Showing posts with label சித்தர். Show all posts
Showing posts with label சித்தர். Show all posts
Wednesday, 22 April 2026
Friday, 17 May 2024
Tuesday, 3 May 2016
சித்தர்கள்
சித்தர்கள் கண்டறிந்த வியக்கவைக்கும் மருத்துவ - விஞ்ஞான நுட்பங்கள்!
- S
சித்தர்கள் ஆழ்ந்த ஞானம்கொண்டவர்கள். அவர்கள் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறிந்தவர்கள். மக்களுக்கு வரக்கூடிய வியாதிகளை அனுபவபூர்வமாகத் தெரிந்துகொண்டவர்கள். ஆகையால், அவர்களுடைய மருந்து முறை, நமது நாட்டு வானிலைக்கும் மக்கள் பண்புக்கும் ஏற்ற முறையில் அமைந்திருந்தது. தவிர மற்ற முறைகளில் இல்லாத சில தனிச் சிறப்புகளும், சித்தர்கள் கண்ட அனுபவ மருத்துவ முறைகளில் காணப்பட்டன.
இயற்கையில் நாம் காணும் நிலைகளை அவர்கள் நமது உடலிலும் உணர்ந்தார்கள். "வெளியே உலாவும் காற்று நமது உடலிலும் உலாவுகிறது. வெளியே காணும் வெப்பம் நமது உடலையும் பாதிக்கக் கூடியது. வெளியே உணரும் குளிர்ச்சி, நமது உடலிலும் கபமாகத் தோன்றக் கூடியது" என்று தத்துவங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.
அவர்களுடைய முறைப்படி மனித உடல் 96 தத்துவங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில், ஆன்மாவின் ஆட்சியில் 24 சக்திகள் இருந்ததையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நமது உடலை 72,000 ரத்தக் குழாய்களும், 13,000 நரம்புகளும், 10 முக்கிய தமனிகளும், 10 வாயு அமைப்புகளும் கொண்டதாக அவர்கள் சொன்னார்கள். இந்த அடிப்படையில் 96 வகைத் துடிப்புகளை உணர்ந்து, நாடி மூலம் வைத்தியம் செய்யும் வகையையும் குறிப்பிட்டிருந்தார்கள்.
சமயத்துக்கு மிகச் சிறந்த தொண்டு செய்த ஞானிகளாகிய சித்தர்கள், மனித உடலின் நலனுக்காக மிக உன்னதமான மருத்துவ முறையையும் எழுதிவைத்தார்கள். அகத்தியர், திருமூலர், சட்டநாதர், இடைக்காடர், மச்சமுனி, புலிப்பாணி, கொங்கணர் போன்ற சித்தர்கள் இவ்வாறு வகுத்துக் கொடுத்துள்ள மருத்துவ சாத்திரம் மிக அருமையானது. இன்று நாம் உபயோகிக்கும் பல்வேறு இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றின் துணை ஏதுமின்றி, அவர்கள் கண்ட மருத்துவ அடையாளங்களும், வியாதிக்கான நிவர்த்திகளும் ஆச்சர்யமானவை. தேகத்தின் சூடு, உடலின் நிறம், நாக்கின் நிறம், குரல், கண்களின் பார்வை, மலஜலம் ஆகியவற்றின் தன்மை இவற்றை நாடித் துடிப்புடன் ஒப்பிட்டு, உன்னதமான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நாடியை உணரும் முறை
நாடியை உணருவதற்குச் சுட்டுவிரல், கட்டைவிரல், மோதிர விரல் ஆகிய மூன்றும் பயன்பட்டன. வாயு, பித்தம், சளி ஆகியவை இதன் மூலம் கணிக்கப்பட்டன. கைரேகை பார்ப்பதைப் போலப் பெண்களுக்கு இடது கையும், ஆண்களுக்கு வலது கையும் ஆய்ந்து அறியப்பட்டன. பூதநாடி, குருநாடி, ஆகியவைகளே நுட்பமாகக் கண்டறிய உதவின. மூளைக்கோளாறு, மனோவியாதி போன்றவற்றைக் கண்டறிய பூதநாடி பயன்பட்டது. சிக்கலானப் பிற வியாதிகளைக் கண்டுபிடிக்க குருநாடி பயன்படுத்தப்பட்டது. இவற்றை உபயோகிக்கத் தன்னலம் இல்லாத பண்பும், குருவின் அருளும், ஆன்மஞானமும், குருவிடம் நீண்டகாலம் சிகிச்சை முறைகளைப் பயிலும் அனுபவமும் தேவை என்பது குறிப்பிடப்பட்டது. உடலைப் பற்றியதானாலும் உள்ளத்தின் மேன்மையைச் சித்தர்கள் பெரிதும் வலியுறுத்தினார்கள் என்ற அபூர்வப் பண்புக்கு இதுவே சான்றாகும்.
