Monday 20 November 2023

ஆழ்மன உத்திகள்

மற்றவர்களைப்  பற்றி  எப்பொழுதும்  நல்லவிதமாக  எண்ணுவீர்கள்  என்றால் .... .

உண்மையிலேயே  உங்களைப்  பற்றி  நல்ல  விதமாக  எண்ணுவீர்கள். .

மற்றவர்களைப் பற்றி  எப்பொழுதும்
குறை சொல்லியே வாழ்ந்தீர்கள் என்றால்
உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்காது.

நமது மனம்  ஒரு படைப்புத் தளம்   .. எனவே  அடுத்தவர்களைப்  பற்றி  எப்படி குறையுடன் நமது மனது நினைக்கிறதோ .... அல்லது  உணர்கிறதோ....

அதுபோலவே நமது மனது நம்மில் உள்ள குறைகளை மட்டுமே கண்டுபிடித்து  நம்மை தாழ்வாக எண்ணி நமது வாழ்க்கையை சோகத்தில் ஆழ்த்துகிறது.

நாம் பிறரது நல்ல குணங்களை மட்டும் பாராட்டும் உயர்வான மனதை கொண்டு இருந்தால் நமது மனது அதைப்போலவே நம்மிடம் உள்ள உயர்ந்த குணங்களை பாராட்டி நம்மை உயர்வாக எண்ணி நமது வாழ்க்கையை எல்லையற்ற மகிழ்ச்சியுடன் எப்பொழுதும் வைத்து இருக்கும்.

எனவே  ?  

அடுத்தவர்கள்   உங்களைப் பற்றி  எப்படி  எண்ணுகிறார்கள் என்பது முக்கியமே அல்ல.

உங்கள் மனது உங்களை எப்படி உயர்வாக நினைக்கிறது என்பதுதான் மிகமிக முக்கியம்.

யாரைப் பற்றியும் தாழ்ந்து எண்ணாமலும், தாழ்ந்து பேசாமலும், தரம் குறைந்த வார்த்தைகளை எப்பொழுதும் உபயோகிக்காமலும் வாழ்ந்து பாருங்கள்.

நீங்கள் சந்திக்கும் அனைவரையும் தினமும் பாராட்டி மகிழுங்கள்.
பாசிட்டிவ் வார்த்தைகளையும்
உற்சாகமும் தெம்பை ஊட்டும் வார்த்தைகளை மட்டுமே பேசி பழகுங்கள்.

மகிழ்ச்சியின் எல்லையில் வாழ்வீர்கள்.
செல்வங்கள் அனைத்தும் சேரும்.
கடவுளின் அருளை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment