இன்று மார்கழி மாத பௌர்ணமி கூடிய திருவாதிரைத் திருநாள் -
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படும் நாள் -
நான் அங்கு அக்கா வீட்டில் தங்கி எட்டு ஆண்டுகள் படிக்க நேரிட்டதால்
தரிசனத்தை ஒட்டிய திருவிழா கால நினைவுகள் நிறைய இருக்கின்றன.
பிரபஞ்சத் தோற்றத்திற்கான முதல் பூதமான ( பௌதீகமான ) ஆகாஷ் எனப்படும் விண் இங்கு வழிபடும் தெய்வமாக ' சிதம்பர ரகசியமாக '
விளங்குகின்றது. பிரபஞ்ச எழுச்சியை விளக்கும் ஆனந்த தாண்டவமாடும் ( COSMIC DANCE ) நடராஜரின் வலதுபுறம் சுத்த வெளியான ( ABSOLOUTE SPACE ) ரகசியம் எனப்படும் கருப்பு வெளி வணங்கப் படுகின்றது. அந்த இடத்தை தங்கத்திலான பெரிய வில்வ மாலைகளால் அலங்கரித்திருப்பார்கள். இதை ஒரு திரை போட்டு மறைத்திருப்பார்கள். நடராஜருக்கு தீபம் காட்டிய பிறகு இந்த திரையை விளக்கி இங்கும் தீபம் காட்டுவார்கள். இந்த இடத்தை அங்குள்ள பலகணிகள் மூலம்தான் பார்க்க முடியும். இந்த இடத்தின் பெருமையை ரகசியம் என்ற ஒரு சொல்லால் ரகசியமாகவே வைத்திருக்கிறனர். யாரும் விளக்கம் கேட்பதில்லை. தெளிவாக சொல்பவரும் அங்கு இருப்பதில்லை.
( ஆன்மீக ஆனா, ஆவன்னா தொடரில் ரகசியம் விளக்கப்படும் )
தரிசனத்துக்கு முதல்நாள் தேர்த்திருவிழா. தமிழகத்தில் உள்ள பெரிய தேர்களில் சிதம்பரம் தேரும் ஒன்று. பஞ்ச பூத ஸ்தலமாகிய சிதம்பரத்தில் மூலவரே உற்சவராக எடுத்து வரப்பட்டு தேரில் வீதி உலா வந்து அருள் பாலிப்பார்.
நடராஜரும், அம்மனும் தேருக்கு எடுத்துவந்தபிறகு மூலஸ்தானத்தில் சிதம்பர ரகசிய தரிசனம் என்பது சிலருக்கு மட்டுமே கிட்டும்.
இந்தமாதிரி சமயத்தில் வழிபடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது.
இது பிறகு என்னை பல ஆராய்ச்சிகளுக்கு ஈடுபடுத்தியிருக்கின்றது.
தேர் திருவிழா முடிந்தவுடன் நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்துக்கு
எடுத்து செல்லப் படுவார். அங்கு அடுத்தநாள் விடிகாலையில் (மூன்று மணிக்கு ) துவங்கி மஹா அபிஷேகம் நடக்கும். குடம், குடமாக பால், தேன் என பல்வேறு அபிஷேகங்கள் நான்கு, ஐந்து மணி நேரம் நடந்து
பிறகு அலங்காரம் செய்யப்பட்டு மதிய நேரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தை விட்டு வெளியே வரும் நேரம் "தரிசனம்" என கொண்டாடப் படுகின்றது. இதற்கான புராண கதைகள் நிறைய இருக்கின்றன.
திருவாதிரைக் களி , விழாக்கால கடைகள், தரிசனத்துக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், தேர்களை இழுக்கும் ஆனந்தம், இந்த காலகட்டத்தில் வரும் கல்லூரி பரிட்சைகள் என பல்வேறு மலரும் நினைவுகளில்
மறக்கமுடியாத ஒன்று -
நான்காம் ஆண்டு BE படித்தபோது மனநிலை பாதித்த என் இனிய வகுப்பு தோழனை தேர் திருவிழா கூட்டத்தில் control செய்து அழைத்துபோன
துயரம்.
