Saturday, 6 December 2025

MEMES OF THE DAY ( 06-12-2025 )

 















கணவன் மனைவி சண்டையை நிறுத்துவது எப்படி

 


கணவன் மனைவி சண்டையை நிறுத்துவது எப்படி??

நாம் பேசும் விதத்தில் தான் எல்லாம் உள்ளது:

நிகழ்வு 1:

திடீரென கணவன் சொன்ன ஒரு வார்த்தையில் சண்டை நீண்டு கொண்டு போனது....

கணவன்:

உனக்கு வாய் இருக்கிறதாலே எப்படி வேணும்னாலும் பேசலாமா..???? ஏன் காசுல சாப்டுட்டு என்னையே குறை சொல்றியா,திமிரு புடிச்சவளே…

மனைவி:

நான் ஒன்னும் சும்மா உங்க காசுல சாப்பாடு சாப்பிட்டு சும்மா இல்ல,வீடு வேலை பாக்குறேன் ,சமைக்குறேன்,உங்க துணி, கடைக்கு போறதுன்னு எல்லாம் நான் தான். என்னவோ நீங்க மட்டும் தான் எல்லாம் பண்ற மாதிரியும் நான் என்னவோ சந்தோசமா பார்க்,சினிமான்னு போற போல பேசறீங்க, அப்பவே உங்களை எங்க அம்மா சொன்னாங்க ,அத்தை சொன்னாங்கன்னு நான் தான் கேட்கல, உங்களை கல்யாணம் பண்ணிட்டு நான் படுற பாடுஇருக்கே…

இப்படியே சண்டை நீயா நானானு போய்ட்டு இருக்கும்…முடிவு இல்லாம.

********************************************

நிகழ்வு 2:

திடீரென கணவன் சொன்ன ஒரு வார்த்தையில் சண்டையே நின்றுவிட்டது....

கணவன்:

நீ அழகா இருக்கிறதாலே எப்படி வேணும்னாலும், பேசலாமா..????

மனைவி ஒன்றும் பேசாமல்.... சமையலறைக்குள் சென்று சூடான தேநீரும்.!!!

சுவையான பக்கோடாவும்... கொடுத்தாள்.!!!

நீதி:

நாம் நோயுடன் போராடவேண்டும்.!!!

நோயாளியுடன் அல்ல..!!

ஏக பத்தினி விரதன்

 நான் ஏக பத்தினி விரதன் இருப்பவன் ஆமாம் !

உடம்பு முடியல 3 நாளா ஒரே அலைச்சல் ஊசி போட ஹாஸ்பிடல் போனேன்...

ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்கனு நர்ஸ் சொல்லிச்சு...

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்! ஆனால் பளிச் என்று

அதுக்கு வேற ஆள பாருனு சொல்லிட்டு வந்துட்டேன்...

தந்தை

 என் அம்மா எப்போதும் எங்களிடம் கூறுவார்:

தந்தை வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் எதிர் கொள்ளுங்கள், ஏனேனில்

வெளி உலகம் உங்கள் தந்தையை வெறுப்பேற்றி அலைகழிக்கச் செய்கிறது.

தாய் தந்தை வித்தியாசம்???

தாய் 9 மாதங்கள்

தன் வயிற்றில் சுமக்கிறாள்...

வாழ்நாள் முழுவதும் தந்தை தன் தோளில் உங்களை சுமக்கிறார்.. (நீங்கள் உணரமாட்டீர்கள்)

அம்மா உங்களை பசிக்காமல் பார்த்துக் கொள்கிறாள்...

நீங்கள் பட்டினி கிடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் தந்தை கற்பிக்கிறார்.. (உங்களுக்குப் புரிவதில்லை)

அம்மா உங்களை மார்பில் சுமக்கிறாள்.

அவரை நீங்கள் பார்க்க முடியும்..

தந்தை உங்களை தன் முதுகில் சுமந்து செல்கிறார்.. (அவரை நீங்கள் பார்க்க முடியாது)

தாயின் அன்பு, அது நீங்கள் பிறந்ததிலிருந்தே உங்களுக்குத் தெரியும்...

