Showing posts with label BHEL ATK. Show all posts
Showing posts with label BHEL ATK. Show all posts

Tuesday, 4 October 2016

BHEL அறிவுத்திருக்கோவில் ஆண்டு தினம்

இன்று அறிவு  திருக்கோவில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.




இந்த நல்ல நாளில் இத் திருக்கோவிலின் வளர்ச்சிக்காக 
அயராது  தொண்டாற்றிவரும் அத்துணை அருட் தொண்டர்களின் 
பாதம் பணிந்து 
வாழ்த்தி வணங்குகின்றேன்,
வாழ்க வளமுடன்!

To see earlier posts click here 


Saturday, 24 May 2014

பட்டமளிப்பு விழா

பட்டய  மற்றும் பட்டதாரிகள்

M Sc பட்டம் பெறும் JP 

M Sc பட்டம் பெறும் மாலா

பட்டதாரிகளுடன்  குரூப்  போட்டோ

நேற்று BHEL அறிவுத் திருக்கோவிலில் நடைபெற்ற பட்டய மற்றும் பட்டம் வழங்கும் விழாவில் எடுத்த போட்டோக்கள் மேலே -

மொத்தம் 70 பேருக்கு மேல் பட்டம் பெற்றனர்.

நானும், மாலாவும் M Sc ( யோகமும் மனித மாண்பும் ) பட்டம் பெற்றோம்.

Friday, 4 October 2013

BHEL அறிவுத்திருக்கோவில் ஆண்டு தினம்


இன்றுடன் BHEL அறிவுத்திருக்கோயில் திறக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது.

2004ம் ஆண்டு நிலம் வாங்கப்பட்டு மகரிஷி அவர்கள் ஆசீர்வதித்தபடி
 ( " நீங்கள் அமைக்கப்போகும்  அறிவுத்திருக்கோயில் பன்னாட்டு மையமாகத் திகழும். உலகின் பல பாகங்களிலிருந்து அன்பர்கள் இங்கு வந்து பயிற்சி பெறுவார்கள்") நன்கு திட்டமிட்டு மூன்று தளங்களுடன் அமைக்கப்பட்டு 4-10-2009ம் தேதி திறப்பு விழா நடந்தேறியது. 


ஒரு ஏக்கருக்கும் மேலாக உள்ள நிலத்தில் சுமார் 8000 சதுர அடி பரப்பில் அறிவுத்திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.  மூன்று தளங்களிலும் சேர்த்து 500 அன்பர்கள் ஒரே நேரத்தில் பயிற்சி பெறலாம். 

சென்ற ஆண்டு நிகழ்ந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அன்பர்களின் வாகனங்கள் கோயில் வளாகத்தில் நிறுத்தப் பட்டிருப்பதை கீழ்கண்ட போட்டோக்களில் காணலாம்.




கோயிலுக்குஎதிரேஉள்ள35000 சதுரஅடிபரப்பளவில்ஓர்ஆழ்நிலைதியான மண்டபம், பூங்கா, நிர்வாக அலுவலகக் கட்டிடம், இலவச மருத்துவ மனை, நூலகம், சிறுவர் விளையாடுமிடம், நூறு பேர் தங்கி பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ஹாஸ்டல், உணவகம் என ஏகப்பட்ட எதிர்கால திட்டங்கள்  மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கோயில் கட்ட வாங்கப்பட்ட பல லட்ச ரூபாய் கடன் திருப்பித் தந்துவிட்ட படியால் எதிர்காலத் திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற 
இன்று உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.

எதிர்காலத்தில் திருச்சி மலைக்கோட்டை, கல்லணை, தஞ்சை பெரியகோயில் வரிசையில் நம் அறிவுத்திருக்கோயிலும் ஓர் உன்னத 
landmarkகாக திகழும்.

இந்த நல்ல தினத்தில் தங்களின் மேலானவாழ்த்துக்களையும், ஆலோசனைகளையும் வேண்டுகிறோம்.

சென்ற ஆண்டு post  செய்ததைப் பார்க்க இங்கே செல்லவும்.