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படும் நாள் -
நான் அங்கு அக்கா வீட்டில் தங்கி எட்டு ஆண்டுகள் படிக்க நேரிட்டதால்
தரிசனத்தை ஒட்டிய திருவிழா கால நினைவுகள் நிறைய இருக்கின்றன.
பிரபஞ்சத் தோற்றத்திற்கான முதல் பூதமான ( பௌதீகமான ) ஆகாஷ் எனப்படும் விண் இங்கு வழிபடும் தெய்வமாக ' சிதம்பர ரகசியமாக '
விளங்குகின்றது. பிரபஞ்ச எழுச்சியை விளக்கும் ஆனந்த தாண்டவமாடும் ( COSMIC DANCE ) நடராஜரின் வலதுபுறம் சுத்த வெளியான ( ABSOLOUTE SPACE ) ரகசியம் எனப்படும் கருப்பு வெளி வணங்கப் படுகின்றது. அந்த இடத்தை தங்கத்திலான பெரிய வில்வ மாலைகளால் அலங்கரித்திருப்பார்கள். இதை ஒரு திரை போட்டு மறைத்திருப்பார்கள். நடராஜருக்கு தீபம் காட்டிய பிறகு இந்த திரையை விளக்கி இங்கும் தீபம் காட்டுவார்கள். இந்த இடத்தை அங்குள்ள பலகணிகள் மூலம்தான் பார்க்க முடியும். இந்த இடத்தின் பெருமையை ரகசியம் என்ற ஒரு சொல்லால் ரகசியமாகவே வைத்திருக்கிறனர். யாரும் விளக்கம் கேட்பதில்லை. தெளிவாக சொல்பவரும் அங்கு இருப்பதில்லை.
( ஆன்மீக ஆனா, ஆவன்னா தொடரில் ரகசியம் விளக்கப்படும் )
சுவாமி, அம்மன் தேர்கள் |
தரிசனத்துக்கு முதல்நாள் தேர்த்திருவிழா. தமிழகத்தில் உள்ள பெரிய தேர்களில் சிதம்பரம் தேரும் ஒன்று. பஞ்ச பூத ஸ்தலமாகிய சிதம்பரத்தில் மூலவரே உற்சவராக எடுத்து வரப்பட்டு தேரில் வீதி உலா வந்து அருள் பாலிப்பார்.
நடராஜரும், அம்மனும் தேருக்கு எடுத்துவந்தபிறகு மூலஸ்தானத்தில் சிதம்பர ரகசிய தரிசனம் என்பது சிலருக்கு மட்டுமே கிட்டும்.
இந்தமாதிரி சமயத்தில் வழிபடும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது.
இது பிறகு என்னை பல ஆராய்ச்சிகளுக்கு ஈடுபடுத்தியிருக்கின்றது.
தேர் திருவிழா முடிந்தவுடன் நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்துக்கு
தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள் |
பிறகு அலங்காரம் செய்யப்பட்டு மதிய நேரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தை விட்டு வெளியே வரும் நேரம் "தரிசனம்" என கொண்டாடப் படுகின்றது. இதற்கான புராண கதைகள் நிறைய இருக்கின்றன.
திருவாதிரைக் களி , விழாக்கால கடைகள், தரிசனத்துக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், தேர்களை இழுக்கும் ஆனந்தம், இந்த காலகட்டத்தில் வரும் கல்லூரி பரிட்சைகள் என பல்வேறு மலரும் நினைவுகளில்
மறக்கமுடியாத ஒன்று -
நான்காம் ஆண்டு BE படித்தபோது மனநிலை பாதித்த என் இனிய வகுப்பு தோழனை தேர் திருவிழா கூட்டத்தில் control செய்து அழைத்துபோன
துயரம்.
today of thiruvathirai??
ReplyDeletei thought it comes after Pongal
சிவராத்திரி comes after Pongal.
DeleteBrings back memories of my "தரிசனம்" experiences. The early morning, the smell of flowers and the rhythmic beats of our temple music has transported me out of this world!!! No kidding.
ReplyDeleteI remember your friend's face very well but not his name.