Thursday, 28 November 2013

ரிச்சர்ட் பிரான்சன்

ரிச்சர்ட் பிரான்சன்  (Richard Branson )

சரியாக படிக்கமுடியாமல் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் இவர். 16 வயதில் ஸ்டுடண்ட் என்ற பத்திரிகை மூலம் தொழில் முனைவோராக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

ஆரம்பத்திலேயே 50,000 பிரதிகளை அச்சடித்து இலவசமாகக் கொடுத்தார். இதற்கான செலவை விளம்பரங்கள் மூலம் சரிக்கட்டினார்.

விமானம், சுற்றுலா, நிதி, ரிடெய்ல், குளிர்பானம் என 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் என இவரது பிஸினஸ் 30 நாடுகளில் பறந்து விரிந்திருக்கிறது.

அடுத்த 10 வருடங்களில் 300 கோடி டாலர் அளவுக்கு சமூக சேவைக்கு பயன்படுத்தப் போவதாக சொல்லி இருக்கிறார்.

தொழில்முனைவு பற்றிய இவரது கருத்துகள் மிக பிரபலம். ஒரு உதாரணம். தொழில்முனைவு என்பது, சொந்தக் காலில் நிற்பதோ, அதிக பணம் சம்பாதிப்பதோ இல்லை. உங்களது உற்சாகமான வாழ்க்கையையே முதலீடு செய்வதுதான்.

பிரச்னை என்று வரும் போது ஓடி ஒளியாமல் மீடியாக்களிடம் நேரடியாகப் பேசி உண்மையை விளக்குவார்.

தன் வாழ்க்கையைப் பற்றி பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார். தொழில் முனைவோர்களுக்கு இவர் சொல்லும் ஆலோசனை ஏற்கெனவே இருக்கும் பிஸினஸை வாங்கவேண்டாம். அந்த நிழலில் இருக்காமல் சொந்தமாக ஆரம்பியுங்கள் என்பதுதான். 

இவரைப் பற்றியும், இவரது புத்தகங்களைப்  படிக்கும்போதும், இவரது பல்வேறு புகைப்படங்களைப் பார்க்கும்போதும் கல்கண்டு தமிழ் வாரப் பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன் நினைவு வருவது நிச்சயம்.

வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய அவரது புத்தகம் சமீபத்தில் படித்தேன். 
அது பற்றி மிகச் சுருக்கமாக  கீழே - 






No comments:

Post a Comment