Saturday 21 August 2021

ஏலாதி

 பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஏலாதி பற்றி விரிவாக இங்கு பின்வருமாறு பார்ப்போம்:


ஏலாதி என்பதன் பொருள்:
ஏழு வகையான மருத்துவ மூலிகைப் பொருட்களை உள்ளடக்கிய ஒரு சொல் ஏலாதி என்பதாகும்.
ஏலாதியில் குறிப்பிடப்படும் மூலிகைகள்
ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மூலிகை பொருட்களும் ஒரு குறிப்பிட்ட அளவோடு சேர்க்கப்பட்ட ஒரு வகை" சூரணம் "ஆகும். ஆகையால் இந்நூலினை  ஏலாதி என்று அழைக்கப்படுகிறது. 
இவ்வகை சூரணம் உடலுக்கு வலிமை, எளிமை, உறுதி ஆகியவற்றை தரவல்லது. அதுபோல இன் நூலில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு கருத்துக்களும் மக்களின் அறியாமையை நோயைை நீக்கி அறிவைத் தரவல்லது அதனால் இந்நூலுக்கு ஏலாதி எனப் பெயர் வந்தது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயர் பெற்ற மூன்றாவது  நூல் ஏலாதி ஆகும்.


ஏலாதி ஆசிரியர் குறிப்பு:
பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று " ஏலாதி"சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பவரால் இயற்றப்பட்டது. மேலும் இவர் திணைமாலை நூற்றைம்பது என்ற அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. ஏலாதியில் மொத்தம் 81 பாடல்கள் உள்ளனர். இவரை கணி மேதையார் என்று அழைப்பர். கணித மேதை எனும் தொடரினை கொண்டு இவரை ஜோதிடத்தில் வல்லவர் என்றும் கூறுவர்.

ஏலாதி-இன்-சிறப்பைஎடுத்துரைக்கும் பாடல்:
இடையின் அழகோ,  தோள் அழகோ, அல்லது ஈடுுுுு இல்லாத வேறு அழகோ, நடை அழகு, நாணயத்தாள் ஏற்படும் அழகோ மற்றும் "கழுத்தின் அழகோ" உண்மையான அழகு ஆக.  எண்ணும் எழுத்தும் சேர்ந்த அதாவது  கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்ற ஏலாதியின் பாடல் பின்வருமாறு காணலாம்.

"இடைவனப்பும்  தோள்வனப்பும்
 ஈடில்வனப்பும் நடைவனப்பும்
 நாணின்வனப்பும் புடைசால்கழுத்தின் வனப்பும் வனப்பல்ல " எண்(ணோ)டூ எழுத்தின் வனப்பே வனப்பு "

ஏலாதி பாடலின் முக்கிய குறிப்புகள்:
*ஒவ்வொரு பாடலிலும் நான்கு அடிகளால் ஆனது மற்றும் ஆறு அற
கருத்துக்கள்கருத்துக்களையும் உடையது.
 
* சிறப்பாயிரம், தற்சிறப்பாயிரம் உட்பட 81 வெண்பாக்கள் உடையது.

* ஏலாதி 5ம் நூற்றாண்டை சார்ந்த நூலாகும்.

* ஏலாதியில் இடம்பெறும் முக்கிய பாடல் வரிகள்
"வணங்கி வழியோழுகி மாண்டார் சொல் நுணங்கி நூல் நோக்கி"

ஏலாதி சூரணத்தின் பயன்கள்:

 ஏலம், மிளகு, திப்பிலி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லிமுள்ளி, திப்பிலி மூலம், சீரகம், செண்பகப்பூ, கூகைநீறு, லவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ராமேஸ்வரம், பெரும்நாகேஸ்சுரம், சைந்தவலவனம், வாய்லீடங்கம், பேரிச்சைபழம், இலுப்பைப்பூ, வெட்டிவேர், அதிமதுரம், நெய்பொரி.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் வகை ஒன்றிற்கு 50 கிராம் எடுத்து வறுத்து பொடியாக்கி இந்த மருந்துக்குு சமன் அளவு வெல்லம் சேர்த்துு ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மருந்தினை நெய், தண்ணீர், தேன் ஆகியவற்றுள் ஏதேனுும் ஒன்றில் கலந்து சாப்பிடலாம் இப்படி சாப்பிட்டால்  நம் உடலில் ஏற்படும்  பித்தம், பைத்தியம், தலைசுற்றல், ரத்த பித்தம் குணமாகும்.



No comments:

Post a Comment