Tuesday, 31 May 2022

ராமாயண குட்டிக் கதைகள் .....1

 

ராவணனை ராமன் வென்றதும், வானரப்படைகள் இலங்கையிலிருந்து புறப்படத் தயாராயினர். படைவீரர்கள் எல்லாரும் இருக்கிறார்களா என்று சரி பார்க்கும்படி சேனாதிபதியிடம் ராமர் உத்தரவிட்டார். ஒரு வானரம் மட்டும் காணாமல் போயிருப்பது தெரிந்தது.


“சுவாமி.... வசந்தன் என்னும் வானரம் மட்டும் எங்கு சென்றது என்று தெரியவில்லை” என்றார் சேனாதிபதி.

ஆஞ்சநேயரை அழைத்த ராமர், “காணாமல் போன வசந்தனைக் கண்டுபிடிப்பது உன் பொறுப்பு” என்றார்.

ஆஞ்சநேயர் எங்கு தேடியும் வசந்தன் தென்படவில்லை. இறுதியாக எமலோகத்தில் வசந்தன் இருப்பது தெரிய வந்தது.

எமலோகம் சென்ற ஆஞ்சநேயர், “எமதர்மா... வசந்தன் எப்படி இங்கு வந்தான்?” என்று கேட்டார். 

எமதர்மன் பணிவுடன், “சுவாமி... கோபம் கொள்ளாதீர்கள். பூலோகத்தில் உள்ள அனைவரும் உமது புகழைக் கேட்டு மகிழ்கிறார்கள். அதைக் கேட்கும் ஆசை எனக்கும் வந்தது. நான் பூலோகம் வந்தால், என் பார்வை பலத்தால் பலரும் எமலோகம் வர வேண்டிய சூழல் உண்டாகி விடும். அதனால் வசந்தனை மட்டும் வரவழைத்து, உமது அருமை பெருமையைக் கேட்டு மகிழ்ந்தேன்,” என்ற எமன் அவனை விடுவித்தான். ஆஞ்சநேயர் வசந்தனுடன் பூலோகம் வந்து சேர்ந்தார். வானரங்கள் மகிழ்ச்சியில் குதித்தனர்.

ஜெயகாந்தன்

 

“ஏந்துரை? அவர் கிறிஸ்துவரா மாறிட்டாரா?” என்று கேட்டான் துரைக்கண்ணு,

“இல்லை மம்மாதான் கிறிஸ்டியன். அவர் எப்பவும் போல இருந்தார். பிள்ளையார் கோயிலுக்குப் போவார். ஹிந்து பிரேயர் ஸாங்…. எல்லாம் பாடுவார். என்னைக் கூடக் கிறிஸ்தவன் ஆக்கணும்னு மம்மா சொல்லிச்சுது. ‘அதெல்லாம் அவன் இஷ்டத்துக்கே விட்டுடணும்’னு பப்பா சொல்லிட்டார். ஸ்டில் ஐ ஹாவ் நோ எனி ரிலிஜன். எனக்கு மதம் இல்லே.”

“ஆனா சாமி கும்பிடுறியே..” என்று குறுக்கிட்டான் துரைக்கண்ணு.

“எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்”

Monday, 30 May 2022

முயற்சி

 

குரு மரண படுக்கையில் இருந்தார்..

அருகில் அவரின் சீடன் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டான்.

குரு மெல்ல அவனை அழைத்து
சிஷ்யா.. ஏன் கவலைப்படுகிறாய்உனக்காக நான் எப்பொழும் இருப்பேன்கலக்கம் அடையாதே...”

கலங்கிய கண்களுடன் சிஷ்யன் கூறினான்.. 
குருதேவா...
நீங்கள் கூறியபடி ஜாபம் தியானம் எல்லாம் செய்து வருகிறேன்ஆனால் ஆன்மீக உயர்நிலை அடையும் காலம் எப்பொழுது என தெரியவில்லைஎதுவரை எனது ஆன்மீக பயிற்சியை தொடர்வதுஉங்கள் காலத்திற்கு பிறகு யாரிடம் நான் கேட்பது?”

அணையும் ஜோதி பிரகாசகமாக சுடர்விடும் என்பதை போல ஜோதிர்மயமான முகத்துடன் சிஷ்யனை பார்த்தார் குரு..
 “கவலை கொள்ளாதேஇந்த கட்டிலுக்கு அடியில் ஓர் பெட்டி இருக்கிறதுஅதன் உள்ளே உனக்கு பிற்காலத்தில் உபதேசிக்க வேண்டியதை வைத்திருக்கிறேன்...அது அனைத்து விஷயங்களையும் போதிக்கும்எனது உபதேசம் தேவைப்படும் பொழுது மட்டும் பெட்டியை திறந்து பார்எனது ஆசிகள்...” என கூறியபடி அவரின் ப்ராணன் உள்ளே அடங்கியது.

நாட்கள் சென்றன...

தனது ஆன்மீக சாதனையில் தனக்கு பலன் கிடைப்பதாக சிஷ்யனுக்கு தெரியவில்லை.. தியானம் , ஜபம் ஆகியவற்றை விட்டுவிடலாமா என எண்ணினான்..

குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்.

சிஷயன் ஞானம் அடைந்தான்..

நாட்கள் சென்றன...

சிஷ்யன் கூறிய கருத்துகளை மக்கள் ஏற்காமல் கலகம் செய்தனர்.

மீண்டும் குருவின் உபதேசத்தை கேட்க பெட்டியை திறந்தான்..

அதற்கு பின் வரும் காலத்தில் மக்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்...

நாட்கள் சென்றன...

தனது இறுதி காலத்தை அடைந்தான்.. தனது சிஷ்யனை கூப்பிட்டு கூறினான்..

எனது பிரிய சிஷ்யா.. எனது குரு எனக்கு அளித்த உபதேசத்தை உனக்கு அளிக்கிறேன்எனது உபதேசம் தேவையான பொழுது மட்டும் இந்த பெட்டியை திறஎனது உபதேசம் கிட்டும்.”

சிஷ்யனுக்கு சிஷ்யனான பரம சிஷ்யன்.. தனது ஆன்மீக சாதனையில் தோய்வு ஏற்பட்டதுகுருவின் உபதேசம் அறிய பெட்டியை திறந்தான்..

அதில் எழுதி இருந்த வாசகம்...

இன்னொரு முறை


 
முயற்சி செய்

சிஷ்யனுக்கு மட்டுமல்ல நமக்கும் எல்லாவற்றிலும் இந்த உபதேசம் உதவும்..

குருவானவர் உபதேசித்தாலும் நம்முடைய முயற்சி இன்றி சாதிக்கலாகாது.