சித்த மருத்துவத்தில் ஜோதிடத்தின் பங்கு
வேத நூல்களின் முக்கியமான அங்கமாகிய ஜோதிடக் கலை, மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்பட்டது. வெவ்வேறு கிரக நிலைகளில், வெவ்வேறு லக்கினங்களுக்கு உரியவர்களுக்கு, உடம்பின் இன்னென்ன பகுதிகள் பாதிக்கப்படும் என்ற தத்துவத்தை அவர்கள் கணக்கிட்டு, அந்த அடிப்படையில் வைத்தியம் செய்ய உலோகங்களையும், ரத்தினக்கற்களையும் பக்குவம் செய்து உபயோகித்தார்கள். ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை 100 ஆண்டுகள் என்றும், அவற்றில் 30 ஆண்டுகள் வாயு, 33 ஆண்டுகள் பித்தம், 37 ஆண்டுகள் கபம் என்று பிரிக்கப்பட வேண்டியவை என்றும் அவர்கள் கணக்கிட்டார்கள். இதேபோல, ஒரு நாளின் பகுதிகளும் மூன்றாகப் பிரிக்கப்பட்டன. இப்படி அவர்களுடைய வைத்திய முறை இயற்கையின் சக்திகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது.
மனித உடலில் 4448 வியாதிகள் வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். நுட்பமான எல்லா வியாதிகளுமே இந்தக் கணக்கில் வந்துவிடுகின்றன. வெவ்வேறு விதமான 32 களிம்புகளைத் தடவுவதன் மூலமும், 26 உள்ளுக்குச் சாப்பிடக் கூடிய மருந்து வகைகளின் மூலமாகவும் அவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மிக அபூர்வமாகவே அறுவை சிகிச்சை முறை கையாளப்பட்டது. சித்தர்களின் வைத்திய முறையில் மூன்று அங்கங்கள் உண்டு. முனிவர்கள் உணர்ந்து அளித்த யோகம், பிராணாயாமம் போன்றவற்றின் மூலம் மூலிகைகளைப் பயன்படுத்திக் கட்டுப்பாடாக வாழ்வது, ஆரம்ப நிலையிலேயே உடற்குறைகளைக் கண்டறிந்து அவற்றை அறவே நீக்கும் முறைகளைப் பின்பற்றுவது, கொடிய வியாதிகளின் கடுமையை இயன்றவரையில் குறைப்பது ஆகிய மூன்றுமே அந்த முக்கியமான அம்சங்களாகும்.
சித்த மருத்துவ முறையைக் கற்றுணர்பவர்களுக்கு ரசவாதம், பௌதிகஞானம், வான்கணிதம் ஆகியவைகளும் தெரிந்திருக்க வேண்டும். இந்த முறையை பயிலுபவர்களுக்கு மனப்பக்குவமும், தொண்டு செய்யும் மனப்பாங்கும் இருக்க வேண்டும். அவர்கள் தயாரிக்கும் மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு உறவினர் - நண்பர்களுக்காகவும், இரண்டாவது பங்கு ஏழை எளியவர்களுக்கு தர்ம வைத்தியம் செய்வதற்காகவும், மூன்றாவது பங்கு வியாபார முறையிலும் பயன்படுத்த வேண்டும். டானிக்குகளை உபயோகிக்குமுன் வைத்தியன், தானே அதைச் சாப்பிட்டு உணர்ந்து, பிறகு நோயாளிகளுக்குக் கொடுக்க வேண்டும். எந்த வியாதியையும் மூன்றே நாட்களில் குணப்படுத்திவிட வேண்டும்.