தந்தையின் அன்பு

அது நீங்கள் தந்தையாகும்போது தான் உங்களுக்குத் தெரியும்.. (பொறுமையுடன் இருங்கள்)

ஒரு தாய்... விலைமதிப்பற்றவள்

தந்தை..... காலத்தால் மீண்டும் வழங்க இயலாத சொத்து.

சோம்பேறி

 சும்மா பினாயில் கொடுத்தால் கூட வாங்க கூடாத காலம் இது!

ஒரு ஊர்ல 4 சோம்பேறிங்க வேலை

வெட்டிக்கு போகாம.. சாப்பிட வழி

இல்லாம சுத்திட்டு இருந்தானுங்க.

அவனுங்களுக்கு சாப்பிட வழியே

இல்லாததால புற்களை சாப்பிட்டு

காலத்தை ஓட்டிட்டு இருந்தானுங்க 

ஒருநாள் ஒரு பணக்காரன் அந்த ஊர்

வழியா தன்னோட கார்ல போய்ட்டு

இருந்தான். அப்போ திடீர்னு

ரோட்டுக்கு பக்கமா ஒருத்தன் அங்க

இருக்குற புற்களை சாப்பிட்டு

இருக்குறத பார்த்து ஷாக் ஆகுறான்

தன் டிரைவர்கிட்ட கார நிறுத்த

சொல்லி அந்த புல் சாப்பிட்டு

இருக்குறவன் கிட்ட போறான் அங்க

என்ன நடக்குதுனா 

பணக்காரன் டூ சோம்பேறி

பணக்காரன் ~ ஏன் நீங்க இந்த புற்களை சாப்பிடுறீங்க ?? 

சோம்பேறிகள் ~ எங்க கிட்ட பணம் இல்லை அதான் இப்படி சாப்பிடுறேன் 

பணக்காரன் ~ அய்யோ பாவம் சரி என் கூட என் வீட்டுக்கு வாங்க 

சோம்பேறி ~ ஐயா    நாங்க 4 பேர்

இருக்கோம் அவங்களும் வரலாமா ?

பணக்காரன் ~ சரி கூட்டிட்டு வாங்க

சோம்பேறி ~ ஐயா உங்களை எங்க

உயிர் இருக்குற வர மறக்கவே

மாட்டோம் ரொம்ப ரொம்ப நன்றி

பணக்காரன் ~ அட பரவால்ல ப்பா.. சரி எல்லோரும் கார்ல ஏறுங்க 

( எல்லாரும் கார்ல ஏறிட்டாங்க அதுக்கு அப்புறம் என்னாச்சுனா 

சோம்பேறி ~ ஐயா எங்க 4 பேரையும்

உங்களோட கூட்டிட்டு போறதுக்கு

மறுபடியும் நன்றிங்க ..

பணக்காரன் ~ பரவால்ல இப்படி பசியால வாடிட்டு இருக்குறவங்களுக்கு நான்

உதவி பண்ணுவேன் இனி நீங்க

கவலைப்பட வேண்டியதில்ல ..

( எல்லாரும் இனி நல்ல சாப்பாடு

கிடைக்கப் போகுதுனு ரொம்பவும்

சந்தோஷமா இருக்காங்க. அந்த

பணக்காரனோட வீடும் வந்திருச்சு .

எல்லாரையும் தன் தோட்டத்துக்கு கூட்டிட்டு போன பணக்காரன் இப்ப

பேசுறான் அது என்னனா 

பணக்காரன் ~ நீங்க இனிமே ரோட்டுல வளர்ந்த புற்களை சாப்பிடணும்னு எந்த அவசியமும் இல்லை 

சோம்பேறிகள் ~ ஐயா.. தெய்வமே எங்க

கடவுளே‌‌.. நன்றியோ நன்றி 

பணக்காரன் ~ சரி சரி.. என் வீட்டுக்கு பின்னாடி 5 அடியில புற்கள் நல்லா பெருசா வளர்ந்திருக்கு போயிட்டு இஷ்டத்துக்கும் சாப்பிடுங்க 

சோம்பேறிகள்....!!


