Wednesday, 29 January 2025

சிறுநீரகம் (கிட்னி )

 சிறுநீரகம் (கிட்னி )ரத்தத்தை சுத்தப்படுத்தவும், சிறுநீரின் மூலம் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் செயல்படுகிறது. நமது மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் சிறுநீரக செயலிழப்பு முதல் சிறுநீரக புற்றுநோய் வரை நோய்கள் ஏற்படுகின்றன.

நல்ல பழக்கவழக்கங்களுடன் ஒரு நாளைத் தொடங்கினால், உடல் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரகம் நமது உடலின் முக்கியமான உறுப்பு, உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் சிறுநீரகம் சரியாக வேலை செய்வதை நிறுத்தினால் பல கடுமையான நோய்கள் மனிதனை சூழ்ந்து கொள்கின்றன.

சிறுநீரகம் ரத்தத்தை சுத்தப்படுத்தவும், சிறுநீரின் மூலம் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் செயல்படுகிறது. நமது மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் சிறுநீரக செயலிழப்பு முதல் சிறுநீரக புற்றுநோய் வரை நோய்கள் ஏற்படுகின்றன.

உங்கள் காலைப் பழக்கம் நன்றாக இருந்தால், நீங்களும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். நீங்கள் சிறுநீரக நோயிலிருந்து விலகி இருக்க விரும்பினால், காலையில் இந்த 10 பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

புதிய பழங்களைச் சேர்க்க: சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, காலையில் நிறைந்த புதிய பழங்களை சாப்பிட வேண்டும். உங்கள் காலை உணவில் ஆப்பிள், பெர்ரி அல்லது பப்பாளி போன்ற சிறுநீரகத்தை ஆதரிக்கும் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நீரேற்றத்துடன் இருங்க: காலையில் முதலில் 1 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். ஒரே இரவில் தண்ணீர் இல்லாததால் உடல் வறட்சியடைகிறது. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட நேரம் செயல்படவும் தண்ணீர் மிகவும் அவசியமாகும். நிறைய தண்ணீர் குடித்தால்தான் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக வேலை செய்யும்.

சுறுசுறுப்பாக இருங்க: ரத்த ஓட்டம் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த நடைப்பயிற்சி போன்ற லேசான உடற்பயிற்சியுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.

மூலிகை டீ : காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ அல்லது துளசி டீ போன்ற மூலிகை டீ குடிக்கவும். ஏனெனில் இது ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்-ஐ குறைக்கிறது மற்றும் சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கிறது.

உகந்த உணவுகள்: பெர்ரி, பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தும் உள்ள சமச்சீரான காலை உணவை உண்ணுங்கள்.

யோகா, ஸ்ட்ரெட்சிங் பயிற்சி: சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. காலை வேளையில் புஜங்காசனம் போன்ற யோகா ஆசனங்கள் மற்றும் ஸ்ட்ரெட்சிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க: உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, காலை உணவில் பதப்படுத்தப்பட்ட ஸ்னாக் அல்லது சர்க்கரை தானியங்களை தவிர்க்க வேண்டும்.

வலி நிவாரணிகளைத் தவிர்க்க: மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் வரை வலி நிவாரணி மருந்துகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதை அடிக்கடி சாப்பிடுவது உங்கள் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

காஃபினைக் கட்டுப்படுத்துங்க: காலையில் வெறும் வயிற்றில் டீ மற்றும் காபியைத் தவிர்க்க வேண்டும், காஃபின் அதோகமாக எடுத்துக் கொள்வது சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

காலை உணவில் உப்பைக் கட்டுப்படுத்துங்க: உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். குறிப்பாக காலையில் குறைந்த அளவில் உப்பை சாப்பிடுங்கள். ஏனெனில் இது அசிடிட்டியை ஏற்படுத்துகிறது, இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

ரத்த அழுத்தத்தை கண்காணிக்க: அதிக ரத்த அழுத்தம் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் நமது சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதன் காரணமாக, சிறுநீரகங்களின் செயல்பாடு குறைகிறது. எனவே உங்கள் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

No comments:

Post a Comment