Showing posts with label சங்கல்பம். Show all posts
Showing posts with label சங்கல்பம். Show all posts

Wednesday, 12 November 2014

சங்கல்பம் ...5 ( Autosuggestion )

 
எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள் இருக்கின்றன.  உங்களால் எதையும் செய்ய முடியும் என்று நம்புங்கள். நீங்கள் பலவீனர்கள் என்று எண்ணாதீர்கள்.  நமது ஆற்றல், நிறைவு , ஞானம் அனைத்தும் எல்லையற்று வளர்ந்தே தீரும். உங்களிடம் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள். மற்றவை அதைச் சுற்றி இணையாக ஒழுங்குபடுத்தப்படும். எழுந்திருங்கள், விழித்திருங்கள், இனியும் உறங்காதீர்கள். எல்லாத் தேவைகளையும் துன்பங்களையும் தீர்க்கும் ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிடத்திலும்  இருக்கிறது. இதை நம்புங்கள், அந்த ஆற்றல் வெளிப்படும்.

நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, இறைவனிடத்தில் நம்பிக்கை. இதுவே மகோன்னதத்தின் ரகசியம்.

லட்சியத்தில் உறுதியும், தூய்மையான நோக்கமும் இருந்தால் வெற்றி நிச்சயம். இந்த இரண்டையும் பெற்றவர்கள் சிலராகவே இருந்தாலும் அவர்கள் எல்லாத் தடைகளையும் கடந்து நிச்சயமாக முன்னேறுவார்கள்.

ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த அளவு முயற்சி செய்யாமல் எதையாவது சாதிக்க முடியுமா? பின்னால் பார்க்க வேண்டாம், முன்னோக்கிச் செல்லுங்கள். பலவீனமாகிய மனோவசியத்திலிருந்து விடுபடுங்கள். எழுந்து நின்று போர் செய்யுங்கள். ஓரடி கூடப் பின்வாங்கக் கூடாது. அதுதான் கருத்து.

 எது வந்தாலும் சரி.நட்சத்திரங்கள் பெயர்ந்து விழட்டும், உலகம் முழுவதும் நம்மை எதிர்த்து நிற்கட்டும், மரணம் என்பது உடையை மாற்றிக்கொள்வது தான். அதை உணர்ந்து போராடுங்கள். வெற்றி வேண்டுமானால் இடைவிடாத முயற்சியும் தீவிர சங்கல்பமும் உங்களிடம் வேண்டும்.  சங்கல்பம் வலிமையானது . அதற்கு முன்பு எல்லாம் அடிபணிந்தே ஆக வேண்டும். ஏனெனில் அது கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது. தூய ஆற்றல் மிக்க சங்கல்பம் எல்லாம் வல்லது.

தூயவன் , துணிச்சலானவன் , அவன் எல்லாவற்றையும் சாதிப்பான். இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக்கூடம். நம்மை வலுப்படுத்திக்கொள்வதற்கு நாம் இங்கே வந்திருக்கிறோம். வெறும் கூட்டத்தால் ஆவது ஒன்றுமில்லை. முழு உள்ளத்துடன் உழைப்பவர்களாக, மனப்பூர்வமான ஈடுபாடு உடையவர்களாக ஆற்றல் வேகம் படைத்தவர்களாக உள்ள ஒரு சிலர், ஓராண்டில் பெரும் பாமரக்கூட்டமானது ஒரு நூற்றாண்டில் சாதிப்பதை விட அதிகமாகச் சாதித்து விடுவார்கள்.

உண்மையான துணிவோடு துவக்கப்படும் நல்ல காரியங்களுக்கு ஏற்படும் எதிர்ப்புகள் அதை ஆரம்பிப்பவர்களின் ஆற்றலைத் தான் அதிகமாக்கும்.

நமக்கு வேண்டியது- உணர ஓர் இதயம், சிந்திக்க ஓர் மூளை, வேலை செய்வதற்கு வலிய கைகள்.  வேலை செய்வதற்கு தகுந்த கருவியாக உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள். இதயத்திற்கும் மூளைக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும்போது இதயத்தைப் பின்பற்றுங்கள்.


