ஆகமங்கள் வெளிப்புற உருவ வழிபாட்டை வலியுறுத்துகின்றது. ஆனால் சித்தர்கள் உள்நோக்கிய அகப்பாதையை சிறப்பாக கொள்கின்றார்கள். எனவேதான் ஆகமங்களை சித்தர்கள் பந்தாடுகின்றார்கள். சிவபெருமானை வழிபட “சித்தர்” முறையே சிறப்பானது. ஆனால் இன்று தங்களை சித்தர்கள் எனக்கூறிக் கொள்பவர்கள் சித்தர்களே அல்ல. அவர்களுக்கு “செக்குக்கும் சிவலிங்கத்திற்குமே” வேறுபாடு தெரியாது. நானே கடவுள் என்பவர்கள் சைவர்கள் அல்ல. இதை புரிந்து கொள்வது மிகஅவசியமாகும்.
ஏன் சித்தர்கள் சிவனை மட்டும் வழிபடுகின்றார்கள்?
ஏனெனில் சிவபெருமானின் வழிபாட்டிற்கான சைவசித்தாந்தம் மட்டுமே 36தத்தவங்களை ஏற்றுக்கொண்டு அதனை விவரிக்கின்றது. சித்தர்கள் இந்த 36 தத்துவங்களை மேலும் பிரித்து 96 தத்துவங்களாக கொள்கின்றார்கள். வேறு எந்த மதத்திலும் இந்த தத்துவங்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகத்தான் சிவபெருமானை வழிபடுபவர்கள் “சித்தர்களாக” இருக்கின்றார்கள். ஆகமத்தை பின்பற்றுபவர்கள் சிவனடியார்களாக இருக்கின்றார்களே தவிர சித்தர்கள் என கூறப்படுவதில்லை.

No comments:
Post a Comment