார்!

போன வாரம் வாக்கிங் வரும்போது பேரன் இதே மாதிரி ஐஸ் கிரீம் கேட்க தாத்தா உனக்கு ஜலதோசம் பிடிச்சி இருக்கு, இருமி கொண்டு இருக்க, உடம்பு வேற சூடா இருக்கு, ஜுரம் இருக்கும் போல என்று பேரனிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது!

NORMALISE....

ஒரு சமூகத்தின் அடையாளத்தையும் வலிமையையும் சிதைப்பதற்கு, ஆயுதங்களை விடவும் மிக ஆபத்தான ஆயுதம் அதன் பண்பாட்டையும் மொழியையும் மெல்ல மெல்ல அழிப்பதுதான் என்பது வரலாற்று உண்மை.

தமிழ் பண்பாட்டில் ஒழுக்கக் கேடாகவும், பெரும் பாவமாகவும் கருதப்பட்ட 'திருமணம் கடந்த உறவுகள்' இன்று நவீனத்துவம், தனிமனித சுதந்திரம் என்ற பெயர்களில் இயல்பாக்கப்பட்டு (Normalised) வருவது, நமது சமூகத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு தீவிரமான கலாச்சாரத் தாக்குதல் என்பதில் சந்தேகமே இல்லை.

இன்றைய டிஜிட்டல் மற்றும் உலகமயமாக்கல் சூழலில், பாரம்பரிய குடும்பக் கட்டமைப்புகள் பெரிய அளவில் மாற்றமடைந்து வருகின்றன.

குறிப்பாக, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளும், ( Extramarital Affairs)எவ்வித சட்டபூர்வ அல்லது உணர்வுப்பூர்வ பிணைப்பும் இல்லாத ‘Living together ’ கூட்டு வாழ்க்கை முறையும் இளந்தலைமுறையினரிடையே வேகமாக ‘இயல்பான ஒன்றாக’ (Normalised) சித்தரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கலாச்சார மாற்றம் இளம் சமுதாயத்தின் மனநிலை மற்றும் சமூக வாழ்வில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

நவீனத்துவம் மற்றும் தனிமனித சுதந்திரம் என்ற கவர்ச்சிகரமான போர்வையில், தமிழ் மற்றும் ஈழப் பண்பாட்டின் அடித்தளமான பாரம்பரியக் குடும்ப அமைப்பை வேரோடு உடைப்பதற்காக மேற்குலக நாடுகளினால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் ஒரு கலாச்சாரச் சதியே (Cultural Conspiracy) இந்த தற்காலிக உறவுக் கலாச்சாரம் ஆகும்.

பல்லாயிரமாண்டு கால மனித நாகரிகத்தின் பாதுகாப்புக் கேடயமாக விளங்கும் குடும்பக் கட்டமைப்பைச் சிதைப்பதன் மூலம், மனிதர்களை எவ்வித பற்றும், பொறுப்பும் அற்ற வெறும் 'நுகர்வோராக' (Global Consumers) மாற்றுவதே இந்த உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் (Global Agenda) மறைமுக நோக்கமாகும்.

ஒரு ஆரோக்கியமான சமூகத்திற்கு வலுவான குடும்ப அமைப்பே அடித்தளம். ஆனால், பல partners களை கொண்டிருக்கும் (Multiple Partners) கலாச்சாரம் இயல்பாகும்போது, சமூக ஒழுக்கம் சீர்குலைகிறது.

இது தனிமனித ஒழுக்கக் குறைபாட்டிற்கு வழிவகுப்பதோடு, எதிர்காலத் தலைமுறையினருக்கு (குழந்தைகளுக்கு) பாதுகாப்பற்ற மற்றும் வழிகாட்டுதலற்ற ஒரு சூழலை உருவாக்குகிறது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் சமூகத்தில் சாதாரணமாகப் பேசப்படும்போது, "திருமணம்" என்ற புனிதமான பந்தத்தின் மீதான நம்பகத்தன்மை இளைஞர்களிடம் குறைகிறது.

விசுவாசம் (Loyalty) மற்றும் அர்ப்பணிப்பு இல்லாத உறவுகளே அதிகம் என்ற எண்ணம் விதைக்கப்படுவதால், அவர்கள் முறையான குடும்ப வாழ்க்கையைத் தொடங்க அச்சப்படுகிறார்கள் அல்லது அதைத் தவிர்க்கிறார்கள்.