நாட்டின் எதிர்கால நம்பிக்கையே உங்களிடம் தான் உள்ளது. என் ஆர்வத் தீயை நீங்கள் உங்களுக்குள் மூட்டிக்கொள்ள வேண்டும். மனப்பூர்மானவர்களாக இருக்க வேண்டும்.

Tuesday, 11 November 2014

சங்கல்பம் ...4 ( Autosuggestion )

சங்கல்பம் என்பது என்ன ?

மகரிஷி :

அறநூல்களைப் படிக்கும் போதும் சான்றோர்களின் வாழ்க்கை வரலாறைக் கேட்கும் போதும் நாம் பெறவேண்டிய பண்புகளின் பட்டியல் நீளும் அனைத்துப் பண்புகளும் பின்பற்ற வேண்டும் என்ற ஆவலும் தோன்றும். அனைத்துப் பண்புகளையும் ஒரு சேரப் பயிற்சி செய்து பின்பற்ற முடியாது. நாம் அடையக்கூடிய பண்புகளைப் பட்டியலிட்டுக் கொள்ள வேண்டும். எந்தப் பண்பு முதலில் அடைய வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அப்பண்பை அடைய நாம் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்....

சங்கல்பம் என்பது மனதிற்கு தான் இடும் கட்டளை. தனது மனதிற்கு இவ்வாறு கட்டளையிடும் போது தான் சோம்பல், தள்ளிப்போடுதல் போன்ற தமோகுணங்களிளிருந்து விடுபட்டுச் செயல்படும்.

மனதிற்கு அதிக சுதந்திரம் கொடுத்தால் அது பயிற்சியில் உறுதியுடன் ஈடுபடாது .பயிற்சியை ஒரு நோன்பு போன்று எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதான் இப்பயிற்சிக்கு முக்கியத்துவம் ஏற்படும்.

உதாரணமாக தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மேம்போக்காக முடிவு செய்து கொண்டால் குறுகிய காலத்திலேயே உடற்பயிற்சி விட்டுவிடப்படுகிறது.

அதையே ஒரு விரதமாக எடுத்துக்கொண்டு, " தினந்தோறும் காலை உடற்பயிற்சி செய்த பிறகே காலை உணவு எடுத்துக் கொள்வேன் " என்று உறுதி எடுத்தக் கொண்டால் அவரால் வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்க முடியும்.

சங்கல்பம் நற்பண்பைச் சாதனையுடன் மனதைப் பிணைக்கிறது . சங்கல்பத்தின் மூலம் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கவில்லை என்றால் மனம் எளிதில் சாதனையிலிருந்து விலகி விடும்.

தன்னை அறியாமல் மனதில் பல சங்கல்பங்கள் தோன்றி அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அதற்கான செயல் விளைவை அனுபவிக்கிறோம். மனதிக்கு நற்பண்புகளை சங்கல்பமாக கொடுத்து பயிற்சி செய்யும் போது அப்பணியைப் பெற்று மேன்மை பெறுகிறோம்

Saturday, 8 November 2014

சங்கல்பம் ...3 ( Autosuggestion )


Autosuggestion is the practice of “feeding” your subconscious mind with information which will help you to develop specific beliefs. For example, speaking, writing or listening to affirmations, especially while in a semi-trance or full trance state, injects those affirmations into your subconscious mind through the principle of autosuggestion. 

If you make the affirmations which you’re writing, listening to or speaking consistent with goals you want to achieve or with personality traits which you want to develop, your subconscious mind will go to work and start attracting all the resources and opportunities needed to make those affirmations a reality.

Friday, 7 November 2014

சங்கல்பம் ...3 ( Autosuggestion )



( from wikihow )


1. Decide what it is you want to manifest. You can attract love or friendship, conjure money, or end a bad habit. After you have a little practice you can do more extraordinary things like heal.

2. Learn to meditate. You can concentrate better once you know how.

3.  Visualize something that represents your wish being fulfilled, such as your boss giving you that raise, thousands of one-hundred dollar bills flying through your front door, or attractive woman kissing all over you, etc.

