Sunday 4 February 2024

உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள்



ஒவ்வொரு ஆண்டும் யுஎஸ் நியூஸ் பவர் தரவரிசை ரேங்கில் வெளியிடப்படும். இந்த ரேங்கிங்கில் சர்வதேச அளவில் எந்த நாடு சக்திவாய்ந்த நாடாக இருக்கிறது என்பது விளக்கப்படும்.

அதன்படி இந்தாண்டிற்கான ரேங்கில் சர்வதேச அளவில் அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக உள்ளது. தொடர்ந்து சீனா அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியால் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்கிறது.

முதலிடம் அமெரிக்கா: இந்த லிஸ்ட் வெறும் ராணுவ பலத்தை மட்டும் வைத்து உருவாக்கப்படுவது இல்லை. ஒரு நாட்டின் தலைமைத்துவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கு, உலகின் மற்ற நாடுகள் உடனான தொடர்பு மற்றும் ராணுவ பலம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ரேங்கிங் தயாரிக்கப்படுகிறது.

இதில் தொழில்நுட்பம், நிதி மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதால் அமெரிக்கா தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஏஐ மற்றும் 5ஜி இல் தொடரும் ஆதிக்கம், அதன் வளரும் பொருளாதார செல்வாக்கு காரணமாக இரண்டாவது இடத்தில் சீனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

புவிசார் அரசியலில் ஆதிக்கம் மற்றும் ராணுவ வலிமைக்குப் பெயர் பெற்ற ரஷ்யா, அதன் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.. இன்னும் கூட உலகின் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய நாடாக ரஷ்யா இருந்து வருகிறது. அடுத்து பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தின் சாம்பியனாக விளங்கும் ஜெர்மனி, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது, இது சர்வதேச அளவில் ஐரோப்பா எந்தளவுக்குப் பொருளாதார வலிமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இங்கிலாந்து மற்றும் தென் கொரியா முறையே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளன, பிரெக்சிட்டிற்குப் பிந்தைய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் காட்டிய வளர்ச்சியே இதற்குக் காரணமாகும். டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பசுமையான ஆற்றலுக்கு முன்னுரிமை அளித்தது ஆகியவை காரணமாக பிரான்ஸ் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மைக்கு முக்கிய பங்களிக்கிறது.

இந்த லிஸ்டில் இந்தியா 12ஆவது இடத்தில் இருக்கிறது. அதன் வலுவான பொருளாதாரம், உலக நாடுகள் உடனான உறவு மற்றும் ராணுவ சக்தி ஆகியவை லிஸ்டில் 12ஆவது இடத்திற்கு வர காரணமாக இருக்கிறது. மேலும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்குப் பிறகு இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய சக்தி எப்படி மாறி வருகிறது என்பதை இந்த லிஸ்ட் நமக்குக் காட்டுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், பொருளாதார ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் சீனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பசுமையான ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது ஆகியவை இந்த ரேங்கில் உலக நாடுகள் டாப் இடங்களில் வரக் காரணமாக இருக்கிறது.

No comments:

Post a Comment