Thursday 12 April 2012

நந்தன தமிழ் புது வருசம்

போன வருசம் தை ஒண்ணாந்தேதி வருசப் பொறப்புன்னு இருந்தத JJ ஆட்சியில பழயபடி சித்திர முத தேதிதான் தமிழ் வருச பொறப்புன்னு ஆக்கிடதால இன்னிக்கி எங்களுக்கு லீவு..

மாயரத்ல சித்திர முத தேதியன்னிக்கி அப்பா காலங்காட்டியும் புவனகிரி அய்யனார் கோவிலுக்கு (குலதெய்வம்) கிளம்பி போயிடுவாங்க..மத்தியானத்துக்கு மேலதான் வருவாங்க..
அம்மாதான் புது பஞ்சாங்கம் வச்சுப் படைப்பாங்க..வேப்பம்பூ, புளி, வெல்லம், உப்பு, ஒரைப்பு கலந்த அறுசுவை உருண்டை பண்ணி எல்லாரையும் சாப்பிட சொல்லுவாங்க. (வேப்பம்பூ, உப்புல துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு மூணு டேஸ்ட் கலந்துருக்கு ) மாங்காப் பச்சடி, போளி கட்டாயம் உண்டு..
சாயந்திரம் எல்லா கோயிலுக்கும் போயிட்டு வரணும்.. பெரியவங்க கால்ல உழுந்து ஆசி வாங்கணும்..
சில கடையில பூசைப் போட்டு புதுக் கணக்கு ஆரம்பிப்பாங்க
பஞ்சாங்கம் படிக்கிற பார்மாலிட்டி சில கடைகள்ல உண்டு.. தமிழ் நாட்ல 56 different பஞ்சாங்கம் வெளியிடறாங்க இருந்தாலும் பாம்பு பஞ்சாங்கம்தான் பேமஸ்..
புது வருசம் எப்படி இருக்கும்ன்னு அதுல ஒரு பாட்டு( வெண்பா ) இருக்கும்.

இந்த நந்தன ஆண்டின் கலி வெண்பா என்ன சொல்லுது...

"நந்தனத்தில் மாரியுறும் நாடெங்கும் பஞ்சமாகும்
நந்துமுயின் நோயா நலியுமே - அந்தரத்தின்
மீனுதிருந் தூமமெழு மிக்க கெடுதியுண்டாம்
கோன் மடிவானென்றே நீ கூறு"

இதன் அர்த்தம் : நந்தன ஆண்டில் குறைவான அளவு மழை பெய்யும். விளைச்சல் குறையும். பஞ்சம் அதிகரிக்கும். உயிரினங்களுக்கு நோய்கள் உண்டாகும். புதிய நோய்களால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். விண்மீன்கள் உதிரும். சுற்றுசூழல் பாதித்து புகை மண்டலம் ஏற்படும். நன்மைகள் குறைந்து தீமைகள் அதிகரிக்கும். ஆட்சியாளர்கள், தலைவர்கள் கண்டத்தை சந்திக்க வேண்டி வரும்.


இந்த கஷ்டங்கள்லாம் கொறைய நம்ம ஜோதிட பூஷன், சாஸ்திர கலாநிதி போன்ற பட்டங்கள் பல ஆயிரம் பெற்ற ஜலீல் பிப்ரனை அணுகியபோது அவர் இலவசமாக அருளிய பரிகாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

போன வருசம் ஜோதிடர் ஜலீல் பிப்ரன் தந்த ராசி பரிகாரங்கள் அமோக வரவேற்பைப் பெற்றாலும் சில பிரச்சனைகள் எழுந்தன. குறிப்பாக " நமீதாம்பாளுக்கு நெய் விளக்கு, மல்லிகா செகாவத்தம்மனுக்கு மஞ்சளாடை சாத்துவது" போன்ற பரிகாரங்கள் ராசிகாரர்களிடையே போட்டியையும், பொறாமையையும் உருவாக்கி விட்டது, அதனால் இந்த ஆண்டு பரிகாரங்களை எளிமையாக கருணையுடன் சொல்லியிருக்கிறார்.

