Sunday 29 July 2012

இன்று படித்தது - 9


Behind every great man stands a woman






மேலே தரப்பட்டுள்ள ஆங்கிலப் பொன்மொழி மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு பிரபலமான மனிதனின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். அதாவது அவளுடைய ஆதரவும் ஊக்கமூட்டலும் அவளது கணவனுக்கு உறுதுணையாக உள்ளன என்பது இதன் கருத்து.






* ஒவ்வொரு நல்ல மனிதனின் பின்னாலும் ஒரு நல்ல பெண்மணி இருக்கிறாள்- அப்பாடா என்று ஓய்ந்து போய்!

* ஒவ்வொரு முட்டாளின் பின்னாலும் ஒரு மகத்தான பெண் இருக்கிறாள்.

* ஒவ்வொரு வெற்றியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள் -- நல்லதாக ஒரு நகை உண்டா, நட்டு உண்டா என்று அழுது கொண்டு!

* ஒவ்வொரு வெற்றிகரமான ஹீரோவின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறார்; அவளுக்குப் பின்னால்அவருடைய மனைவி எரிச்சலுடன் இருக்கிறாள்!

* ஒவ்வொரு தோல்வியாளன் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள்.

* ஒவ்வொரு வெற்றிகரமான ஆசாமியின் பின்னாலும் அவனுடைய மாமியார் இருக்கிறார், ஆச்சரியம் தாங்காமல்!

*பிரிட்டனின் பிரதமராக இருந்த மெக்மில்லனின் மனைவி லேடி டோரதி மெக்மில்லன் ஒரு சமயம் சொன்னார். ``எந்த ஒரு மனிதனும் வெற்றியாளனாக முடியாது- அவனுக்குப் பின்னால் அவன் மனைவியோ அல்லது அம்மாவோ இல்லாவிட்டால்! இரண்டு பேருமே இருந்து விட்டால் அவனுக்கு இரட்டை அதிர்ஷ்டம்தான்!''

* ஒவ்வொரு பிரபலமானவரின் பின்னாலும் ஒரு பெண்மணி இருக்கிறாள். ...ஆனால் ஒவ்வொரு பிரபலமான பெண்மணியைப் பொறுத்தவரை ஒரு ஆண் அவளுக்கு முன்னே இருக்கிறான், பல சமயம் அவள் காலைத் தடுக்கி விட்டுக் கொண்டு!


ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - சின்ன வீடாக!


ஒவ்வொரு முன்னேறிய மனிதனின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் - அவனைப் பிடித்துப் பின்னால் இழுப்பதற்கு!

from an email from my friend


திருக்குறளும் அப்புசாமி குரலும்

                                                      
இ ல்லதென் இல்லவள் மாண்பினால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.


நல்ல மனமுடைய மனைவி ஒருவனுக்குக் கிடைத்தால் அவன் பெரிய அதிர்ஷ்டம் செய்தவன்.

ஆனால் கல்யாணத்துக்கு முன்னால் வரப்போகிறவளுடைய குணம் நல்லதா, கெட்டதா என்று யாருக்குத் தெரியும்?

சில கேஸ¤கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி.

சிலர் கல்லுக்குள் ஈரம் போல பலாப்பழத்துக்குள் இனிப்புப் போல வெளியே முறைப்பாகவும் உள்ளே அன்பாகவும் இருக்கிறார்கள்.

ஒருத்தனுக்கு நல்ல மனைவி வாய்க்கா விட்டால் அவன் கதை அம்பேல். (அதேபோல நல்ல புருஷன் வாய்க்கா விட்டாலும் பெண்டாட்டி பாடு திண்டாட்டமே.)

இல்லவளுக்கு நல்ல மாண்பு இருந்தாள், இல்லாதது என்ன? அதாவது கணவனுக்கு ஒரு குறையும் இல்லையாம்.

மனைவி நல்ல பண்பு இல்லாதவளாக இருந்தால் புருஷனுக்கு வாழ்க்கையில் என்ன இருந்தும் பிரயோஜனம் இல்லை.

நல்லதோ பொல்லாததோ சீதேக் கிழவுயுடன் நான் பொறுமையாக காலந் தள்ளிவிட்டு வருவது என்றைக்காவது ஒரு நாள் அவளுக்கு என்னோட கெட்டிக்காரத்தனம் புரியும்னுதான். (என்மாதிரிதான் ரொம்ப கணவன்மார்கள் காலந்தள்ளி விட்டு வருகிறாங்க ஹிஹி.)


புகழ்புரிந்த இல்லினோர்க்குஏறுபோல் பீடு நடை
இல்லை இகழ்வார் முன் .


