Tuesday, 9 December 2025

சாணக்கியர்

 உங்கள் வாழ்க்கைப் பயணமே மாற வேண்டுமா? இதோ சாணக்கியர் சொல்லும் சூப்பர் வழி!

சாணக்கியர் வாழ்க்கைக்கு தேவையான சில முக்கிய விஷயங்களை நமக்காக அன்றே சொல்லி இருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

மூடர்களுடன் வாதிடுவதும், குறை சொல்பவர்களுக்கு பதில் அளிப்பதும், இழிவானவர்களுடன் சண்டை இடுவதும் புத்திசாலித்தனம் அல்ல. அது முட்டாள்தனத்தின் அடையாளம். இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வதுதான் இன்றைய காலகட்டத்திற்கு மிக அவசியம்.

ஏனென்றால் இன்றைய காலத்தில் நாம் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற எதிர்மறை எண்ணங்கள், மன அழுத்தம், சர்ச்சைகள் இவற்றுக்கு நடுவில் சிக்கித் தவிக்கிறோம். ஒவ்வொருவரும் நம்மைக் கீழே தள்ளவும், குழப்பம் அடையச் செய்யவும், நமது ஆற்றலைத் திருடவும் முயற்சிக்கிறார்கள்.

இந்தச் சூழலில் எப்போது எப்படி புறக்கணிக்க வேண்டும் என்று தெரியாவிட்டால் நீங்கள் மெதுவாக உங்கள் வாழ்க்கையின் உண்மையான பந்தயத்தில் இருந்து வெளியேறி விடுவீர்கள். ஆனால் புறக்கணிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே முன்னேறுகிறார்கள். அவர் மட்டுமே தனது இலக்கில் கவனம் செலுத்தி உண்மையான வீரராக மாறுகிறார்.

சில புறக்கணிப்புகளைப் பார்ப்போம். இவை வெறும் புறக்கணிப்பு அல்ல. மக்கள் உங்களைத் தேடி வரும் புறக்கணிப்பு. ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கும் எதிர்வினையாற்றி தங்களைத் தாங்களே குழப்பிக்கொள்ளும் அந்தக் கழுதைக் கூட்டத்தில் இருந்து விலகி நில்லுங்கள். யார் இந்த திறமையைக் கற்றுக் கொண்டாலும் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றி விடலாம்.

No comments:

Post a Comment