Monday 6 February 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 1



தை பூசம் வரப்போகுதுன்னாலே ரெண்டு குரூப் சுறுசுறுப்பா வேலைகளை
ஆரம்பிச்சுடும் - ஒண்ணு காவடி இன்னொண்ணு முருகன் அபிஷேகம்!

ரெண்டு குரூப்பும் ஒரு நோட் புக்கை கையிலேடுத்துக்கிட்டு வீட்டுக்கு
முதல்லே வருவாங்க.... "தை பூசத்தில பொறந்த பய....ராசியான கையி.." அப்படின்னு சொல்லி அம்மாகிட்ட பணத்தை வாங்கிப்பாங்க.. நெறைய பேரு காவடி எடுக்க விரதமிருப்பாங்க... காவடியிலே சொருக மயில் தோகை வாங்க வெளியூரு போவாங்க..

பூசததன்னிக்கு காவடி எடுத்துக்கிட்டு ஒவ்வொரு தெருவா சுத்திக்கிட்டு
கடைசியிலே பூசிமுண்டா ( புனுகீஸ்வரர் ) கோவிலுக்கு போவாங்க..
காவடி ஒவ்வொரு வீட்டிலேயும் நிக்கும்போது காவடி எடுக்கிறவங்க காலைக் கழுவி ( பாதபூஜை ) தீபாரனை காட்டுவாங்க..

கோவில் யானை ஊருல இருந்தா அதுவும் கூட வரும்.. அப்பா அதுக்குன்னே ரெண்டு கட்டு கரும்பு வாங்கி வைச்சிருப்பாங்க ..அப்பாவை பாத்தாலே யானைக்கு சந்தோசம்.. ஒரு வினோத குரல்ல மகிழ்ச்சியைக் காட்டும்..யானை கரும்பு சாப்புடற அழகைப் பாத்துக்கிட்டே இருக்கலாம் அப்புறம் அது குடிக்க காபி வச்சிருக்கணும்....ஸ்ட்ராங் காபிதான் அது சாப்பிடும்.. காளியாகுடி, மயூரா ஹோட்டல் காபி சாப்பிட்டு பழகுன யானை!


சாயந்திரம் கோவிலுக்கு போய் முருகனுக்கு அர்ச்சனை பண்ணிக்கிட்டு வருவோம். அம்மா இருந்தவரைக்கும் யாருக்கு பொறந்த நாளுன்னாலும் அர்ச்சனை பண்ணி திருநீறு அனுப்பறது நடந்துகிட்டே இருந்திச்சு......
அப்புறம் ராத்திரி சன்மார்க்க சங்கத்தில வள்ளலார் படம் வச்சு ஒரு தேரு ஒன்னைத் தள்ளிக்கிட்டு வருவாங்க.... டைலர் மாணிக்கம் வீட்டுக்கு வந்து டொனேசன் வாங்கிப்பாரு.. அம்மாகிட்ட "பூசத்துல பொறந்த இந்த பையன் பேரை ராமலிங்கமுன்னு மாத்துங்க"ன்னு சொல்லுவாரு..


தை பூசததன்னிக்கு இன்னொரு வழக்கமும் இருந்திச்சு... ஒரு குழந்தை பொறந்து அதன் முத தை பூசததன்னிக்கு அதுக்கு வேட்டிக் கட்டிவுட்டு நகை போட்டு அத தெய்வமா வழி படணும்.. எல்லாரும் குழந்த கால்ல விழுந்து வணங்கணும்... கடசியா ஸ்ரீராமுக்கு இப்படி பண்ணுனோம்..
அபப எடுத்த போட்டோதான் மேலே இருக்கிறது....


( கோவில் யானை வீட்டுக்கு வந்தா குட்டி பசங்களை அது மேல வச்சு ஓட விடறது.. . யானை கால்களுக்குள்ளே குழந்தைய சுத்திசுத்தி எடுத்து யானை மூச்சை ஊத சொல்றது.. இப்படி யானையைப் பத்தியே நெறைய இருக்கு.. மாயூரம் மயூரநாதர் கோவில் யானை.. ...பேரு அபயாம்பா.... இந்த யானையோட black & white போட்டோ ரொம்ப நாளு எங்கிட்ட இருந்து அப்புறம் காணாமப் போயிடுச்சு )

10 comments:

  1. Kaavadi and elephant fresh in my memory..
    you forgot to mention that during kaavadi, யாருக்காவது சாமி வந்து ஆட ஆரம்பிச்சுடுவாங்க :)

    heyy Sri...nice to see you in பட்டு வேஷ்டி :)

    ReplyDelete
    Replies
    1. காவடி தூக்கிக்கிட்டு வந்தாலே ஆடிக்கிட்டுதான் வரணும்.... ஒரு சிலருக்கு சாமி வந்துடும்.. அவங்களுக்கு கிடைக்கிற மரியாதையைப் பார்த்து பலபேர் சாமி வந்தா மாதிரி நடிப்பாங்க..!!

      Delete
    2. I remember it always happening at our house and I would get scared and run away inside :)
      Also remember kaavadi taking a 'shade break' at our house

      I think I have a photo of siva's dad carrying kaavadi...will check my collection

      Delete
  2. I have no clue abt this Chithappa. Thx for the enlightment.

    ReplyDelete
    Replies
    1. Diana
      These are the special experiences (memories) of growing up in MYM!!

      Delete
  3. JP, love your simple, classic style write-ups.

    Elephant drinking coffee, that too, strong coffee?

    ReplyDelete
  4. This festival is famous in Triplicane too....காவடி, milk pot, முருகன் அபிஷேகம் சாயந்திரம் கோவிலுக்கு போய் முருகனுக்கு அர்ச்சனை.....

    ReplyDelete
  5. இந்த யானையோட black & white போட்டோ ரொம்ப நாளு எங்கிட்ட இருந்து அப்புறம் காணாமப் போயிடுச்சு - JP, love this sentence!

    Continue writing like this, i'am enjoying!

    ReplyDelete
  6. sooper write-ups.. just got nostalgic :) thanks chitappa!
    chitappa, thirumba eppo sriya pattu vestila paaka porom?

    ReplyDelete
  7. Siva,

    அது உன் கையில்

    ReplyDelete