மனைவி நல வேட்பு நாள்
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை!
ஓவ்வொரு ஆணும் தனது வாழ்க்கைத்துணையை நன்றியோடுவாழ்த்த ‘ மனைவி நல வேட்பு நாள்’ என்ற கொண்டாட்டத்தை அறிமுகம்செய்தவர் அருட் தந்தை வேதாத்திரி மகரிஷி.
உலகிலே தந்தையர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், காதலர்கள் தினம், நண்பர்கள் தினம்,மகளிர் தினம்,முதியோர் தினம், ஊனமுற்றோர் தினம், என தனித்தனியே கொண்டாடிமகிழ்கின்றனர். சுமங்கலி பூஜையை கணவன் நலனுக்காக மனைவியரும் வேண்டுகிறார்கள். குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணிக்கும் மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டாமா? ஓவ்வொரு ஆகஸ்ட்30 ஆம் தேதி ‘ மனைவி நல வேட்பு நாள்’ உலகெங்குமுள்ள மனவளக்கலை அன்பர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
பெண்மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்போதும்கெட்டதில்லை. பெண்ணினத்தை மதிக்காத தனி மனிதனோ,சமுதாயமோ உயர்வடைந்ததாக சரித்திரம் இல்லை. எந்தச் சமுதாயம் பெண்மையை போற்றி அவர்களுக்கு மதிப்பளித்து வாழ்கிறதோ அந்த சமுதாயம்தான் அறிவிலும்,ஆன்மீகத்திலும் சிறப்புற்று விளங்கும்.
மனைவியர் தினமான இந்நன்னாளில்* பெற்றோரை, பிறந்தஊரை,.உறவுகளை பிரிந்து, உங்களுக்கு தொண்டாற்றி, இனிமையாக,இன்பமாக உங்களுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்துவாழும் அன்புக்கும், பாசத்துக்கும் உரித்துடைய மனைவியை ஒவ்வொரு கணவரும் மதித்து, வாழ்த்தி உங்களின் மாசற்ற அன்பினால்அவர்களை நனைத்திடுங்கள்.
11 ஆண்டுகளுக்கு முன் கொழும்புவில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவில் மாலா ஆற்றிய உரை கேட்க இங்கே சொடுக்கவும்
One more link below
link
No comments:
Post a Comment