சித்த வைத்திய முறைகள் இயற்கையை ஒட்டியவை. உடலின் 4448 வியாதிகளுக்கு அவர்கள் 4448 வித மூலிகைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மூலிகைச் சத்து, உலோகங்களிலிருந்து ஸ்புடம் போட்டுத் தயார் செய்த பஸ்மங்கள், செந்தூரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. மருந்துகளை உபயோகிக்கும்போதே, அவை உடலைப் பாதுகாத்து வளப்படுத்தும் டானிக்குகளாகவும் பயன்பட்டன. இன்று குணப்படுத்த முடியாத புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை செய்யலாம் என்றூ சித்தர்கள் கண்டறிந்தார்கள். தேனை மட்டும் கொம்புத்தேன், புற்றுத்தேன், மாப்பொந்துத்தேன், வீட்டுத்தேன், பழையதேன், புதியதேன் என்று 60 வகைகளாக அவர்கள் பிரித்து உபயோகப்படுத்தினார்கள். மருந்துகளுடன் பழைய தேனை உபயோகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. பூஜைக்கு உரிய வில்வம், துளசி போன்றவைகளும் சித்தர்களின் மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்டன. அதற்கென்றும் சில விதிமுறைகளை அவர்கள் வகுத்திருந்தனர்.
சித்த மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு
பூஜைக்குப் பயன்படும் மகாவில்வ தளம், துளசிதளம் போன்றவை சிகிச்சைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டன. மூலிகைகள் வளரும் மண், அவை பறிக்கப்படும் நேரம், பறிக்கும் முறை எல்லாவற்றுக்குமே விதிகள் இருந்தன. காற்றில் ஏற்படும் அசுத்தங்களை ஹோமங்கள் செய்வதன் மூலம் நீக்கலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்திருந்தார்கள். நாயுருவி (பாதரசம்), எருக்கு ( சூரியன் ), பலாசம் ( சந்திரன் ), வன்னி ( சனி ), அருகம்புல் ( குரு - ராகு ), தர்ப்பை ( கேது ) போன்ற ஹோமத்துக்கு உரிய பொருட்கள், சிக்கலான மருத்துவ முறைகளுக்கும், உரியவை என்பது அவர்கள் கண்டறிந்த தத்துவம் ஆகும்.
உலோகங்கள், ரத்தினங்கள், மிருகங்களின் கொம்புகள் போன்ற இயற்கையான பொருட்களைக்கொண்டு பக்குவம் செய்து பஸ்மங்கள் தயார் செய்யப்பட்டன. நெருப்பில் உருக்குவது, புடம் வைப்பது, காய்ச்சுவது, வடித்தெடுப்பது ஆகிய முறைகளால் இவைகள் தயார் செய்ய பயன்பட்டன. பலவகையான நச்சுப் பொருட்களும் மருந்து செய்ய பயன்பட்டன. இந்த அபூர்வ சிகிச்சை முறைகளை அரேபியா, சைனா, துருக்கி, எகிப்து போன்ற வெளிநாடுகள் பலவற்றுக்கும் சித்தர்களும் போகர்களும் பரப்பி இருக்கிறார்கள்.
பூஜைக்கு உரிய பசுவின் சாணம் புடம் போடவும் பயன்படுத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட பசுவின் சாணம், இளங்கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் சாணம், சிவன் கோயிலில் வளர்க்கப்படும் பசுவின் சாணம் என்று இவை தரம் பிரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து சாஸ்திரீயமான முறையில் வறட்டிகள் தட்டப்பட்டு, பக்குவத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன.
பூஜைக்கு உரிய பசுவின் சாணம் புடம் போடவும் பயன்படுத்தப்பட்டது. பூஜை செய்யப்பட்ட பசுவின் சாணம், இளங்கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் சாணம், சிவன் கோயிலில் வளர்க்கப்படும் பசுவின் சாணம் என்று இவை தரம் பிரிக்கப்பட்டன. இவற்றிலிருந்து சாஸ்திரீயமான முறையில் வறட்டிகள் தட்டப்பட்டு, பக்குவத்துக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன.