Monday, 15 July 2013

விகடன் @ BHEL அறிவுத் திருக்கோவில்

7-7-2013 அன்று சக்தி விகடன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல ஊர்களிலிருந்து அன்பர்கள் வந்திருந்தனர். அப்போது எடுத்த போட்டோக்களில் சில -

BHEL  அறிவுத் திருக்கோயில் 


நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் 


JP  & விகடன் குழு அன்பர் 



மனவளக்கலை பற்றிய அறிமுக உரை 

Thursday, 17 January 2013

சமத்துவ பொங்கல்

15-1-2013 அன்று மாலை அறிவுத் திருக்கோவிலில்
சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
100 அன்பர்களுக்கு மேல், எல்லா மதத்தினரும் குடும்பத்துடன்
வந்திருந்து சிறப்பித்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களில் ஒரு சில -

ஸ்ரீராம் & JP



பொங்கலுக்கு வேண்டிய பொருள்களைத் தயார் செய்யும் தலைவி



பொங்கல் செய்ய உதவும் ஸ்ரீராம்

சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சி தொகுப்பாளர் JP

கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள்

Thursday, 4 October 2012

BHEL அறிவுத்திருக்கோவில் ஆண்டுதினம்

4-10-2009 அன்று  6000 அன்பர்கள் முன்னிலையில்   திறக்கப்பட்ட அறிவுத்திருக்கோவில் இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று நான்காம் ஆண்டு துவங்குகின்றது.
திறப்புவிழா போட்டோக்களில் சில - 
10 ஜோடி நாதஸ்வர மற்றும் தவில் வித்வான்களின் இன்னிசை முழங்க உலக சமுதாய சேவை சங்க தலைவரை மேடைக்கு அழைத்து வருகிறோம் 

தவத்திரு அண்ணா சுவாமிகள் மூலமாக தலைவருக்கு ரூ 100000/ குரு காணிக்கை வழங்கப்படுகின்றது 

குத்து விளக்கேற்ற US லிருந்து வந்த உஷா முத்துக்குமார்  

அறிவுத்திருக்கோவிலைத் திறந்து வைத்து விழா மேடைக்குத் திரும்பும் VIPs 

விழா மேடையில் உரை நிகழ்த்தும் மாலா 

Thursday, 30 August 2012

மனைவி நல வேட்பு நாள்


மனைவி நல வேட்பு நாள் (AUG 30) 

உலகில் இதுவரை தந்தை நாள் (Father's day), தாயார் நாள் (Mother's day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா ? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆவது நாளை மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் 
உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.

பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.


- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி




கடந்த பல ஆண்டுகளாக மனைவி நல வேட்பு நாள் தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகின்றது.இந்த ஆண்டு BHEL  அறிவுத் திருக்கோவிலில் செப்டம்பர் 19 ம்  தேதி  இந்த விழாவினை நடத்துகின்றோம். பத்து நாட்கள் முன்னே திருச்சி நகரில் நடைபெற்றது. நாளை இரூர் கிராமத்திலும், வரும் ஞாயிற்றுக் கிழமை சேலத்திலும், அடுத்த ஞாயிறு மணப்பாறையிலும் நடைபெறும் நிகழ்சிகளில் நாங்கள் கலந்து கொள்கின்றோம்.

Mala & Jp @ BHEL Temple of Consciouness  2010


சென்ற ஆண்டு  -









18-9-2011

உன்னை கரம் பிடித்தேன், 

வாழ்க்கை ஒளிமயம் 


ஆனதடி



Tuesday, 10 April 2012

BHEL அறிவுத் திருக் கோவில் - 4




அஸ்திவார பூஜை


அஸ்திவாரம் தோண்டும் மாலா


காண்டிராக்டர் அருள்செல்வனுடன்


அஸ்திவார ஆரம்ப வேலைகள்

104 அஸ்திவார தூண்கள்


விலைவாசி அதிகமா போய்கிட்டிருந்ததால உடனடியா வேலைகள ஆரம்பிச்சு திறப்பு விழா நடத்த ஆசப் பட்டோம். மறுபடியும் ஒரு நல்ல நா பாத்து அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிச்சோம். பத்து அடியிலியே தண்ணி எக்கச்சக்கமா ஊறி வர ஆரம்பிச்சிச்சு..இந்த தண்ணியை எறச்சு அஸ்திவார வேலைகளைப் பாக்க மாத்திரம் நாலு லட்ச ரூபா செலவு..ரெண்டு ஆயில் பம்பு தண்ணிய ஏறச்சுக்கிட்டே இருந்துச்சி..


