சுவத்திகை (SWASTHIKA) குறியீடு மிகப் பழமையானது. சுவத்திகை என்னும் பெயர் சமக்கிருத மொழிச் சொல் என்றும் இது ஆரியர் கண்டுபிடிப்பு என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இது சிவ பெருமானின் நடனத்தைக் குறியீடாகக் காட்டுவதற்குத் தமிழர்கள் உருவாக்கிய குறி மற்றும் சொல்லாகவே படுகிறது. எப்படி என்று கீழே பார்க்கலாம்.
சிவபெருமானின் நடனத்தைப் பற்றிச் சங்க இலக்கியமான கலித்தொகை பேசுகிறது. நடனமாடும்போது சிவபெருமானுக்கு நடராசர் என்று பெயர். ஒருகாலை மேலே தூக்கித் தொங்கவிட்டும் (குஞ்சிதபாதம்) இன்னொரு காலை வளைத்துத் தரையில் ஊன்றியபடியும் (ஊன்றியபாதம்) இருப்பதே நடராசரின் வடிவமாக அனைத்துச் சிவன் கோவில்களிலும் உள்ளது. இந்த நடராசரின் குறியீட்டு வடிவமே சுவத்திகை ஆகும். தமிழ்ச்சொல் ஆகிய இது தோன்றும் முறையைக் கீழே காணலாம்.
சிவம் + தூங்கு (=நடனமாடு) + ஐ = சிவத்துங்கை >>> = சிவனின் நடனம்.
அருகில் உள்ள படம் இதனை மேலும் தெளிவாக்கும்.
No comments:
Post a Comment