Monday, 4 November 2013

அறம் செய விரும்பு ....1

தீபாவளி அன்றும், நேற்றும் எனக்கு நிறைய பேர்கள் போன் செய்து " அங்கிள்... உங்களையும், ஆண்ட்டியையும் சிவகுமார்
பேசிய அறம்  செய விரும்பு நிகழ்ச்சியில் பார்த்தேன். " என மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

ஓர் அரை செகண்ட் திரையில் வந்ததிற்கே
இத்தனை பேர் பார்த்து போன் செய்கிறார்களே  என்பதை நினைக்கும்போது TV, சினிமா இவற்றின் தாக்கம் மக்களிடம்  இருப்பதையும், TVயில் வருபவர்களின் popularity பற்றியும்  நன்கு உணர முடிந்தது.

உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் திரு SKM மயிலானந்தன் அவர்களுக்கு மே மாதம் நடைபெற்ற பாராட்டு விழாவில் நடிகர் சிவகுமார் ஒன்றரை மணி நேரம் பேசியதை  அழகாகத் தொகுத்து தீபாவளியன்று Vijay TVயில் வழங்கியிருந்தார்கள். நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு அது ஒரு மனவளக்கலை பாடமாக அமைந்து  உபயோகமாக இருந்தது. இதை sponsor செய்த நண்பர் ராம்ராஜ் காட்டன் MD திரு K R நாகராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி.

போன் செய்த ஒருவர் என்னிடம் கேட்டார் - " சிவகுமார் பேசியது மிக சிறப்பாக இருந்தது. எங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள பேச்சு. ஆனால் அறம் என்ற வார்த்தைக்கு அவர் விளக்கம் சொல்லவில்லையே! நீங்களாவது சொல்லுங்கள்."

நான் அவருக்கு அறம் பற்றி சுருக்கமாக சிலவற்றைச் சொன்னேன். அதை அடுத்த போஸ்டில் சொல்கிறேன்.



மே மாதம் நடைபெற்ற பாராட்டு விழா பற்றி எழுதியதைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

4 comments:

  1. saw the program on Deepavali Day but didn't notice you (don't know, why), so touching and loved it...

    ReplyDelete
  2. whistled when i saw you guys on TV :)

    ReplyDelete
  3. I watched the program the 6 things to be abolished and example of real life story of artist for the anger abolish

    ReplyDelete
  4. Arul, glad to note that you'd listened Sivakumar's speech and learnt many things.

    We celebrate Deepaavali as per the boon given to Naragasuran -

    Naragasuran means Naran + Agam + Asuran i.e., We ( Naran ) have to get rid of the six bad temperaments (six asuras - Greed, Anger, Miserliness, Improper sexual urge, superiority/inferiority complex & vengence) from our agam(mind).

    We give practice for this in our Manavalakkalai.

    Vaazhga valamudan!

    ReplyDelete