நிதி நெலம சரியில்ல.. அருள்செல்வன்கிற
மன்ற தொடர்புடைய காண்டிராக்டர் கிடைச்சாரு.. பணம் இருக்கும்போதெல்லாம் வேல செஞ்சு கொடுப்பாரு..மன்றத்துல பயிற்சி எடுத்தவங்க எல்லாம் தாராளமா நிதி கொடுத்தாங்க..அஸ்திவாரம் ஆரம்பிச்ச நாள்லேயிருந்து திறப்பு விழா வரைக்கும் வேல செஞ்ச அத்தனைப் பேருக்கும் மத்தியான சாப்பாடு தெனம்தோறும் மாலா தம்பி குமார் செலவுல போட்டோம். வேல செஞ்சவங்களுக்கு செருப்பு, துண்டு இதெல்லாம் மாலா கொடுத்தாங்க..
மொத்தம் 104 தூண்கள் எழுப்பி மூணு தளங்களா கட்டடத்த எழுப்ப ஆரம்பிச்சோம்..

Wednesday, 4 April 2012

BHEL அறிவுத் திருக் கோவில் - 3


அடிக்கல் நாட்டு விழா தகவல் பலகை

திருச்சி கலைக்காவிரி நடன குழுவினருடன்...

தனஆகர்ஷன சங்கல்பம் செய்யும் அன்பர்கள்
கல்வெட்டினைத் திறந்து வைக்கும் WCSC தலைவர் அ/நி SKM மயிலானந்தம் அவர்கள்

மார்ச் 28 2006 மதியம் நண்பர் போன செய்து
"மகரிஷி மறைவு செய்தி சன் டிவியில் flash news ஆக
ஓடிக்கொண்டிருக்கிறது " என்றார். சிறிது நேரத்தில்
நிறைய பேர் போன் செய்து விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்..
சிலர் போனிலேயே அழ ஆரம்பித்து விட்டனர். மற்றவர்களுக்கு
ஆறுதல் சொல்ல முடியாமல் என் குரலும் choke ஆகிவிட்டது..

அறிவுத் திருக்கோவிலின் வரைபடங்கள், அடிக்கல் நாட்டு விழா செய்திகளை
மகரிஷி அவர்களிடம் சொல்லி ஆசி கேட்க திட்டமிட்டிருந்தபோது
மகரிஷியின் மறைவு செய்தி எங்களை மிகவும் பாதித்தது.
நாங்களே எங்களைத் தேற்றிக் கொண்டோம். வான்காந்தமாய் நின்று மகரிஷி வழி நடத்துவார்கள் என்ற உறுதியுடன் செயலாற்ற துவங்கினோம்.

திட்டமிட்டபடி 22 -8 -2006 அன்று உலக சமுதாய சேவா சங்க தலைவர்
அருள்நிதி SKM மயிலானந்தனைக் கொண்டு அடிக்கல் நாட்ட முடிவு செய்தோம். 21 ம் தேதி மாலை BHEL MD ஹாலில் திருச்சி கலைக்காவிரி குழுவினர் கொண்டு மகரிஷி தத்துவங்களை நாட்டிய நிகழ்ச்சியாக நடத்தவும் விரும்பினோம்.

