Monday, 24 February 2025

சினம் - நாலடியார்


நெடுங் காலம் ஓடினும் நீசர் வெகுளி

கெடும் காலம் இன்றி பரக்கும் அடும் காலை

நீர் கொண்ட வெப்பம் போல் தானே தணியுமே

சீர் கொண்ட சான்றோர் சினம்”


விளக்கம்

கீழ் மக்களின் சினம் நெடுங்காலம் கழிந்தாலும் தணியாது. மென்மேலும் வளரும். மேன் மக்களின் சினமானது, வெப்பம் அடைந்த நீர் தானாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைவது போல, இயல்பாகவே அடங்கி விடும்.

No comments:

Post a Comment