Showing posts with label ஞானம். Show all posts
Showing posts with label ஞானம். Show all posts

Thursday, 25 December 2014

ஞானம்....2


நீ அடுத்தவர்களைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை.
 அது பண்பாடால்ல. அது நல்லதுமல்ல. அது நாகரீகமற்றது, மனிததன்மை அற்றது. நீ அடுத்தவர்களைப்பற்றி அக்கறை கொள்ளக் கூடாது. 
நீ எதற்கு கவலைப்பட வேண்டும் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க நீ யார்? 
அடுத்தவர்கள் இதைத்தான் செய்ய வேண்டும், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நீ முடிவெடுக்க நினைக்கும் இந்த நினைப்பே, அதிகாரம் பெற்றவனாக இருக்கும் அரசியல் ஆசையை, அடக்கி வைத்ததன் விளைவே, அதன் வெளிப்பாடே. 

ஆகவே காலத்தை வீணடிக்காதே. 

உன்னைப் பார்.

Wednesday, 19 November 2014

ஞானம்....1


இனிமையான வாழ்வுக்கு 
இன்றியமையாத சாதனம்

மனிக வாழ்வுக்கு இறையுணர்வு மிகவும் அவசியமானது. இறையுணர்வு என்பது நம்பிக்கை. அது என்ன நம்பிக்கை (Fath) என்றால்  “ஒரு பெரியசக்தியானது பிரஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது, அது என்னள்ளும் இருக்கத்தான் வேண்டும், நான் பிறப்பதற்கு முன்னேயும் இருந்தது, எனக்குப் பின்னாலேயும் இருக்கும்.

அந்தச் சக்தி முன்னும் பின்னுமாக எல்லா இயக்கங்களையும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், இப்பொழுதும், எப்பொழுதும் அது ஊடுருவி நிறைந்து இயங்கிக் கொண்டுதானே இருக்கும்” – இவ்வாறு நமக்கு  அப்பாற்பட்ட ஒரு சக்தி முழ்மையாக இருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையின் மேல் செயல்களை ஒழுங்கு செய்து கொள்வதுதான் “மதம்” (Religion) என்பதாகும்.

அதற்கு மேலாக எவ்வாறு அந்தப் பரம்பொருள் நிறைந்த ஒன்று, மறாத  ஒன்று, எல்லாவற்றையும் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது, அது நமக்குள்ளாக எப்படி இயங்கிக் கொண்டு இருக்கிறது, நாமாக எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து, அதிலேயே உறைந்து, அதுவே தானாக, தானே அதுவாக இருப்பது தான்  “ஞானம்”.

Thursday, 11 October 2012

சிரிப்பு ஞானம் - 13 ( Imported )


Ratio of an igloo's circumference to its diameter: Eskimo Pi

2000 pounds of Chinese soup: Won ton

Time between slipping on a peel and smacking the pavement: 1 bananosecond

Weight an evangelist carries with God: 1 billigram

Half of a large intestine: 1 semicolon

1000 aches: 1 kilohurtz

Basic unit of laryngitis: 1 hoarsepower

1 million microphones: 1 megaphone

2000 mockingbirds: two kilomockingbirds (work on it....)

52 cards: 1 decacards

3 statute miles of intravenous surgical tubing at Yale University Hospital: 1 I.V. League

-Love is the only thing known to multiply by division



LAWS WOMEN LIVE BY 


1. Don't imagine you can change a man - unless he's in diapers.

2. What do you do if your boyfriend walks out? 

You shut the door.


3. If we put a man on the moon we should be able to put them all up there.

4. Never let your man's mind wander - it's too little to be out alone.

5. Go for younger men. You might as well - they never mature anyway.

6. Men are all the same - they just have different faces so that you can tell them apart.

7. Definition of a bachelor: a man who has missed the opportunity to make some woman miserable.

8. Women don't make fools of men - most of them are the do-it-yourself types.

9. Best way to get a man to do something: suggest he's too old for it.

10. Love is blind, but marriage is a real eye-opener.

11. If you want a committed man, look in a mental hospital.

12. The children of Israel wandered in the desert for 40 years. Even in biblical times, men what sort of books you're interested in, tell him checkbooks.