அடிக்கல் நாட்டு விழாவை காலை ஏழரை மணிக்கு வைத்துக் கொள்ள திட்டமிட்டு சுமார் 1500 பேர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு நிலத்தை சீர்செய்து
அமர்வதற்கு புத்தம்புது பாய்கள் வாங்கினோம்.
ஆகஸ்ட் 21 ம் தேதி கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது காற்றுடன் கூடிய மழை அடுத்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை சின்னாபின்னப்
படுத்தி விட்டது.. நிலத்தில ஒரு அடி தண்ணீர் தேங்கி நின்றது.. மேடை, ஷாமியானா எல்லாம் வீணாகி விட்டன.
இரவோடு இரவாக பம்பு செட் வைத்து எல்லா நீரையும் இறைத்து 1500 நாற்காலிகள் வரவழைத்து காலை ஐந்தரை மணிக்கு தன ஆகர்ஷன சங்கல்பத்தை தொடங்கினோம்

1500 பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள்.
மன்ற அன்பர் ஒருவரின் லாரி ட்ரைலரை மேடையாக மாற்றி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினோம்.அத்துணை பேருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்திருந்தோம்.

முதல் நாள் நடந்த கலைநிகழ்ச்சியும் , அடிக்கல் நாட்டு விழாவும் மிக, மிக சிறப்பாக நடந்தேறின..

மன்றத் தன்னார்வத் தொண்டர்களின் இரவுபகலான உழைப்பை பாராட்டாதவர்களே இல்லையெனலாம்..


இந்த நிகழ்ச்சி நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற உற்சாகத்தைத் தந்தது..





























Saturday, 31 March 2012

BHEL அறிவுத் திருக்கோவில் - 2





உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் அறிவுத் திருக் கோவில் பூமிக்கு
வந்தபோது எடுத்த படங்கள் ( 2005 )


வேதாத்திரி நகர் நெலம் மொத்தம் அஞ்சு ஏக்கரு.. அத 54 ப்ளாட்டாப் போட்டு
அதுல ஒரு ஏக்கர் அறிவுத் திருக்கோவில் வளாகமா ஒதுக்குனோம்.
மத்த இடத்த தொண்டு செய்ய ஆர்வமா உள்ள மன்ற அன்பர்கள் எடுத்துகிட்டோம்..
மகரிஷிகிட்ட layout ஐ காட்டி கோவில் வர்ற இடத்துல அவரோட கையெழுத்த வாங்குனோம்..அப்ப அவரு .. " நீங்க கட்டப் போற இந்த கோவிலுக்கு நா ஒரு லட்சம் தாரேன் " ன்னு சொன்னாரு..நாங்க என்ன முடிவு பண்ணுனோம்னா -
" நாமதான் குரு காணிக்க தருணுமே தவிர அவர்கிட்ட பொருள் வாங்கக் கூடாது.. அருள் ஒன்றே போதும். கோவில் திறப்பு விழாவுக்கு கூப்பிடும்போது அவர் சொன்ன ஒரு லட்சத்தை குரு காணிக்கையா வச்சு அழைக்குணும் " ன்னு வந்துட்டோம். இருந்தாலும் குரு கையால ஒரே ஒரு ரூபா வாங்கி நிதி திரட்ட ஆரம்பிக்க ஆசப் பட்டோம்.

மகரிஷிக்கு இந்த தகவலைச் சொல்லி அவங்ககிட்ட ஒரு ரூபா வாங்க பத்து பேர் போனோம். அவரு தரப்போற காசை வைக்க ஒரு வெள்ளிப் பேழை வாங்குனோம். அவரு ஒரு ரூபாவுக்கு பதிலா அஞ்சு ரூபா காசைக் கொடுத்துட்டு " சந்தோசம்தானே" ன்னாரு..
அப்ப அவருக்கு நன்றி சொல்லிட்டு நா சொன்னேன் - " சாமி.. ஒங்ககிட்ட ஒரு ரூபா வாங்கி ஒரு கோடியில கோவில் கட்ட ப்ளான் போட்டேன். நீங்க அஞ்சு ரூபா கொடுத்ததால எங்க ப்ளானை அஞ்சு கோடிக்கு மாத்திட்டேன்!" ( நிஜமாகவே இன்று நாங்க கட்டியிருக்கும் BHEL அறிவுத் திருக்கோவில் மொத்த மதிப்பு அஞ்சு கோடிக்கு மேல..)