ரசவாதம் பணம் சம்பாதிக்கும் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. உடலின் உறுப்புகளைப் புதுப்பிக்கவும், நீண்ட ஆயுளைக் கொடுக்கவும், மூப்பை நீக்கி மீண்டும் இளமையைத் தரவும் பயன்பட்டன. காயகல்பம் என்ற மருத்துவமுறை இவ்விதம் இளமையை மீட்டுத் தரவல்லது. இரும்பு போன்ற உலோகம் தங்கம் போன்ற உலோகமாக மேன்மையுறச் செய்யும் பக்குவத்தைக் கண்டறிந்து, அவர்கள் மனிதப் பண்புகளையும், மேம்படச் செய்தார்கள். அற்புதங்களை நிகழ்த்தும் மந்திர முறைகள், விஷங்களைப் போக்கவும் பயன்பட்டன.
மனித உடலில் பஞ்சபூதங்களின் விகிதாசாரம்
இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களான ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை நமது உடலிலும் இருக்கின்றன. ஆகாயம் உடலில் மறைபொருளாக அரைப்பங்கு இருக்கிறது. நெருப்பு, காற்று, நீர், மண் ஆகியவை ஒவ்வொன்றும் அரைக்கால் பங்கு இருக்கின்றன. இந்த ஐந்து இயற்கைப் பொருட்களும் இந்த விகிதப்படி இருந்து வர வேண்டும். மண் நிறைந்துள்ளவை - கேசம், தோல், சதை, எலும்பு, நரம்பு ஆகியவை. நீர் நிறைந்துள்ளவை - கொழுப்பு, இரத்தம், பித்தம், கழிவுநீர், ஆகியவை. நெருப்பு நிறைந்துள்ளவை - பசி, தாகம், தூக்கம், சோம்பல், மேனி அழகு ஆகிய பண்புகள். வாயு நிறைந்துள்ளவை - அசைவு, சுருக்கம், விரிவு ஆகிய தன்மைகள். ஆகாயம் நிறைந்துள்ளவை - வயிறு, இருதயம், மூளை ஆகியவற்றிலுள்ள இடைவெளிகள். இவற்றை சித்தர்களின் சாஸ்திரப்படி கண்டறிந்த முனிவர்கள், மருந்துகள் ஏதுமில்லாமலே வியாதி இன்றி வாழ முடிந்தது. உணவு உட்கொள்ளாமலே பசியும் தாகமும் இன்றி வாழ முடிந்தது. நெருப்பில் நிற்பது, நீர் மேல் நடப்பது, காற்றில் பறப்பது போன்ற அபூர்வச் சித்து வேலைகளையும் நிகழ்த்த முடிந்தது.
உடலின் உறுதியையும், உள்ளத்தின் மேன்மையையும் பாதுகாக்க, இச்சைகளை அடக்க வேண்டும் என மெய்ஞ்ஞானம் கூறுகிறது. இதையே சித்த சாஸ்திரமும் உணர்த்துகிறது. பிராணயாமம், யோகாப்பியாசம் ஆகியவற்றின் மூலம் உடலில் ஏற்படக்கூடிய அசுத்தங்களை நீக்கும் வழிமுறைகளையும் அவர்கள் கண்டறிந்தார்கள். சாவு நேரிடும் வரையில் நரம்பு தளர்ச்சி, நரை, சுருக்கம் விழுதல் ஆகியவை இன்றி வாழும் ரகசியத்தை சித்தர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அப்படிப் பாதுக்காத்த உடலின் ஆரோக்கியத்தை இறைவனை எண்ணித் தியானம் செய்யவும், இறைவன் படைத்த உயிர்களைக் காக்கவுமே பயன்படுத்தினார்கள். உடலையும், உள்ளத்தையும் காக்க உணவுக் கட்டுப்பாடுகள், விரதங்கள் ஆகியவற்றைக் கடைப்பிடித்தார்கள். ஆலயங்களை ஒட்டியும், மூலிகைகள் நிறைந்த காடுகளிலுமே, உலக பற்றின்றி உத்தமர்களாக வாழ்ந்தார்கள்.