14. Remember: a sense of humor does not mean you tell him jokes; it means you laugh at his.

15. Sadly, all men are created equal. 

MENtal illness 
MENstrual cramps 
MENtal breakdown 

MENopause

Ever notice how all of women's problems start with men?
And when we have real trouble, it'd 
HISterectomy 




Thursday, 27 September 2012

சிரிப்பு ஞானம் - 12

நண்பர்கள் அனுப்பிய படங்கள்  with my comments - 


சிவனேன்னு உக்காந்திருந்தேன்..என்னை இப்படி பண்ணிட்டிங்களே! 

ஸ்பெசல்   புரட்டாசி   தள்ளுபடி!

எப்படியிருந்த  நான் இப்படியாயிட்டேன் 

 .........  பட ரெசிப்பி வேணுமா?

ஆபீஸ் முடிஞ்சவுடனே டிராமா இருக்கு..
உங்க ஊர்ல பிராஞ்ச் ஆரம்பிக்க வரலாமா?

தலையை  ஆட்டாம  கொஞ்ச  நேரம்   சும்மா   இருடி..


ப்ளொவ்ஸ் கொஞ்சம் சரியா தைச்சிருக்கலாம்...

Saturday, 22 September 2012

கடவுள் இருக்கிறாரா...? ரஜினி பதில் !


ரஜினிகாந்த் சொற்பொழிவு  -

கடவுள் இருக்கிறாரா...?   

ஆண்டவன் இருக்கான்... இல்லேன்னு யுகம் யுகமா பேசிக்கிட்டிருக்காங்க. வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் சண்டை வருது. வசிஷ்டர் வாயால நான் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கறேன்னு. விஸ்வாமித்திரர் ஒரு அகோரி. கடவுள் நம்பிக்ககை இல்லாதவர். வசிஷ்டர் சாஸ்துவோக்தமா... கடவுள், கைலாசம், வைகுந்தம், வேதம் அப்டி போறவரு. விஸ்வாமித்திரர் கடவுளை நம்பாதவர், பஞ்ச பூதங்களை நம்புறவர். அப்படிப்பட்ட விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடமிருந்து பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினார். ஆக அந்த காலத்திலேருந்தே கடவுள் இருக்கானா இல்லையான்னு விவாதம் நடந்துகிட்டுதானிருக்கு.

இப்ப ரீசன்டா, டிடி ரங்கராஜனோட டிஸ்கோர்ஸ் பார்த்தேன். அவர் ஒரு சம்பவம் சொல்றார். அவர் அமெரிக்காவில் ஒரு ட்ரெயின்ல ஒரு சயின்டிஸ்ட். அவருக்கு முன்னால கொஞ்சம் சின்ன வயசு... பைபிள் படிச்சிக்கிட்டிருக்கார்.

உடனே சயின்டிஸ்ட் அந்த இளைஞரிடம், 'என்ன பண்றீங்க'ன்னு கேக்கறார். உடனே பைபிள் படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்றார்.

'இல்ல, என்ன வேலை செய்யறீங்கன்னு' கேக்கறார்.

உடனே 'சயின்டிஸ்ட்' என்கிறார் இளைஞர்...

'ஓ.. சயின்டிஸ்டா, சரி என்ன படிச்சிக்கிட்டிருக்கே'...

'பைபிள்'.. அப்படீன்னு இளைஞர் சொல்றார்.

உடனே, 'ஏம்பா, அறிவிருக்கா... இது சயின்டிபிக் யுகம், சயின்டிபிக் காலம், எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்... நீயும் சயின்டிஸ்ட் என்கிறாய். இன்னும் நீ மதம், கடவுள், பைபிள், கிறைஸ்ட்டுனு படிச்சிக்கிட்டு உட்காந்திருக்கியே, நாமளே இப்படி உட்கார்ந்துட்டா, எப்படி நாடு முன்னேறும். மக்கள் என்ன ஆவறது. கொஞ்சமாவது அறிவை வளத்துக்க வேண்டாமா.. இனிமேலாவது இந்த புக்கு, பைபிளையெல்லாம் தூக்கி போடு, கடவுளு, மண்ணாங்கட்டின்னு' சொல்லிட்டார்.

'சரி'..ன்னு கேட்டுக்கிட்டார்.

'நீ ப்ரீயா இருக்கும்போது என்னை வந்து பார். இந்தா என் கார்டு... பேசலாம்ட-னு சொல்றார் சயின்டிஸ்ட்.

ஸ்டேஷன் வந்ததும், இறங்குறாங்க. கிளம்பும்போது, 'சரி, நான் என்னை உன்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டேன். நீ உன்னை என்கிட்ட அறிமுகப்படுத்திக்கவே இல்லையே'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.

உடனே, அந்த இளைஞர் தன் கார்டை கொடுக்கிறாங்க. அதை திருப்பி பார்த்தா, அது தாமஸ் ஆல்வா எடிசன்!

உடனே அந்த சயின்டிஸ்ட், 'சார் மன்னிக்கணும்... நீங்க எனக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கணும். உங்களைப் பார்க்கணும்னு', கேட்கிறார்.

'சரி வாங்கன்னு' சொல்லி டைம் கொடுத்தார் எடிசன். அந்த டைமுக்கு தாமஸ் ஆல்வா எடிசன் லேபுக்கு இந்த சயின்டிஸ்ட் போறாங்க.

அந்த லேபுல, ஒரு பெரிய சோலார் சிஸ்டம் மாடல் ஒன்றை தாமஸ் ஆல்வா எடிசன் செஞ்சு வச்சிருக்கார். 

அதைப் பார்த்துவிட்ட சயின்டிஸ்ட், 'என்ன சார்.. இவ்வளவு அருமையா இருக்கு, இதை யார் செஞ்சாங்க, எத்தனை பேர் செஞ்சாங்க, பார்ட்ஸ் எங்கே கிடைச்சது'.. ன்னு கேட்டார்.

அதற்கு தாமஸ் ஆல்வா எடிசன், 'திடீர்னு ஒரு நாள் கதவைத் திறந்து பார்த்தேன். இந்த மிஷின் இருந்துச்சி'ன்னு சொல்றார்.

'சார், தமாஷ் பண்ணாதீங்க. நான் சீரியஸா கேக்கறேன். இதை எப்படி செஞ்சீங்க'ன்னு கேக்கறார் சயின்டிஸ்ட்.

'இல்லப்பா.. உண்மையிலேயே நான் ஒண்ணும் பண்ணல. திடீர்னு கதவை திறந்து பார்த்தேன். இது இங்கே இருந்தது'...ன்னு எடிசன் சொன்னாங்க.

'சார்... சீரியஸாவே நான் கேக்கறேன்.. நான் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்... சொல்லுங்க'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.

'ஏம்ப்பா... நீங்க சயின்டிஸ்ட்டுங்க.. திடீர்னு ஒரு நாள் காஸ்மோஸ் (பிரபஞ்சவெளி) உருவாச்சின்னு சொல்றீங்க. திடீர்னு காஸ்மோஸ் உருவாகும்போது, இது உருவாகக் கூடாதா? கிரியேஷன்... Where there is a creation there should be a creator... படைப்பு இருந்தா, படைப்பாளி இருந்துதான் ஆகணும். Without the creator there is no creation. So கடவுள் இருக்கார்!', சயின்டிஸ்ட் சைலன்ட் ஆகிட்டார்.

இதை ஏன் சொல்றேன்னா... இது வந்து நடந்ததா இல்லையா என்பது வேறு.. தாமஸ் ஆல்வா எடிசன் அங்கே இருந்தாரா இல்லையான்றது டிஃப்ரன்ட்... சொன்னவர் இதை எங்கேயாவது படிச்சிருப்பார் டெபனிட்டா...

ஆனா, இதை எழுதினவர் என்ன சொல்ல விரும்பினார்... கடவுள் இருக்கார்னு சொல்றதுக்கு, இவர் இந்த சப்ஜெக்டை எடுத்துக்கிட்டார். இதுக்கு இந்த சிச்சுவேஷன் கிரியேட் பண்ணார். இதுக்கு ரெண்டு சயின்டிஸ்டை உருவாக்கினார். தாமஸ் ஆல்வா எடிசனை கொண்டு வந்தார். அவர் வாயால சொல்ல வச்சதாலதான், இது இந்த அளவு ஆழமா இது போகுது. இதான் ரைட்டருடைய வேலை. அந்த எழுத்தோட்டம் இருக்கு பாருங்க... அது ப்யூட்டிபுல்.

கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்


கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

Tuesday, 18 September 2012

VINAYAGA CHATHUTHTHATHI

நாளை விநாயக சதுர்த்தி 






எங்கள் பெயர் இனிசியல்களில் அமைந்த பிள்ளையார்  




Thursday, 19 July 2012

சிரிப்பு ஞானம் - 10


சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே 

அது வடிக்கும் கவிதைகள் ஆயிரம் அவை எல்லாம் உன் எண்ணமே



பகவத் கீதை - அத்தியாயம் - 19

( From an email sent by my friend )


Arjun : Hey Vasudev, how can I do the most heinous and unpardonable act of forwarding email that I receive, to my friends, relatives and revered elders?

Krishna : Paarth, at this moment, none of them is your friend or foe, relative or in-law, young or old and good or evil. You have no escape from following your Net-Dharma. Make haste to log on and send off the email to one and all. That is the only Karma expected of you and Dharma you must follow.

Arjun : Hey Murari! Do not implore me to do something that pricks my conscience and stirs my soul.

Krishna : O Kunti-Putra, you are caught in the vicious circle of Maya. In this material world, you are committed to no one except to yourself, your Dharma and your mouse. emails have existed for the last 25 years and will remain long after you are gone. Rise above the Maya and perform your bounden duty.

Arjun : Lord Krishna, pray and enlighten me on how email is related to Maya.

Krishna : Vatsa, email is the 6th element in the universe – Aap, Vaayu, Jal, Agni, Aakaash and email. It is at the same time animate and inanimate, living and dead beat. It overloads the system and fills up the hard disk. But it serves one great purpose. It leads people to believe that they are filling their time in an intellectual pursuit by reading and re-forwarding mail. It gives them a sense of achievement without investing their intellect and efforts. Like the Atman that leaves one’s physical body and moves on to another, the email moves from system to system and never gets deleted or dies.

Arjun : Great Giridhaari, kindly tell me what the true attributes of email are.

Krishna : Neither fire can burn it, nor air can evaporate it. Neither can it be conquered nor can it be defeated. email is omnipresent and immortal like your noble and eternal soul. Unlike an arrow shot from your bow, many a time the email forwarded by you, will even return to you safely after some months or even years, allowing you to re-re-forward it to the same people.

Arjun : Great Saarathi, my salutations to you. You have opened my eyes to the cult of email. I was lost in the Maya and have been reading all the email that I keep receiving and doing no other Karma. Now on, I will just press the "Forward" button without reading any of it and send it to all and sundry, friends and foes, relatives and in-laws, young and old. That will surely bring them to their knees in this epochal battle of Good against Evil, in the Kurukshetra.

Krishna : Arjuna, victory or defeat is not in your hands. Do not ponder over the fruits of your labour. Just keep forwarding email and make one and all go bananas reading it and you will have done your supreme duty. Tathastu .

Thus Spoke
Lord Krishna

Tuesday, 3 July 2012

சிரிப்பு ஞானம் - 8

சிரிப்பு 


வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது



வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு



எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு



உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்



சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?


தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு



சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது



ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது



சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை

 
முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே



சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்



ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்



ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்



எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை



பாம்பின் படம்கூட
அழகுதானே?



சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை



பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது



ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?


 

காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?



சிரியுங்கள் மனிதர்களே!


பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை



சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு



இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்



சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஐ�தி?



கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு



தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு



தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்றடித் தேய்ந்தழியும் சிரிப்பு



கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு



சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐ�தி பிரிக்கலாம்



சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை

நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?



சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு



ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்



மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு



எங்கே

இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!




-  வைரமுத்து 








கீழே இருப்பவைகளைப் படித்தும் 
தள்ளிப் போடலாம்... 





அப்பா : அம்மா அடிச்சதுக்கு ஏன்டா அழுற ..

மகன் : சும்மா இருங்கப்பா ..! உங்கள மாதிரி எல்லாம்என்னால அடி தாங்க முடியாது...!!



ஒரு குளத்தில் 22 எறும்புகள் குளித்துக் கொண்டிருக்கு ...
அப்போ ஒரு யானை வந்து குளத்தில் ட்ய்வ் அடிக்குது ...
அந்த குளத்தில் குளித்துக்கொண்டிருந்த 21 எறும்புகள்
கரைல போய் விழுந்திருச்சு .. ஒரு எறும்பு மட்டும் யானைதலைல போய்
விழ்ந்திருக்கு ... அத பார்த்த கரைல இருந்த ஒரு எறும்புசொல்லிச்சாம்..
"கொய்யால.... அவன அப்படியே தண்ணிக்குள்ள அமுக்குடா  மாப்ள!" 



உங்கள தொந்தரவு பண்ணுறதுக்கு மன்னிக்கணும் .. ஆனா செய்தி முக்கியமானது .. உண்மையா சொன்னா நாங்க சீட்டு விளையாடிட்டு இருக்கோம் .. அதுல ஜோக்கேர் கார்டு காணாம போய்டுச்சு .. அதனால உன்னோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனுப்பேன் ப்ளீஸ்

உழைப்பு உயர்வு தரும் ..
உயர்வு பணம் தரும் ..
பணம் திமிரை தரும் ..
திமிர் ஆணவம் தரும் ..
ஆணவம் அழிவைத் தரும் ..
அதனால நாம் நாமாக இருப்போம் ..
உழைப்பை எதிர்ப்போம் ..
ஓய்வு எடுப்போம் ..!

எங்கே நேசம் இருக்கிறதோ அங்கே காதல் பிறக்கும் ..
எங்கே காதல் பிறக்கிறதோ அங்கே வலி இருக்கும் ..
எங்கே வலி இருக்கிறதோ அங்கே ..
"IODEX" தடவுங்க ..வலி போய்டும் ..!


முயலும் ஆமையும் நுழைவுத்தேர்வு எழுதுச்சு..
அதுல ஆமை 80% , முயல் 81% மதிப்பெண் வாங்கிச்சு ..
இரண்டுமே பொறியியல் கல்லூரி அட்மிசன் க்கு போனது ..
அங்க வந்து கட் ஆப் மார்க் 85%. ஆமை அட்மிசன் ஆகிடுச்சு.. 


எப்படி ..?



உங்களுக்கு நியாபகம் இருக்கா..? நாம ஒன்னாவது படிக்கும் போது ஒரு கதை படிசிருப்போமே .. அதுல கூட ஒரு ஆமை ஓட்டப் பந்தயத்துல வெற்றி பெற்றுடும்ல...? 



ஸ்போர்ட்ஸ் கோட்டா ல அதுக்கு அட்மிசன் கிடைச்சுடுட்சு ...! 

Saturday, 30 June 2012

கேள்வி ஞானம் - 2


கேள்வி கேட்க கற்றுக்கொள்ளுங்கள்


( தினமலரில் படித்தது )

இன்றைய சூழலில், கேள்வி கேட்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை. 


 அதற்கு சரியான பதில் சொல்லத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த மழலைப் பருவத்தில் கேள்வி கேட்கும் துடிப்பு இயற்கையாகவே இருப்பதற்கு கூச்ச சுபாவம் இல்லாததும் ஒரு முக்கிய காரணம். ஆனால், சற்று வளர்ந்ததும் இதுபோன்ற சில குணங்களுக்கு பலரும் இடம் கொடுத்து விடுகிறார்கள். 


இது பள்ளி செல்லும் நாட்கள் முதல் கல்லூரி, அலுவலகம் என்று எதிர்காலம் முழுவதும் நீடிக்கிறது. இதனால், சரியான திறமை இருந்தும் வெளிகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களது, திறமை அவர்களுடனே மக்கி போய்விடுகிறது.


கேள்வி கேட்பது என்பது ஒரு கலை. கேள்வி கேட்கும் தோரணையை வைத்தே அவரது புத்தி சாலித்தனத்தை அறிந்துவிட முடியும் என்பதால் கூட, கேள்வி கேட்டால் நமது அறியாமை எங்கே வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் சிலருக்கு உள்ளது. கேள்வி கேட்பவரது அறிவு மட்டும் வெளிப்படுவதில்லை; அவரது தன்னம்பிக்கையும் சேர்த்துதான்...


கருத்தரங்கில், வகுப்பறையில், அலுவலகத்தில், பொதுஇடங்களில் என கேள்வி கேட்பதற்கு தினமும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தும் வெகு சிலரே சரியாகவும், துள்ளிமாகவும் கேள்வி கேட்கின்றனர். சிறு வயதில் இருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களில் கேள்வி கேட்கும் திறனும் ஒன்று. இத்திறன் அறியாதவற்றை அறிந்து கொள்வதற்கும், புரியாதவற்றை புரிந்துகொள்வதற்கும், அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும் உதவும்.


சரியான முறையில் கேள்வி கேட்க...

* உங்களது கேள்வி சுருக்கமாக இருப்பது மிக அவசியம். இதில் துவக்கம், முடிவு என்று பிரிப்பதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.



* நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை உங்களது கேள்வி உணர்த்த வேண்டும். அதற்கு கேள்வி தெளிவாக இருக்க வேண்டும். விவாதத்திற்கு உரியதாக இருக்கலாம்; ஆனால் விதண்டாவாதத்திற்கு உரியதாக இருக்கக்கூடாது.


* உங்களிடம் அதிக கேள்விகள் எழும்பட்சத்தில், அவற்றில் இடத்திற்கு தக்கவாறு முக்கியத்துவம் அளித்து, வரிசைப்படுத்தி கேட்கவும்.


* தக்க நேரத்திலும், சரியான இடத்திலும் கேள்வி அமைவது அவசியம். உதாரணமாக, வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடத்திற்கு சம்பந்தம் உள்ள, தக்க சமயத்தில் கேட்கப்படும் கேள்வி வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


* படிக்கும் போது, எழுதும்போது, வேறு ஒரு செயலில் ஈடுபடும்போது என பல சமயங்களில் உங்களுக்குள் சந்தேகம் எழலாம். அதை காகிதத்தில் தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


* சில கருத்தரங்குகள், கூட்டங்களில் கேள்வி கேட்பதற்கு என்றே தனியாக நேரம் ஒதுக்கப்படும். அப்போது மட்டுமே கேள்வி கேளுங்கள். கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணங்களில் உங்களுக்குள் எழும் கேள்விகளை குறிப்பெடுத்துக்கொள்ளத் தவறாதீர்கள்.


* முதலில் உங்களது கையை உயர்த்தி, பதில் அளிப்பவரது அனுமதியை பெற்ற பிறகு, கேள்வி கேட்க துவங்குங்கள். அப்போது உங்களது குரல் வளம், அழுத்தம் உயர்ந்தும், சீராகவும் இருக்க வேண்டும்.


* தவிர்க்க முடியாத காரணங்களால், உங்களால் கேள்வி கேட்க இயலாமலோ, உரிய பதில் கிடைக்காமாலோ போகும்பட்சத்தில், உரிய நபரை தனியாக சந்தித்து பதில் பெற தயங்காதீர்கள். ஏனென்றால், இருவர் பங்கேற்கும் கலந்துரையாடல் சிறந்ததாகவே அமையும்.

Sunday, 27 May 2012

சிரிப்பு ஞானம் - 6


சிரிப்பு ஒரு எளிமையான தியானம்.


 அதனால் உடனடியாக உடலுக்கு ஓய்வுகிடைக்கின்றது. நன்றாகச் சிரிக்கும் போது மனச்சோர்வு ஓடி விடுகின்றது. சிரிக்கின்ற போது சக்தி கூடுகின்றது. கோபப்படும்போது சக்தி விரயமாகின்றது. சிரிக்கின்ற போது குழந்தையாகி விடுகின்றோம். இயல்பாய் வளரும் செடியில் பூ பூத்ததும் அழகாகி விடுகின்றது. அது போல் முகத்தில் புன்னகைப் பூக்கள் பூக்கின்ற போது அழகு கூடுகின்றது.


