தத்துவம் – அனுபவம்
குரு தன்னுடைய சிடர்களை அழைத்து, “இங்கு
பலவற்றை கற்றீர்கள். தத்துவம் என்பதும் அனுபவம் என்பதும் வேறுவேறு. நீங்கள்
இறை உணர்வைப் பெற தனித்தனியே பல திசைகளிலும் ஓராண்டு பயணம் செய்துவிட்டு
வந்து என்னிடம் அனுபவத்தைச் சொல்லுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.
பல திசைகளிலும் ஓராண்டுக்குமேல் பயணம் செய்து திரும்பினர்.
முதல் சீடன் சொன்னான், “நான் இறைவனைக் கண்டேன். அவர் எங்கும் எதிலும் வியாபித்துள்ளார்”.
இரண்டாம் சீடன் சொன்னான், “இறைவன் ஒளி வடிவமானவர், என் மனக் கண்ணால் மட்டுமே காண முடிந்தது.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மூன்றாம் சீடன், “எனக்கு ஒரே குழப்பமாயிருக்கிறது திட்ட வட்டமாக இதுதான் இறைவன் என்று ஊகிக்கவோ முடிவு கட்டவோ முடியவில்லை” என்றான்.மற்ற இருவரும் அவனைக் கேலியுடன் பார்த்தனர்.
ஆனால் குரு “நீ சொன்னதுதான் உண்மை, தெரியாததை தெரியாது என்று சொல்வதுதான் ஞானம். நீயே இம்மடாலயத்தை இனி நிர்வாகிக்க தகுதி பெற்றவன்” என்றார்.

No comments:
Post a Comment