Wednesday 29 February 2012

இசை ஞானம் - 2

இசை ஞானத்தைப் பத்தி எழத யோக்கித இருக்கான்னு
யோசிச்சப்ப நெறைய இருக்குங்கறத அடக்கத்தோட
சொல்லிக்கிட்டு ஆரம்பிக்கிறேன்...

சின்னவயசுல ஸ்கூல்ல பாட்டு பாடியிருக்கிறேன்..
இல்ல..இல்ல.. பாட்டு பேசியிருக்கேன்..!
கிலுகிலுப்பை, ஊதல், விசில், கொட்டாங்கச்சி வயலின், மவுத் ஆர்கன், புல் புல் தாரா
போன்ற இசை கருவிகளை கையாண்டிருக்கேன்..

BHEL ல்ல டிரைனீயா சேந்தப்ப எங்களுக்கு இசை ஞானத்த
ஊட்டுனும்ன்னு ரெண்டு நாள் கிளாஸ் " music appreciation " ங்கிற
பேர்ல நடத்துனாங்க.. திருச்சி ஆல் இந்தியா ரேடியோவிலிருந்து
இசை கலைஞர்கள் வந்து எப்படி இசையை ரசிக்கனும்ன்னு சொல்லி குடுக்க முயற்ச்சித்தாங்க..!
கேள்வி பதில் session ல்ல ஒரு பாடகர்கிட்ட " நீங்க பாடும்போது ஏன் கையை பல கோணத்துல ஆட்டுறீங்க? மூஞ்சியை அஷ்டகோணலா ஆக்கி பயமுறுத்துறீங்க ? " - இப்படில்லாம் கேட்டு எங்க சந்தேகங்களை எல்லாம் போக்கிக்கிட்டு இசை தாகத்தை வளத்துக்கிட்டோம்!
எங்க இசை தாகத்தைத் தீத்துக்க சரஸ்வதி வித்யாலயாகிடைச்சது..அங்கவாய்ப்பாட்டு ,வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல்எனஎல்லாம்சொல்லிக்கொடுத்தாங்க... வீணை
மற்றும் வாய்ப்பாட்டு வகுப்புகள்ல வயசு பொண்ணுங்க நெறைய இருந்ததால நாங்க அஞ்சுபேரு அந்த வகுப்புகள்ல சேந்தோம்..
நான், டேனியல், சண்முகம், சௌந்தரராஜன்&எத்திராஜுலு அஞ்சுபேரும் பாட்டுவாத்தியாரை ஒருவழி பண்ணிட்டோம்..
ஸா...பா..ஸாவை நாங்க அஞ்சுபேரும் ஒவ்வொருமாதிரி சொல்லுவோம்...வாத்தியாருக்கு சுருதி சேக்கவே முடியல...
சௌந்தரரஜனைத் தவிர நாங்க சுதிசேந்தோம்..சவுண்டிக்கு மாத்திரம் 'ஸா' சரியாவரல..கடைசியில வாத்தியார் அவன்கிட்ட
" உனக்குசாவேவராது " ன்னு வாழ்த்தி அனுப்பிவச்சாரு...நாங்களும் தினமும் சாதகம் பண்ணி தாளம் போட ஆரம்பிச்சோம்.
எங்க தப்புதாளத்தைப் பாத்து பொண்ணுங்க சிரிச்சதுனாலே நானும், டேனியலும் வாய்ப்பாட்டுக்கு முழுக்கு போட்டோம்.
வீணை கொஞ்சம் ஈசியா இருந்துச்சி..ஆனா
ட்ரைனிங் பீரியட் முடிஞ்சு திருச்சிக்கு வந்துட்டதாலே
வீணையை ஒழுங்கா கத்துக்கல..

அப்பப்ப வீட்ல சினிமா பாட்டு பாடுவேன்..
உடனே மாலா வீட்டுக்கு வெளியே ஓடிவந்து
பக்கத்து வீட்டு லேடிகிட்ட
" நா ஒண்ணும் JP ஐஅடிக்கல..
அவரு அழல..பாட்டுபாடறாரு " - அப்டீன்னு சொல்லி
சொல்லி என்னை ஒரு வழி பண்ணிட்டா!

இசை உலகம் ஒரு இசைஞானியை இழந்துவிட்டது!





3 comments:

  1. I was disappointed in not seeing your veenai photo in your previous post, guess you were saving it for this :)

    சினிமா இசை ரசிகன் / ரசிகை யும் ஒரு இசை ஞானிதான்! (including myself as the ரசிகை) :)

    ReplyDelete
  2. JP,

    even Daniel learned வாய்ப்பாட்டு ?..I can't imagine him singing..btw, I still remember him..

    நா ஒண்ணும் JP ஐஅடிக்கல..அவரு அழல..பாட்டுபாடறாரு - SUUUPERB, Mala at her peak...BUT now you can enjoy..:)

    next time, when i come to Trichy. will enjoy your singing and we'll make Malooo to Dance (if she can, which i doubt)

    ReplyDelete
  3. ha ha ; unakku saave varathu :) Sooper! and also mala's timing comment soopero sooper!~

    ReplyDelete