Thursday, 15 May 2025

MEMES OF THE DAY ( 15-05-2025 )

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க நண்பர் ஒருத்தரு… “போர நிறுத்தலனா உங்க ரெண்டு பேர் கிட்டேயும் வியாபாரத்த நிறுத்திருவேனு சொன்ன பிறகு தான் ரெண்டு நாட்டு போரும் நின்னதா டிரம்ப் பேசிருக்காரு மாப்ள”னு சொன்னாரு.

அவர் சொன்னதை கேட்டதும், “எங்க தெருவுல பக்கத்துல பக்கத்துல இருக்கும் ரெண்டு மளிகை கடைகாரங்ளுக்கும் பயங்கர சண்டை… ‘இப்ப நீங்க சண்டையை நிறுத்தலைன்னா உங்க ரெண்டு பேர்கிட்டயும் மளிகை சாமான் வாங்குறத நிறுத்திடுவேன்”னு சொன்னேன். உடனே ரெண்டு பேர் சமாதானம் ஆயிட்டாங்க மாப்ள”னு சொன்னது தான்.

உடனே இன்னொருத்தர், ”இப்படி தான் எங்க வீட்டுல மூத்தவனுக்கும் இளையவனுக்கும் சண்ட… அப்போ”னு ஆரம்பிச்சாரு…

அதுக்கு அடுத்தவரு… “இப்படி தான் என் வீட்டுல, வீட்டம்மாவுக்கும், அவ தங்கச்சிக்கும் சண்ட”னு இழுத்தாரு..

ரைட்டு… நாட்டுல ஒவ்வொருத்தனும் டிரம்ப் தான் போல’ நெனச்சிக்கிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்.





 

No comments:

Post a Comment