ஈழையும் கொங்கையும் எதித்து மின்னுது
ஏருழும் காளைக காத்த வெடைக்குதுவடஞ்சுருட்டி மூலதேங் கூடாத் தொங்குது;
ஆட்டுக்காரன் மேச்சல் ஆட்ட மடக்கியே
குட்டிக்குடுல் தூக்கி மேட்டுக்கு ஓடுறான்;
குளிச்ச கொமரிக கூந்தல் விரிச்சதாய்
கூடித் தொங்குங்கரு மேகத்தப் பாத்துமே!
காட்டு எலிகளும் தம்பொந் தடைக்குது
குள்ளநரி மெல்ல குழிவிட்டு மேலேறி
கூட்டம் நெறஞ்ச பொதர்கண் டோடுது;
வீட்டுச் சொவரடி இண்டு இடுக்களில்
எறும்புக் கூட்டம் மேலே சாரை போட்டேறுது;
தட்டாரப் பூச்சி தரைதட்டிப் பறக்குது
தாழைமடல் வாசம் காத்தில் மெதக்குது;
தங்கப்பெண் மண்குடம் சும்மாடு நழுவியே
தரையில் உடைந்த போல் மழையும் கொட்டுமே!
No comments:
Post a Comment