எனவே, Living together ' மற்றும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளின் ( Extramarital Affairs) களை Normalise பண்ணுவது என்பது ஏதோ ஒரு தற்செயலான சமூக மாற்றம் அல்ல; அது நமது பண்பாட்டு விழுமியங்களை அழிப்பதற்காகத் தூவப்படும் மெல்லிசை நச்சு என்பதை இளம் சமுதாயம் உணர வேண்டும்.

இந்த மேற்கத்திய கலாச்சாரச் சதியை முறியடித்து, நமது பாரம்பரியக் குடும்ப முறையின் மேன்மையையும், உறவுகளுக்கான விசுவாசத்தையும் பாதுகாப்பதே தற்போதைய காலத்தின் கட்டாயத் தேவை.

இதன் மூலம் ஏற்படும் கராச்சார சீரழிவுகள் சம்மந்தமான விழிப்புணர்வுகளை இளைய தலைமுறையினருக்குச் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதே ஆரோக்கியமான சமுதாயத்தை மீட்டெடுப்பதற்கான ஒரே வழியாகும்.

Joke

ஒரு காலை நேர.. நடைப்பயணத்திற்கு பிறகு, ஒரு டாக்டர்கள் குழு, சாலையோர உணவகத்தில் தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள்...*

அப்போது ஒருவர் தங்களை நோக்கி வருவதை, அவர்கள் கண்டார்கள்.

ஒரு மருத்துவர் வருபவரை பார்த்து: "அவருக்கு இடது முழங்காலில் கீல்வாதம் உள்ளது.." என்றார்.

இரண்டாவது மருத்துவர்: இல்லை.. "அவருக்கு பிளாண்டர் ஃபேசிடிஸ் உள்ளது .." என்றார்.

மூன்றாவது மருத்துவர்: அவருக்கு, "ஒரு கணுக்கால் சுளுக்கு .." என்றார்.

நான்காவது மருத்துவர்: அந்த "மனிதனால் முழங்காலை தூக்க முடியாது, அவருக்கு லோயர் மோட்டார் நியூரான்கள் இருப்பதாக தெரிகிறது .." என்றார்.

ஐந்தாவது மருத்துவர்: "ஆனால் எனக்கு அவர் ஒரு ஹெமிபிலீஜியா கத்தரிக்கோல் நடை பிரச்சனை என்று தோன்றுகிறது," என்றார்.

ஆறாவது மருத்துவர் அவருக்கான நோயறிதலை அறிவிப்பதற்கு முன்பு...

அந்த மனிதர், அந்த டாக்டர் குழுவிடம் வந்து, "எனது ஒரு கால் செருப்பு அறுந்து விட்டது, அதை சரி செய்யக்கூடிய செருப்பு தெய்ப்பவர் யாராவது இங்கு அருகில் இருக்கிறாரா.?" என கேட்கிறார்.

*தற்போது எல்லா டிவி, சோசியல் மீடியாக்களில் வல்லுனர்கள் என, நாட்டு நடப்புகளை பற்றி வந்து பேசுபவர்கள், இந்த டாக்டர் குழு மாதிரி தான் பேசுகிறார்கள்.*

அதையும் கேட்டு கொண்டு இருப்பது மக்களாகிய நமது விதி..

*90 சதவீத செய்திகளையும்.. தொலைக்காட்சி விவாதங்களையும்.. பார்க்காமல் தவிர்ப்பது.. நமக்கு, குடும்பத்திற்கு, சமூகத்திற்கு மற்றும் நாட்டுக்கு நல்லது.


PAID VS FREE TOOLS


 

FREE GOOGLE AI TOOLS


 

THE AI UNIVERSE


 

THE INVISIBLE SPECTRUM EMF


 

I AM NOT MY MIND...


 

THE LAWS OF DETACHMENT


 

6 KARMA LAWS


 

HAND SCIENCE


 

AUTOSUGGESTION


 

THIS MAKES YOU DANGEROUSLY SMART


 

THE 6 MENTAL MUSCLES


 

WHAT IS MAN