Sunday, 31 May 2026
Monday, 20 November 2023
ஆழ்மன உத்திகள்
மற்றவர்களைப் பற்றி எப்பொழுதும் நல்லவிதமாக எண்ணுவீர்கள் என்றால் .... .
உண்மையிலேயே உங்களைப் பற்றி நல்ல விதமாக எண்ணுவீர்கள். .
மற்றவர்களைப் பற்றி எப்பொழுதும்
குறை சொல்லியே வாழ்ந்தீர்கள் என்றால்
உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்காது.
நமது மனம் ஒரு படைப்புத் தளம் .. எனவே அடுத்தவர்களைப் பற்றி எப்படி குறையுடன் நமது மனது நினைக்கிறதோ .... அல்லது உணர்கிறதோ....
அதுபோலவே நமது மனது நம்மில் உள்ள குறைகளை மட்டுமே கண்டுபிடித்து நம்மை தாழ்வாக எண்ணி நமது வாழ்க்கையை சோகத்தில் ஆழ்த்துகிறது.
நாம் பிறரது நல்ல குணங்களை மட்டும் பாராட்டும் உயர்வான மனதை கொண்டு இருந்தால் நமது மனது அதைப்போலவே நம்மிடம் உள்ள உயர்ந்த குணங்களை பாராட்டி நம்மை உயர்வாக எண்ணி நமது வாழ்க்கையை எல்லையற்ற மகிழ்ச்சியுடன் எப்பொழுதும் வைத்து இருக்கும்.
எனவே ?
அடுத்தவர்கள் உங்களைப் பற்றி எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமே அல்ல.
உங்கள் மனது உங்களை எப்படி உயர்வாக நினைக்கிறது என்பதுதான் மிகமிக முக்கியம்.
யாரைப் பற்றியும் தாழ்ந்து எண்ணாமலும், தாழ்ந்து பேசாமலும், தரம் குறைந்த வார்த்தைகளை எப்பொழுதும் உபயோகிக்காமலும் வாழ்ந்து பாருங்கள்.
நீங்கள் சந்திக்கும் அனைவரையும் தினமும் பாராட்டி மகிழுங்கள்.
பாசிட்டிவ் வார்த்தைகளையும்
உற்சாகமும் தெம்பை ஊட்டும் வார்த்தைகளை மட்டுமே பேசி பழகுங்கள்.
மகிழ்ச்சியின் எல்லையில் வாழ்வீர்கள்.
செல்வங்கள் அனைத்தும் சேரும்.
கடவுளின் அருளை உணர்வீர்கள்.
Wednesday, 12 November 2014
சங்கல்பம் ...5 ( Autosuggestion )
எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள் இருக்கின்றன. உங்களால் எதையும் செய்ய முடியும் என்று நம்புங்கள். நீங்கள் பலவீனர்கள் என்று எண்ணாதீர்கள். நமது ஆற்றல், நிறைவு , ஞானம் அனைத்தும் எல்லையற்று வளர்ந்தே தீரும். உங்களிடம் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள். மற்றவை அதைச் சுற்றி இணையாக ஒழுங்குபடுத்தப்படும். எழுந்திருங்கள், விழித்திருங்கள், இனியும் உறங்காதீர்கள். எல்லாத் தேவைகளையும் துன்பங்களையும் தீர்க்கும் ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. இதை நம்புங்கள், அந்த ஆற்றல் வெளிப்படும்.
Tuesday, 11 November 2014
சங்கல்பம் ...4 ( Autosuggestion )
சங்கல்பம் என்பது என்ன ?
அறநூல்களைப் படிக்கும் போதும் சான்றோர்களின் வாழ்க்கை வரலாறைக் கேட்கும் போதும் நாம் பெறவேண்டிய பண்புகளின் பட்டியல் நீளும் அனைத்துப் பண்புகளும் பின்பற்ற வேண்டும் என்ற ஆவலும் தோன்றும். அனைத்துப் பண்புகளையும் ஒரு சேரப் பயிற்சி செய்து பின்பற்ற முடியாது. நாம் அடையக்கூடிய பண்புகளைப் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். எந்தப் பண்பு முதலில் அடைய வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அப்பண்பை அடைய நாம் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்....