புருஷனுடைய புகழை மனைவி காப்பாற்றணும். முன்னே பின்னே, ஏப்பை சாப்பையாகப் புருஷன் (என்னைப் போல, ஹி ஹி!) இருந்துட்டாக்கூட மனைவியானவள் விட்டுக் கொடுக்காம அவன் பேரைக் காப்பாத்தணும்.

"என் புருஷனா? ஒண்ணாம் நம்பர் தெத்தி! எதுவும் தெரியாது. நான் இருக்கேனோ குடும்பம் நடக்கிறதோ! என்று தனது சுயபெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல் புருஷனுக்குப் பெருமை தர்ர மாதிரி பேசணும். புருஷனின் பெயரையும் புகழையும் கட்டிக் காக்காத மனைவி ஒருத்தனுக்கு வாய்த்துவிட்டா அவனுக்கு அதைவிடத் துரதிருஷ்டம் ஏதுவுமில்லே நைனா.

பெண்டாட்டியே மதிக்கலைன்னா பிறத்தியார் சத்தியமா மதிக்க மாட்டாங்க.

அப்படிப்பட்ட துரதிருஷ்டசாலியான புருஷன் அவனோட எதிரிகள் எதிரில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது.

பெண்டாட்டிக்கு மட்டும் அதனாலே புகழ் வந்துடப் போவுதா என்ன?

'என் புருஷன் கெட்டிக்காரர், சாமர்த்தியசாலி'ன்னு சொல்லிகிட்டா பொம்பளைங்களுக்கு என்ன குறைஞ்சி போயிடுமோ? ஏன், புருஷன்தான் ஜால்ரா அடிச்சுக்க கூடாதா, என் பெண்சாதி மாதிரி சாமர்த்தியசாலி இந்தப் பூலோகத்தில் இல்லேன்னு' என்று சில பேர் நினைக்கிறாங்க.

அப்படிப் பெண்சாதியைப் புகழ்ந்து வைக்காதீங்க. புகழ் வராட்டியும் போகுது. பெண்டாட்டி தாசன்னு கேவலமான பேர் வந்துடும்.

ஆனால் ஒரு விஷயம் - பெண்டாட்டி வாயால் புகழ்ப் பாடற மாதிரியான காரியத்தைப் புருஷனும் யோசித்து அப்பப்போ செய்யணும்.

சும்மாப் புகழ அவளுக்கென்ன பைத்தியமா?

  • அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை      வன்பாற்கண்
        வற்றல் மரந்தளிர்த் தற்று.


    பாலைவனத்தில் உள்ள மரங்கள் காய்ந்து இலையெல்லாம் உதிர்ந்து மொட்டை மரமாக வரட்சியின் கொடுமையோடு காய்ந்து போய் நிற்கும்.

    அந்த மரம் கருகிப் போய் நிற்கிறது என்று யாராவது கவலைப்படுகிறார்களா? இல்லை.

    காரணம் பாலைவனத்தில் அதுவும் மரங்களையே கருக்கி சாம்பலாக்குகிற கொடிய பாலைவனத்துப் பக்கம் மக்கள் போகமாட்டார்கள்.

    அந்த மாதிரி ஒரு காய்ந்த மரம், வத்தல் மரம், தொத்தல் மரம் என்றைக்காவது குளிர்விட்டு பச்சை பசேலென்று ஆவதற்கு சான்ஸ் உண்டா? கிடையவே கிடையாது.
    அதெப்படி சாத்தியமில்லையோ, அதுமாதிரிதான் சில மனுஷங்களுக்கும் அன்புங்கறது சுரக்கவே சுரக்காது.
    அந்த அன்பில்லாத ஜென்மங்கள் கருகியேதான் வீணாவார்களே தவிர, ஒருத்தருக்கு ஒரு நன்மையும் செய்ய மாட்டார்கள்.
    எப்பவாவது செய்யக்கூடும் என்று அவர்கள் மீது நம்பிக்கை வைக்கலாமா?
    இல்லை. அதை எதிர்பார்த்து ஏமாற வேண்டாமென்று வள்ளுவர் எச்சரிக்கை செய்கிறார்.
    அவன் உதவி செய்வான் என்ற நம்பிக்கையில் உங்கள் பொழுதை வீணாக்கிக் கொள்ள வேண்டாம்.
    நாங்கூட சீதேக் கிழவியை அன்பாக நாலு வார்த்தைப் பேசுவாள் என்றோ, அன்பாக சோறு போடுவாள் என்றோ எதிர்பார்ப்பது கிடையாது.
    ராத்திரி வீட்டுக்கு திரும்பும் போதே எதையாவது நாஸ்டா செய்துவிட்டுத்தான் போவேன்.

    நன்றி   அப்புசாமி.காம்  
  • No comments:

    Post a Comment