இன்றைய மருத்துவத்தில் சித்தர்களின் பங்களிப்பு
இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையே சித்தர்களின் மருத்துவ முறையில்தான் அமைந்திருக்கிறது. அவர்களுடைய பாடல்களில் தமிழ் மொழியின் வளம் நிறைந்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் இறைவனின் அருளை நம்பி, வேதாந்திகளாகவே வாழ்ந்தார்கள். சித்தர்களின் அபூர்வ மருத்துவ பயன்களைப் பெற விரும்பும் மக்கள், நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து, பக்திமார்க்கத்தை ஒட்டி, தூய பண்புகளுடன் வாழ்ந்தாலே முழுப் பயன்பெற முடியும்.
- எஸ்.கண்ணன்கோபாலன் நன்றி - விகடன்
Labels:
சித்தர்
Sunday, 20 May 2012
கொங்கணச் சித்தர்
மனவளக்கலைப் பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி நான் சொல்லக் கூடியது
கொங்கணச் சித்தரின் கதை –
கொங்கண தேசத்துல ( கேரளா) இருந்து வந்தவர்ங்கிறதால இவரு பேரு கொங்கணர்ன்னு ஆயிடுச்சி..சின்னவயசிலே அப்பா இல்லாததால அம்மாதான் கஷ்டப்பட்டு இவர வளத்தாங்க..இவருக்கு சித்து வேலைங்க செய்ய ஆசை வந்து பல முனிவர்களைப் போய் பாத்தாரு. எல்லாருமே " நீ முதல்ல தவம் பண்ணு " ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க..ஒருநா அம்மாவைத் தவிக்கவிட்டுட்டு காட்டுக்குப் போய் தவம் பண்ண ஆரம்பிச்சாரு. சாப்பிட உணவு தேவைன்னா பக்கத்தில இருக்குற ஊர்ல பிச்சை எடுத்து சாப்பிடுவாரு.
அந்த வீட்டுக்காரம்மா தன்னோட புருசனுக்கு சாப்பாடு பரிமாறிக்கிட்டு இருந்ததால கொஞ்சம் லேட்டா கொங்கணருக்கு உணவு எடுத்துக்கிட்டு வந்தாங்க.. கொங்கணருக்கு ஒரே கோவம்..அந்த அம்மாவை மொறைச்சுப் பாத்தாரு..அந்த அம்மாவோ " என்னையும் கொக்கென்று நினைத்தீரோ. கொங்கண ரே " ன்னு கேட்டாங்க. இவருக்கு தூக்கிவாரிப் போட்டுச்சு - " எப்படி இந்த அம்மாவுக்கு என் பேரும், நான் கொக்கை எரிச்சதும் தெரிஞ்சுச்சி!" ன்னு அதிர்ச்சியோட அந்த அம்மாவைப் பாத்தாரு. அப்ப அந்த அம்மா சொன்னாங்க - " என்னைப் போல பெண்கள் எல்லாம் இறைவனை அடைய பூஜை, புனஸ்காரம், தவம்,தியானம் பண்ணவேண்டாம், கணவருக்கு பணிவிடை செய்வதும், வீட்டு கடைமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவதும்தான் தவம் "
கொங்கணருக்கு பணிவு வந்து அந்த அம்மாகிட்ட " என் ஆணவம் அழிஞ்சுப் போச்சு..என் அறிவுக்கண்ணைத் தொறந்துட்டீங்க.. உபதேசம் பண்ணுங்க " ன்னு கேட்டாரு. அதுக்கு அந்த அம்மா " இந்த ஊர் கடைசியில தர்மவியாசன்னு ஒத்தரு இருக்காரு. அவருகிட்டப் போய் கேளுங்க" ன்னு அனுப்பி வச்சாங்க.