சங்கல்பம் என்பது மனதிற்கு தான் இடும் கட்டளை. தனது மனதிற்கு இவ்வாறு கட்டளையிடும் போது தான் சோம்பல், தள்ளிப்போடுதல் போன்ற தமோகுணங்களிளிருந்து விடுபட்டுச் செயல்படும்.
மனதிற்கு அதிக சுதந்திரம் கொடுத்தால் அது பயிற்சியில் உறுதியுடன் ஈடுபடாது .பயிற்சியை ஒரு நோன்பு போன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதான் இப்பயிற்சிக்கு முக்கியத்துவம் ஏற்படும்.
உதாரணமாக தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மேம்போக்காக முடிவு செய்து கொண்டால் குறுகிய காலத்திலேயே உடற்பயிற்சி விட்டுவிடப்படுகிறது.
அதையே ஒரு விரதமாக எடுத்துக்கொண்டு, " தினந்தோறும் காலை உடற்பயிற்சி செய்த பிறகே காலை உணவு எடுத்துக் கொள்வேன் " என்று உறுதி எடுத்தக் கொண்டால் அவரால் வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்க முடியும்.
சங்கல்பம் நற்பண்பைச் சாதனையுடன் மனதைப் பிணைக்கிறது . சங்கல்பத்தின் மூலம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கவில்லை என்றால் மனம் எளிதில் சாதனையிலிருந்து விலகி விடும்.
தன்னை அறியாமல் மனதில் பல சங்கல்பங்கள் தோன்றி அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அதற்கான செயல் விளைவை அனுபவிக்கிறோம். மனதிக்கு நற்பண்புகளை சங்கல்பமாக கொடுத்து பயிற்சி செய்யும் போது அப்பணியைப் பெற்று மேன்மை பெறுகிறோம்
Saturday, 8 November 2014
சங்கல்பம் ...3 ( Autosuggestion )
Autosuggestion is the practice of “feeding” your subconscious mind with information which will help you to develop specific beliefs. For example, speaking, writing or listening to affirmations, especially while in a semi-trance or full trance state, injects those affirmations into your subconscious mind through the principle of autosuggestion.
If you make the affirmations which you’re writing, listening to or speaking consistent with goals you want to achieve or with personality traits which you want to develop, your subconscious mind will go to work and start attracting all the resources and opportunities needed to make those affirmations a reality.
Friday, 7 November 2014
சங்கல்பம் ...3 ( Autosuggestion )
How to Use Autosuggestion
1. Decide what it is you want to manifest. You can attract love or friendship, conjure money, or end a bad habit. After you have a little practice you can do more extraordinary things like heal.
Thursday, 6 November 2014
சங்கல்பம் ...2 ( Autosuggestion )
Wednesday, 5 November 2014
சங்கல்பம் ...1 ( Autosuggestion )
ஒரு அன்பர் ஒருமுறை ஒரு கேள்வி எழுப்பினார் - 'நாம் தெய்வத்தன்மையில் இருந்து தவம் செய்த பிறகு நமக்காக இவையெல்லாம் கேட்க வேண்டுமா என்று',
நான் விளக்கினேன். பொதுவாக எல்லோருக்கும் அது தேவை என்று சொல்கிறேன். நீங்களே எண்ணிப்பாருங்கள். உடல் நலம வேண்டுமா, வேண்டாமா? பிறகு நீளாயுள். நாம் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும், அறிவை அறிவதற்காகப் பிறந்து இருக்கிறோம். அதற்காக அந்த வழியில் இருக்கின்றோம். அது நிறைவேற வேண்டும். அதற்கு இடையில் துண்டு போட்ட மாதிரி இந்த உயிரை விட்டு விட்டால் வேலை முடியாது. ஆகவே, நீளாயுள் வேண்டும். அடுத்தது நிறை செல்வம். இந்த உலகத்தில் வாழும் வரை வசதிகள் வேண்டுமல்லவா? எல்லாம் நல்ல படியாக எண்ணுவதுதான் நிறைசெல்வம். உயர்புகழ் என்றால் என்ன? நம்முடைய செயல் எல்லோருக்கும் நல்லபடியாக அமைவது, அமையும் போது அதனால் பயன் பெற்ற மக்களுடைய பாராட்டுத்தான் புகழ்.









