Friday, 20 May 2022

இதய தெய்வத்திற்கு அஞ்சலி

 



என் வாழ்க்கையின் மிக முக்கிய திருப்புமுனையை அமைத்துக் கொடுத்து, என்னை வளர்த்து, படிக்க வைத்த என் இதய தெய்வம், என் சகோதரி துளசி அவர்களின் கணவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியற்துறை இயற்பியல் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்ற உயர்திரு ஆறுமுகம் அவர்கள் 18-05-2022 மதியம் இறைநிலையோடு இணைந்து புனித ஓய்வு பெறறார்கள். மறைவின்போது அவரின் வயது 85.

எனது சகோதரி துளசி மறைந்த ஐந்தாம் ஆண்டு நினைவுதினத்தில் அவரும் மறைந்தது - அக்காவே அவரை அழைத்து சென்றது போல இருந்தது.

உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது, நினைவு தப்பிவிட்டது என்ற செய்தி கேட்டு நானும், மாலாவும் கோயமுத்தூர் ( கடந்த பல ஆண்டுகளாக தனது இளைய மகள் உமாவுடன்தான் இவர்கள் இருந்தனர்) சென்றோம். மருத்துவமனையில் அவர் காதருகே நாங்கள் வந்திருப்பதை உரக்கச் சொன்னோம். லேசாக  கண்களைத் திறந்து எங்களை பார்த்தார். அடுத்த சிலநிமிடங்களில் அவர் உயிர் பிரிந்துவிட்டது. எங்களை பார்க்கவேண்டுமென காத்திருந்ததுபோல தோன்றிற்று.

இறுதி சடங்குகளை முடித்து திருச்சி திரும்பினோம்.

இருபத்திரண்டு வயதில் நான் M.E. முடித்தபோது அவர் என்னைத் தொடர்ந்து Ph D யில் சேர்ந்து எதிர்காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தராக வரவேண்டும் என விருப்பப்பட்டார்.

இதில் துணைவேந்தராக இனி முடியாது என்றாலும் ஆன்மீகக் கல்வி அளிக்க பல்கலைக்கழகங்களோடு இணைந்து தொண்டு செய்வதில் அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாகவே கருதுகிறேன். 

தற்போது Ph D முடித்து ஆய்வேடு வரும் ஜூன் 10 க்குள் சமர்ப்பிக்க இருக்கின்றேன்.

எத்துனைப் பிறவிகள் எடுத்தாலும் என் நன்றிக்கடனை அடைக்கவே முடியாது. 

Sri, Amma, Viji, Uma, Thulasi Akka & Arumugam     - 1990

பல உறவினர் வீட்டு பையன்களை மாணவர்களாக 
 ( என்னையும் சேர்த்து )     தன்வீட்டில்
 தங்க வைத்து, உணவளித்து,
கல்வி கொடுத்து ஆளாக்கிய மாமனிதர்.
 எனது ஆய்வினை இந்த மஹா மனிதருக்கு சமர்ப்பணம் செய்வதில் மனம் கொஞ்சம் ஆறுதல் பெறுகின்றேன்
வாழ்க அமரர் ஆறுமுகம் அவர்கள் புகழ்! 

No comments:

Post a Comment