சாமி சிரிச்சுகிட்டே " நீங்க முதல்ல அடிக்கல் நாட்டுங்க.. உங்க பூமி தனக்குத் தேவையானத வாங்கிக்கும்.. உங்க புண்ணிய பூமியில கால் வைக்கிறவங்க அங்க வேலையும் செஞ்சு கொடுத்திட்டு நிதியும் கொடுப்பாங்க" ன்னு
வாழ்த்துனாங்க,,


" சாமி, நீங்கதான் அடிக்கல் நாட்டு விழாவிற்கும், கோவில் திறப்பு விழாவிற்கும் வந்து உங்க பொற்கரத்தால துவக்கி வைக்கணும்" ன்னு கேட்டதுக்கு சாமி உடனே " வந்துட்டாப் போச்சு!" ன்னு சொல்லி எங்கள சந்தோசப் படுத்துனாரு..

சாமி ஆசீர்வத்திதது மாதிரி பன்னாட்டு மையமா நம்ம கோவில் வரணும்ன்னு
பெஸ்ட் ஆர்க்கிடெக்டா தேடுனோம்.. தலைவர் SKM மயிலானந்தத்தின் அறிவுரை பேரில் Horizon Arcitects ஐ ஒப்பந்தம் செய்து கோவில் டிசைனை ஆரம்பிச்சோம். அடிக்கல் நாட்ட தேதி குறிச்சோம்.
வேதாத்திரி நகர்ல வீடு கட்டுறவங்க முழு நேர தொண்டுல வாழப் போறதால அவங்க வீட்ல கிச்சன், ஸ்டோர் ரூம் தேவையில்ல.. common கிச்சன் வச்சுக்கலாம்ன்னு திட்டங்கள் தீட்டிக்கிட்டுருந்தப்ப...


வந்த சேதி எங்கள நிலைகுலைய வச்சுடுச்சு,,

தொடரும்...









Wednesday, 28 March 2012

BHEL அறிவுத் திருக்கோவில் - 1












2004 லில் வேதாத்திரி நகர்



















வேதாத்திரி தவச் சாலை














மகரிஷி நினைவு நாளான இன்று  அவரைப் பற்றியேஎண்ணிக்கொண்டிருந்தேன்.. மாலா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளஆழியாறு சென்றுவிட்டாள். மலரும் நினைவுகளில் சிலவற்றைத்தொடர்ந்து இங்கு தர இருக்கின்றேன்..


BHEL அறிவுத் திருக்கோவில் உருவான வரலாறு


1997 ம் ஆண்டு மகரிஷி இங்கு வந்தபோது மூன்று நாட்கள்தங்கியிருந்தார்கள். நாங்கள் நடத்திய காந்தத் தத்துவக் கருத்தரங்குமகரிஷிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது..அப்போது அவர்கள் " நீங்கள் அமைக்கப் போகும் அறிவுத் திருக்கோவில்பன்னாட்டு மையமாகத் திகழப் போகிறது.. உலகின் பல பாகங்களிலிருந்தும்அறிஞர்கள் இங்கு வந்து பயிற்சி பெறுவார்கள் " என்று வாழ்த்தினார்கள்.




அதுவரை நாங்கள் அறிவுத் திருக் கோவிலைப் பற்றி எண்ணவே இல்லை..மகரிஷி போட்ட விதை 2004 ம் ஆண்டு முளைக்க ஆரம்பித்தது..பல இடங்களில்இக்கோவிலுக்காக இடம் தேடி அலைந்தது ஒரு பெரிய கதை..கடைசியாக திருச்சி - தஞ்சை சாலையில்எல்லோரும் வந்து போகும்படியான இடத்தை தேர்வு செய்து வேதாத்திரி நகர் உருவாக்கினோம்.


அங்கு முதலில் வேதாத்திரி தவக் குடில் துவங்கினோம்..


தொடர்ச்சி அவ்வப்போது வரும்..