Monday 18 November 2013

ஞானியர் இல்லம்

திருச்சி வேதாத்திரி நகரில் அறிவுத்திருக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுவரும் எங்கள் இல்லம் வருகின்ற 2014ம் ஆண்டில் தை மாதத்தில் குடி புக தயாராகிக் கொண்டிருக்கின்றது.

நேற்று அறிவுத் திருக்கோவிலில் நிறைவு பெற்ற மூன்று நாள் தொடர் மௌன நோன்பினை நடத்தித் தந்த 88 வயது பெரியவர் தவத்திரு அருள்நிதி  முதுநிலைப் பேராசிரியர் பொன்னம்பல அடிகளார் இல்லத்தைப் பார்வையிட்டு தீபமேற்றி வாழ்த்தினார்.

இன்றைக்கு கோவையைச் சேர்ந்த முதுநிலைப் பேராசிரியர் தமிழறிஞர் 
86 வயது அருள்நிதி இருசுப்பிள்ளை அவர்கள் இல்லத்தைப் பார்வையிட்டு வாழ்த்தியது மேலும் நிறைவைத் தந்தது.

இன்னும் இரண்டே மாதம்தான் BHEL ல் பணி. பிறகு இந்த புது இல்லத்திற்கு வந்துவிடுவோம். (  பணி  ஓய்வு பற்றி  சென்ற ஆண்டு post பண்ணியதைப்   பார்க்க இங்கே சொடுக்கவும்.)

' ஞானியர் இல்லம் ' என்ற எங்கள் மயிலாடுதுறை கூறைநாடு இல்லத்தின் பெயரையே இந்த இல்லமும் தாங்கி நின்று இங்கு வருபவர்களுக்கு அன்பினையும், கருணையையும் வாரி வழங்க இருக்கின்றது.  

' புதுமனை புகும் '  தேதி முடிவானதும் தெரிவிக்கின்றேன்.
ஞானியர் இல்லம் - கட்டிடச் சிற்பியின் வடிவமைப்பு 

இன்றைய முன்புறத் தோற்றம் 

ஞானியர் இல்லம்  - முகப்பு 

ஞானியர் இல்லம்  - பின்புறம் 

2 comments:

  1. wowww!!! looks AWESOME!!!
    can't wait for next visit!! next time...flying direct to Trichy!! :)

    ReplyDelete
  2. Almost there...with the new house and retirement...looking forward to Mottai Maadi Meetings :)

    ReplyDelete