Sunday, 26 November 2023

மனஉறுதி


நமது  மனஉறுதி எந்த அளவிற்கு வலுப்பெற்று உள்ளதோ,
அதற்கு தக்கபடிதான் நமது வெற்றியின் அளவும் இருக்கும்....

துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன்,
மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்...

பொறுமையும், விடா முயற்சியும், தன்னம்பிக்கையும்,
சகிப்புத் தன்மையும், தெளிவான சிந்தனையும் இருந்தால்...... வாழ்க்கையில் வெற்றிகள் பல குவிக்கலாம்....!

ஒருவர் தன்னை தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும்
அவரவர் மனதைப் பொறுத்தே இருக்கிறது. மனம் தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால இணையில்லாத இன்பநிலையை அடையலாம்..

உலகத்தில் வாழ வேண்டும். சாகும் வரை அல்ல.....
நம்மை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை....

உன்னை நேசிக்கும் இதயத்தை, சாகும் வரை மறக்காதே...
உன்னை மறந்த இதயத்தை, வாழும் வரை நினைக்காதே....

உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே.
மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடு…

முடிந்த பிரச்சினைகளுக்காக வருந்தாமல்,
வரும் காலத்தை துணிந்து எதிர்கொள்....

உலகில் எந்த ஒரு மனிதரையும் கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்.....
நாளை நீ கண் மூடிவிட்டால்...
அவர்கள் உன்னையும், உண்மையையும் மூடி விடக்கூடும்...... [20] உழைக்கும்போதே வெற்றியைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்காமல்,
உழைப்பை கடமையாக கொள்ளுங்கள்.. இயற்கை நியதிப்படி, வெற்றி விளைந்தே தீரும்

கடவுளிடம் சொல்லாதோ, உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று..
உன் பிரச்சனைகளிடம் சொல், உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று..

எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.....!!

 உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்.ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்..நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள்...இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது......

புது உடைகளும்,பழைய நண்பர்களும் இனிப்பவர்கள்.....

பேராசை இல்லாதிருக்க "கிடைத்தது போதும்" என்ற பொன்மனம் வேண்டும்.

நீ தேர்ந்தெடுக்கும் பொருள் கூட,
உன் குணத்தை காட்டும்....
ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ,
உன்னையே காட்டும்.....

No comments:

Post a Comment