பகிர்தல்


 ரொட்டியை எப்படிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்?''

"வெண்ணெய் தடவிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்'' என்றான் ஒரு மாணவன்.

"ஜாம் தடவிச் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்'' என்றான் இன்னொரு மாணவன்.

"பாலுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''

""தேனுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''

""பஞ்சாமிர்தத்தோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்''.

பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

இறுதியாக ஒரு மாணவன் எழுந்து, ""ரொட்டியை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு சாப்பிட்டால்தான்

மிகவும் சுவையாக இருக்கும்'' என்று கூறினான்

ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் அந்த மாணவனை பாராட்டினார்.

மாணவ மாணவிகளும் கரவொலி எலுப்பினர்... கரவொலி அடங்கவே வெகுநேரம் பிடித்தது..

சத்தியம்

 சின்ன வயதில் பண்ணிய சத்தியத்தை மீறி விடுவேன் போல !

என்னங்க சம்மந்தம் இல்லாமல் உளறுறீங்க !

அது வந்து எங்க அம்மா கிட்ட நான் யார் கிட்டயும் எதையும் திருட மாட்டேன் என்று சத்தியம் செய்து இருக்கேன்!

அது சரி ! என் கிட்ட என்ன திருட போற !

வேறென்ன உங்க இதயத்தை தான் !

இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்

 படித்ததில் புரிந்தது -! இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;


கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் முடித்து, பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்ட பிறகு காருக்கு வந்தனர்.

அப்போது ஒரு வயதான அம்மாள் அவர்களிடம் கையேந்தியபடி வர, கணவன் அவளுக்கு பர்சிலிருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான்.

அவள் நிறைய நன்றி சொல்லிவிட்டு போனாள்.

மனைவி,

எதற்கு நூறு ரூபாய்?

கர்ணப் பரம்பரையோ?

அஞ்சோ பத்தோ கிழவிக்குப் போட்டிருக்க கூடாதா? என்றாள்.

கணவன் சிரித்துக்கொண்டு சொன்னான், உனக்கு புடவை நகைகள் எனக்கு துணிகள் செருப்பு பசங்களுக்கு துணிகள் என்று கிட்டத்தட்ட சர்வ சாதாரணமாக லட்சத்தில் செலவு பண்ணினோம்.

ஆனால் அந்த வயசான அம்மா, வயித்துப் பசிக்கு சாப்பிட நம்மைத் தேடி வந்திருக்கா.

நம்மாலே ரெண்டு நேரம் அந்தம்மா சாப்பிடும்போது நம்மை மனசார நினைக்குமே.

அதனாலே நமக்கு புண்ணியம் கிடைக்க வேண்டாம்.

அந்தம்மாவோட பசி போகுது.

மனுஷனுக்கு மூன்று விஷயங்கள் எப்ப வரும்ன்னு தெரியாது.

அது எப்ப வேணும்ன்னாலும் வரலாம்.

அது என்ன தெரியுமா?

Disability - இயலாமை

Disease. - நோய்

Death. - இறப்பு

நமக்கும் இந்த மூன்றும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

நம்மால் முடியும்போது, முடியாதவர்களுக்கு சிறு உதவி பண்றதாலே, கடவுள் நமக்கு அந்த மூன்றையும் தள்ளிப்போடலாம்" என்றான்.

மனைவி கண் கலங்கி நின்றாள்.

எனவே,

மேலே சொன்ன 3ம் நமக்கும் எப்போதும் வரலாம்.

அதுவரை நம்மால் முடிந்த நல்லதைச்செய்வோம்....

PATIENCE




 

PATIENCE




 

PATIENCE





 

PATIENCE




 

6 WAYS POWER OF SILENCE CAN IMPROVE YOUR LIFE