கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார்.
🌹இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான கிண்டலுடன், "சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?
🌹கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்கள்.
🌹வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மணமக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”
🌹அவர்கள்களா "இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.
🌹வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.
🌹ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை...
🌹உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?" என்றார்.
🌹நடிகவேள் "அது வாஸ்தவம் தான். இப்ப எல்லா பெண்ணைப் பெற்றோர்களின் நிலையும் அப்படித்தான் இருக்கு" என்று அமைதியானார்.
No comments:
Post a Comment