தர்மவியாசனைப் போய் பாத்த கொங்கணருக்கு மேலும் அதிர்ச்சி..ஒரு தபஸ்வி மாதிரி ஆளைப் பாக்கப் போனா இந்த ஆளு ஒரு கசாப்புக் கடையில உக்காந்துகிட்டு இறைச்சியை வெட்டிக்கிட்டுருக்காரு. இவரப் பாத்தவுடனே " ஒ! நீங்கதான் கொக்கை எரிச்ச கொங்கண ரோ ! அந்த அம்மா அனுப்புனாங்களா? இப்படி அமைதியா உக்காருங்க.." ன்னு சொல்லிட்டு வியாபாரத்தைப் பாக்க ஆரம்பிச்சாரு தர்மவியாசன். அப்பப்ப பக்கத்துல இருக்குற வீட்டுக்குள்ள போயிட்டு வந்தாரு.
அதிர்ச்சியில் அமர்ந்திருந்த கொங்கணர் கிட்ட வந்து " வயசான என் அப்பா, அம்மா நோயால கஷ்டப்பட்டுக்கிட்டுருக்காங்க..அப்பப்ப அவங்க காலப் புடிச்சுவுட்டு தூங்க வைப்பேன். பெற்றவர்களுக்கு சேவை செய்வதே மிகப் பெரிய தவம். உங்களுக்குத் தெரியாததா?" ன்னு கேட்டாரு. ஊருல அம்மாவைத் தவிக்கவுட்டுட்டு வந்தது ஞாபகம் வந்துச்சு..பெற்றவர்களுக்கு சேவை செய்வதனால் இவனுக்கு முக்காலமும் உணரும் ஆற்றல் வந்தது என்பதை உணர்ந்தாரு. ஒவ்வொரு மனிதனும் அவனவன் கடமையை செய்வதே ஒப்பற்ற தவம்! இதைப் புரிஞ்சிக்க இவ்வளவு நாளாச்சேன்னு தர்மவியாசனுக்கு நன்றி சொல்லிட்டு அம்மாவைக் காண ஊர்நோக்கி புறப்பட்டாரு..
கொங்கணர் மருத்துவ நூல்கள், ரசவாத நூல்கள், யோகா நூல்கள் இப்படி நெறையா எழுதிக் குவிச்சிருக்காரு..பெரிய செல்வந்தரா, ஆயிரக்கணக்கான சிஷ்யர்களோட வாழ்ந்திருக்காரு.
மேல சொன்னதைத்தான் நான் அடிக்கடி சொல்லி
மக்களுக்கு கடமையுணர்வைப் போதிப்பேன்!
Labels:
சித்தர்
Thursday, 17 May 2012
சித்தர்கள் - பிரம்மமுனி & கோரக்கர்
![]() |
| Patanjali |
சித்தர்கள் வரிசையில அடுத்ததாக இரட்டையராக காட்சி அளித்த பிரம்மமுனி, கோரக்கர் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லப் போறேன்.
கோரக்கரைப் பத்தி நெறைய கதைகள் உண்டு. அதெல்லாம் அப்புறம்...
சிறு வயதிலிருந்தே ரெண்டு பேரும் ஒண்ணா வளந்தாங்க..ஒண்ணா படிச்சாங்க..ஒண்ணா தீட்சைப் பெற்று ஒண்ணா தவம் செய்து சித்துக்கள் எல்லாம் பெற்றாங்க.