4. Say repeatedly what you want to manifest such as "I will make big bucks," "I will meet my soul mate," or "I will stop smoking." You may want to make up a line of poetry such as "Money, Money, I call thee to cone to me" 

5. Believe it will work. If you believe it, it will

6. Expect it to come every day. Sometimes Autosuggestion takes a little while to work miracles. But, if you believe, it will surely work.

7. Always repeat your affirmation. Repeat it with belief, feeling and emotion, If you don't repeat it with emotion then it will not produce results.

8. Make your affirmations in the present tense such as "I AM happy" or "I AM rich". 
9. Repeat your affirmations in the morning after awaking and at night prior to sleep but also repeat them at noon and afternoon.

10. Repeat them for 5-10 minutes slowly, lovingly and with emotion

11. Repeat them in a sleepy, drowsy state because your subconscious mind receives you affirmations or images. Your conscious mind will interfere with your concentration in your non-sleepy state.

12. If you still have difficulty in believing them,then record your affirmations in a tape, mobile or anything and use them while you sleep, because when you're asleep your conscious mind is disconnected from your subconscious mind and thus your affirmations go directly into your subconscious mind and you will have your desired result.

13. Remember always believe and repeat your affirmations with emotion.


Thursday, 6 November 2014

சங்கல்பம் ...2 ( Autosuggestion )

Autosuggestion is the art of manifesting things in your life by putting focus on them and repeating mentally or verbally what you wish to manifest. It is a very helpful way to attract money, love, or friendship into your life as well as an effective method for ending bad habits such as smoking,drinking,procrastination etc.It can also be used for making good habits such as exercising regularly.

Wednesday, 5 November 2014

சங்கல்பம் ...1 ( Autosuggestion )

நல்வரம்

 நாம் வெற்றியாக, அமைதியாக வாழ வேண்டும். அதற்கு என்னென்ன வேண்டும் என்கின்ற போது “உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெஞ்ஞானம் ஓங்கி வாழ்வோம்” - இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்? 

ஒரு அன்பர் ஒருமுறை ஒரு கேள்வி எழுப்பினார் - 'நாம் தெய்வத்தன்மையில் இருந்து  தவம் செய்த பிறகு நமக்காக இவையெல்லாம் கேட்க வேண்டுமா என்று', 

நான் விளக்கினேன். பொதுவாக எல்லோருக்கும் அது தேவை என்று சொல்கிறேன். நீங்களே எண்ணிப்பாருங்கள். உடல் நலம வேண்டுமா, வேண்டாமா? பிறகு நீளாயுள். நாம் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும், அறிவை அறிவதற்காகப் பிறந்து இருக்கிறோம். அதற்காக அந்த வழியில் இருக்கின்றோம். அது நிறைவேற வேண்டும்.  அதற்கு இடையில் துண்டு போட்ட மாதிரி இந்த உயிரை விட்டு விட்டால் வேலை முடியாது. ஆகவே, நீளாயுள் வேண்டும். அடுத்தது நிறை செல்வம். இந்த உலகத்தில் வாழும் வரை வசதிகள் வேண்டுமல்லவா? எல்லாம் நல்ல படியாக எண்ணுவதுதான் நிறைசெல்வம். உயர்புகழ் என்றால் என்ன? நம்முடைய செயல் எல்லோருக்கும் நல்லபடியாக அமைவது, அமையும் போது அதனால் பயன் பெற்ற மக்களுடைய பாராட்டுத்தான் புகழ்.

ஆகவே, புகழ் என்பது ஏதோ நமக்குத் தனிப்பட்ட சொத்து அன்று. நான் செய்யக் கூறிய காரியங்கள் எல்லாம் எல்லோருக்கும் நன்மை அளிக்கட்டும் எனபதுதான் புகழில் இருக்கக் கூடியது. கடைசியாக மெஞ்ஞானம். நாம் எந்ந நோக்கத்தோடு பிறந்தோமோ, அந்த நோக்கத்தை அடைவதற்கு மெய்ப்பொருள் விளக்கம் வேண்டும். இந்த ஐந்தையும் தான் “உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெஞ்ஞானம் ஓங்கி வாழ்க” என்று சொல்கிறேன்.

( 1500th post of this year )