சிரிப்பு முகத் தசைகளுக்கு மிகச் சிறந்த பயிற்சியளிக்கிறது. சிரிக்கும் போது கூடுதல் இரத்த ஓட்டத்தால் முகம் சிவக்கிறது. கண்கள் ஈர மாகின்றன. கண்களில் ஒளி நிரம்பிப் பிரகாசிக்கச் செய்கின்றன. முகத்தில் காந்த சக்தி வெளிப்படுகின்றது. அது அலை அலையாகப் பரவி எதி ரிலே இருக்கின்றவர்களையும் ஈர்க்கின்ற சக்தியை உள்ளுக்குத் தருகின்றது.
மற்றவர்களை உங்களால் ஈர்க்க முடியும் போது வெற்றி பெறுவது என்பது கடினமா? ஆம், வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நல்ல நகைச்சுவை உணர்வும் அவசியம் தேவை. மற்றவர்களுடன் கலந்து செயல்படவும், கூச்சமின்றி வெளிப்படையாகப் பழ கவும் தன்னம்பிக்கையையும் தலைமைப் பண்புகளையும் மேம்படுத்துவதற்கும் சிரிப்பு மேலும் துணை செய்கின்றது.
வாழ்க்கை முரண்களால் ஆனது. இரவு பகல் நன்மை தீமை, வெற்றி தோல்வி இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு மறுபக்கம் இருப்பது போல துன்பத்திற்கும் ஒரு மறுபக்கம் இருக்கின்றது. அதுதான் இன்பம்.
துன்பத்தை சிரிப்பினால்தான் வெல்ல முடியும். அதனால்தான் வாழ் வாங்கு வாழ்வதற்கு வழி சொல்லும் வள்ளுவப்பெருந்தகை, துன்பம் வரும் போது சிரி என்கிறார். அதாவது, ‘இடுக் கண் வருங்கால் நகுகஎன்கிறார்.
துன்பத்தில் சிரிப்பவனைக் கண்டால், ‘ஆழ வைக்கலாம் என்று வந்தோம், இவனோ சிரிக்கிறான். இவனை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துத் துன்பம் தூரப் போய்விடும்என்கிறார்.


உருதுக் கவிஞர்அதம்இதையே இப்படிக் கூறுகிறார்...


சோகத்தில் ஏன்
சிரிக்கிறாய் என்கிறாயா?
இருள் சூழும்  போதுதானே
விளக்கேற்ற வேண்டும்!


அடடா... எவ்வளவு அற்புதமான கவிதை! இருள் துன்பம் போன்றது. அந்த இருளை விரட்ட விளக்கு ஏற்றுகின்றோம். அது போல துன்பத்தைப் போக்க புன்னகை தீபத்தை இதயத்தில் ஏற்ற வேண்டும் என்கிறார்.
மகிழ்ச்சியைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன். ஆனால் அது இங் கேதான் இருக்கிறது. உங்களைச் சுற்றியே... உங்களுக்குள்... உங்கள் இதயத்தில்தான் இருக்கிறதுஎன்பார் பார்க்ஸ் அரலியஸ்.
நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் நான் எப்போதோ தற்கொலை செய்து இருப்பேன்என்றார் மகாத்மா காந்தியடிகள்.
 ஆம்,
 வாழ்வதற்கான ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருவது நகைச்சுவை.
















 சினிமா பாடல்களில் சிரிப்பு

( on popular demand )



பாட்டு - பாட்டுக்கு பாட்டேடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?

கேட்டதனால்தான் தாயி... இப்படி நொந்து நூடுல்சாகிக் கெடக்குறேன்!


பாட்டு - வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்!
வேற வழி..பவர்கட் இப்படியே தொடர்ந்தா விழிச்சுக்கிட்டு நிலா வெளிச்சத்திலதான் படிச்சாகணும்!
பாட்டு - ABC  நீ வாசி... எல்லாமே ஸோ ஈஸி..!
ABC  மூணு எழுத்து ஈஸிதான்...மத்த எழுத்து எல்லாம் யாரு படிக்கறது..?
பாட்டு -  உன் பேரைச் சொல்ல ஆசைதான்...
பேரா  அது? வாயில நுழைஞ்சாத்தானே சொல்றதுக்கு?
பாட்டு - நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...
ஏன் நீ பேச மாட்டியா? நீ என்ன ஊமையா?
பாட்டு - காற்று வாங்கப் போனேன்,,, ஒரு கவிதை வாங்கி வந்தேன்...!
சரியான லூசுடா நீ! வாங்க வேண்டியதை உட்டுட்டு எதுக்கு வேற எதையாவது வாங்கணும்?


As I'm going to Gujarat today, this will be the last post for this month. See you next month!   -  Jp