பிரம்மமுனி ஒருநா கோரக்கர்கிட்ட " உலகத்துல நல்லவங்க கொறஞ்சுட்டாங்க..நாம நம்ம தவ வலிமையால படைப்புத் தொழில் முதற்கொண்டு தெய்வத்தோட வேலைகளை நாமே செய்வோம். நல்லவங்களை உருவாக்குவோம் " அப்டீன்னாரு. கோரக்கரும் " நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. இதுக்கு ஒரு யாகம் பண்ணனும் " ன்னு ஒரு நல்ல நாள் பாத்தாரு. யாகத்தை ரொம்ப சிறப்பா பண்ண ஆரம்பிச்சாங்க. தெய்வங்களோட வேலைகளை
இவங்க பண்ண ஆரம்பிச்சா பிரச்சனைகள் வரும்தானே! யாகத் தீயிலிருந்து அழகான ரெண்டு பெண்கள் தோன்றுனாங்க. ஆனா இந்த ரெண்டு பேரும் அவங்க அழகுல மயங்குல! கோபத்துல " எதுக்கு எங்கள் வேலையை கெடுக்க வந்தீங்க? " ன்னு கத்துனாங்க. அப்ப அங்க வந்த வாயுவும், அக்னியும் இந்த பொண்ணுங்க அழகுல மயங்கி வழிய ஆரம்பிச்சாங்க. இதப் பாத்த சித்தர்களுக்கு ஒரே வெறுப்பு. நல்ல மனிதர்களை உருவாக்க நெனைச்சா தேவர்களே இப்படி இருக்காங்களேன்னு வருத்தப் பட்டாங்க. அவங்க யாகம் நின்னுப் போச்சு. கமண்டலத்துல இருந்த தண்ணிய எடுத்து அந்த பொண்ணுங்க மேல தெளிச்சு ரெண்டு பேரையும் செடிகளா ஆக்கிட்டாங்க. பிரம்மமுனியால ஆக்கப்பட்ட செடிக்கு " பிரம்மபத்திரம்"ன்னு பேரு. கோரக்கரால சாபத்துக்குள்ளான பொண்ணு " கோரக்கர் மூலிகை" ங்கிற செடியா மாறிப்போனா. இதெல்லாம் பாத்துக்கிட்டுருந்த அக்னிக்கும், வாயுவுக்கும் ரொம்பவே வருத்தமாயிடுச்சு..அக்னி நெருப்பா மாறி பிரம்மபத்திரச் செடியை அணைச்சுக்கிட்டான். வாயு தண்ணியா மாறி கோரக்கர் மூலிகையை சேந்துக்கிட்டான்.
கோபப் பட்டதாலேயும், சாபம் கொடுத்ததாலேயும் சித்தர்களோட தவசக்தி அழிஞ்சுப் போச்சு. இருந்தாலும் சிவபெருமான் இவங்க முன்னாடி வந்து " தெய்வங்களோட வேலைகளை நீங்க எடுத்துக்கிட்டது தப்பு. இருந்தாலும் உங்களோட நல்ல எண்ணத்துக்குப் பரிசாக நீங்க உருவாக்குன செடிகள் ரெண்டும் நல்ல மூலிகைகளாத் திகழும்" ன்னு வரம் கொடுத்தாரு.
பிரம்மபத்திரம் ங்கிற மூலிகைக்கு இன்னொரு பேரு புகையிலை ( அக்னியோட சேந்ததால சக்தி கூட)
கோரக்கர் மூலிகைக்கு இன்னொரு பேரு கஞ்சா ( தண்ணியோட சேந்ததால சக்தி அதிகம் )
இவைகள் உயிர் காக்கும் மூலிகைகள்தான்...
ஆனால் இவை இன்று புகை, போதைக்குத்தான் அதிகம் பயன்படுகின்றன.
கோரக்கர், பிரம்மமுனி எழுதுன மருத்துவ நூல்கள் எக்கச்சக்கமா இருக்கு.
கலியுகம் துவங்கிய நாள் முதல், இறுதி நாள் வரையிலான விவரங்களை கோரக்கர் தனது ”சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார். கலியுலத்தின் அரசியல், சமூகம், வாழும் மனிதர்களின் குண நலன்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.
கலியுகம் துவங்கிய நாள் முதல், இறுதி நாள் வரையிலான விவரங்களை கோரக்கர் தனது ”சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார். கலியுலத்தின் அரசியல், சமூகம், வாழும் மனிதர்களின் குண நலன்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.
கலியுகம் மொத்தம் 4,32,000 வருசங்கள்! கலியுகம் ஆரம்பிச்சு 5105 வருசம்தான் ஆயிருக்கு...
நாஸ்ட்ரடாமஸ் கணிப்புகள் எல்லாம் கோரக்கர் முன்னாடி ஒண்ணுமே இல்ல.!
Labels:
சித்தர்
Subscribe to:
Posts (Atom)