நந்தன ஆண்டு பரிகாரங்கள் -

1. அமலா பாலம்மன் கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்

2.சந்திர பிறையைப் பார்த்துக்கொண்டே சொறி நாய்க்கு பொறை பிஸ்கட் ஊட்டவும்.

3.தலைகீழாக நின்று " வொய் திஸ் கொலவெறி" பாடலை பாராயணம் செய்யவும்

4 தினமும் தொடர்ந்து இடைவிடாமல் மூணு மணி நேரம் தயிர் சாதம் சாப்பிடவும்

5 பன்னிரண்டு ராசி கோவில்களிலும் பிசிபேளாபாத் படையல் போடவும்

6 ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு நீர் யானை வாங்கி உபயம் செய்யவும்

7 பீட்ஸா கொழுக்கட்டை செய்து அவ்வப்போது பிள்ளையாருக்கு படைக்கவும்

8 பத்ரிநாத் பகவானை பாதயாத்திரை சென்று தரிசிக்கவும்.

9 நவரத்தின கற்கள் வாங்கி ஜலீல் பிப்ரனுக்கு அனுப்பி அவர் தரும்
நவரத்தின கலர் சட்டையை தினமும் அணியவும்.

10 கேர்ல் ஃபிரெண்ட்ஸ் இல்லாத பத்து பையன்களுக்கு லவ் ட்யூசன் எடுக்கவும்
.
11 கழுதை மேலேறி சதுரகிரி வலம் வரவும்

12 பகல் பன்னிரண்டு மணிக்கு பாலாற்று நடுவுல உட்காந்து மண்சோறு சாப்பிடவும்.

இந்த பன்னிரண்டு பரிகாரங்களையும் தனித்தனியே பேப்பரில் எழுதி சுருட்டி ஒரு ஜாடிக்குள் போட்டு குலுக்கி உங்கள் கனவு நட்சத்திரத்தை வேண்டி ஒரு பேப்பரை எடுத்து அதில் சொல்லியபடி நடந்தால் நந்தன ஆண்டு மிக மகிழ்ச்சியான பலன்களைத் தரும்.

உடனடி பலன்கள் வேண்டுவோர் செக்புக்கோடு அல்லது பணப்பையோடு ஜோதிடர் ஜலீல் பிப்ரானை அணுகலாம்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
வாழ்க வளமுடன்!

10 comments:

  1. hahaha... Jhalil Pibranக்கு பேப்பர் சுருட்டி போட்டதில் எந்த பரிகாரம் வந்ததோ?? :)

    இனிய நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. உளங்கனிந்த, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!

    With dire predictions from the பஞ்சாங்கம், we need more JP Jokes to laugh it all off :))

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய "நந்தன" தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

    Eagerly for your answer (ref:Sheila's question!!! :):):):))

    ReplyDelete
    Replies
    1. அமலாபாலம்மனே பரிகாரம் கேட்டு ஜலீல் பிப்ரன் கிட்ட appointment கேட்டுருக்காங்கன்னா பாத்துக்குங்களேன்..!

      Delete
    2. haha... இப்ப நமிதாம்பால் போய் அமலாபாலம்மன் வந்தாச்சா?? :)

      Delete
  4. @ Sheila,
    அ"மாலா"பாலம்மன்"-வில் "மாலா" இருப்பதால், அமலாபாலம்மன் வந்தாச்சு!!:)::)

    ReplyDelete
  5. JP,

    i got - "அமலா பாலம்மன் கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்" :)

    ReplyDelete
    Replies
    1. heyy...பொய் சொல்லாதே.... Subha told me you got..

      கழுதை மேலேறி சதுரகிரி வலம் வரவும் :))

      Delete
    2. வொய் திஸ் கொலவெறி"

      Delete
    3. எல்லாம் டைம் பாஸ்ஸூ பாஸ்ஸூ .... :)

      Delete