புன்னகை என்ன விலை
– லேனா தமிழ்வாணன்
மருந்து கடை ஒன்றிற்குச்
சென்றிருந்தேன்.
முதல் வரிசை முழுக்க, கடையின் அகல முழுவைதயும் அடைத்துக் கொண்டிருக்க, நான் பின் வரிசை மனிதனாக
நின்றேன்.
கடையிலோ உரிமையாளர் மட்டுமே (அப்படித்தான் தெரிந்தார்)
இருந்தார். ஊகும்! காத்திருந்து கட்டுபடியாகாது, அடுத்த
கடைதான் என்று மெல்ல நான் நழுவப் பார்த்த வேளையில்
‘சார் ஒரு நிமிஷம் வந்துட்டேன்’ என்றார் என்னைப் பார்த்து
ஒரு புன்னகைக் கலப்போடு. அதன் பிறகு நான் காத்திருந்தது
ஏழு நிமிடங்களுக்கு மேல். அந்தப் புன்னைகை அந்த அக்கறை,
அந்த பண்பு என்னை அப்படியே கட்டிப் போட்டுவிட்டன.
வழக்கமான மருந்துக் கடைக்காரர் போல் இன்றி. ரொம்பவும்
சுவாரசியமான நபராக இருக்கிறாரே என்று ஒருநாள் பேச்சுக்
கொடுத்தேன். வாடிக்கையாளர்களை நன்கு மதிக்கிறீர்கள் அன்று நீங்கள்
சொன்ன அந்த ஒரு நிமிடத்தை மறக்க மாட்ேடன்.
சிரித்துவிட்டுச் சொன்னார். ‘‘ஓ! அதுவா? நான் எல்லாரிடமும்
கடைப்பிடிக்கிற பாணி அது. அந்த ஒரு வாக்கியம்
எல்லோரையும் கட்டிப் போட்டுவிடும்.
ஒரு வாடிக்கையாளர் என் ஊழியர்மீது புகார் செய்தால் ஊழியரை அவர் முன் கண்டிப்பேன். என் ஆள்மீது தப்பே
இருக்காது.
-
ஆனாலும், சத்தம் போடுவேன். அவர் போனபிறகு ‘‘மனசுல வச்சுக்காதே! அவருக்காக அப்படிச் சொன்னேன். அவர்
உன் முதலாளிக்கே முதலாளி தெரியுமா? என்பேன்
உங்களுக்கு கர்சன்பாய் பேடைலத் தெரியுமல்லவா?
தெரியும். வாஷிங் பவுடர் நிர்மாவின் அதிபர்.
ஆமா. அவரேதான். பெரிய நிர்வாகப் படிப்பெல்லாம்
படித்தவரல்லர். ஆனால் அவர் சொல்வாராம்.
வாடிக்கையாளர்கள் என்பவர்கள் மூன்று வகையினர்.
முதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள்.
இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல
தீர்வுகள், விடைகள் கிடைக்கும்.
அடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க
வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால்
நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விடக் கூடாது. இது
வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள்.
மூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது
அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்கைள எப்படிக்
கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம்
கவனம் செலுத்த வேண்டும் என்பாராம்.
நான் நிறைய மாறிவிட்டேன். இந்தப் பகுதியில் 60 மருந்துக்
கடைகள் இருக்கு. ஆனா, நாங்க்ள்தான்அதிக வியாபாரம்
பண்றோம்.
ஓகோ! அப்படியா சேதி?..
இதுக்குக் காரணம் என்னன்னா வாடிக்ைகயாளர்கள் பற்றிய
என் பார்வைகைள மாற்றிக் கொண்டதுதான்’’
எப்படி?
நம்ம ஆளுங்க வாடிக்கையாளர்கைள விரோதிகள் மாதிரிப் பார்க்குறாங்க. ஏதோ நம்ம கடையில நுழைஞ்சு கொள்ளையடிக்க வந்தவர்கைளப் போல நடத்துகிறார்கள்.
அப்புறம் எப்படி வளர முடியும் தொழில்ல?
ஏதோ ஜோக் சொன்ன மாதிரி விழுந்து விழுந்து சிரித்தார்
அந்த மருந்துக் கடைக்காரர்.

luv the last saying...A smile is a curve that sets everything straight...
ReplyDelete