Tuesday, 13 August 2024

MY Ph D VIVA EXAMINAIION ON 09-08-2024



கடந்த வெள்ளியன்று ஆழியாரில் நடைபெற்ற எனது முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் ( பேராசிரியர்கள் & நண்பர்கள் ) கலந்துகொண்டு கேள்விகள் கேட்டு சிறப்பித்தனர். எனது 70வது வயதில் இதனை சாதித்தது எனக்கு மென்மேலும் உற்சாகத்தையும், ஊக்கத்தினையும் தந்துள்ளது.

என் உயிரிலும் கலந்து என்னை வழி நடத்திக்கொண்டிருக்கும் மகரிஷி அவர்களுக்கும், என் பெற்றோர்களுக்கும், என்னை இந்த அளவிற்கு ஆளாக்கிய அமரர் என் சகோதரி மற்றும் அவர் கணவர் துளசி - ஆறுமுகம் இருவருக்கும் இந்த ஆய்வினையும், பெருமையையும் சமர்ப்பிக்கின்றேன்.

மற்றும் என்னை எப்போதும் உற்சாகப்படுத்தி இந்த ஆய்வு சிறந்த முறையில் வெளிப்பட உதவிய அன்பு மனைவி மாலா, மகன் ஸ்ரீராம் இருவருக்கும் நன்றி.

எனது மூத்த சகோதரர், சகோதரி, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மனவளக்கலை அன்பர்கள் அனைவருக்கும் நன்றி மலர்கள்.

இந்த ஆய்வு சிறப்பாக வருவதற்கு துணை நின்ற ஆய்வு நெறியாளர் விஷன் இயக்குனர் முனைவர் பெருமாள் அவர்களுக்கும் மற்ற விஷன் இயக்குனர்களுக்கும் என்னை இந்த ஆய்வினிற்கு தூண்டிய முனைவர் S லெட்சுமணன் அவர்களுக்கும் என் நன்றி மலர்கள்.

இந்த ஆய்வு பற்றிய சிறு குறிப்பு - 

பிரபஞ்ச தோற்றத்திற்கான காரணங்கள் எனச் சொல்லப்படும் நிலைத் தத்துவம் மற்றும் பெரு வெடிப்பு தத்துவம்( Big Bang Theory )  இரண்டும் இன்று பொய்த்துவிட்ட நிலையில் மகரிஷி அவர்களின் தன்மாற்றத் தத்துவம் எப்படி இன்றைய நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளோடு  ஒத்து போகின்றன என்பதை பற்றியும், விஞ்ஞானிகளுக்கு புதிர்களாக விளங்கும் Dark Energy , Dark Matter, Quantum Gravity , Unified Force,  Consciousness, Time போன்றவற்றிற்கும் விடைகள் தந்துள்ளேன் 

அண்டவியல் ( Cosmology ) துறையில் பல நூறு ஆய்வுகளுக்கு எனது ஆய்வு துணை புரியும் என்பது திண்ணம்.


















 https://www.kudoboard.com/boards/S0B62Hjr

1 comment: